பத்துத்தலை இராவணன் (சில தகவல்கள்).கோவில் பிரஹாரத்தை சுற்றிவரும்போது எதேச்சையாக கண்ணில் பட்டார் அந்த சூப்பர் வில்லன். நமக்குதான் வில்லன்களை பிடிக்குமே என்று அங்கிருக்கும் மற்ற ஹீரோக்களை விட்டுவிட்டு அந்த வில்லன் சிலையை நோக்கிச் சென்றேன். பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் ஒரு மூலையில் இராவணன் இருப்பார், சுவாமி வீதி உலாக்களில் அவரே முன்நின்று தேரை செலுத்துவார். இராவணின் பேவரிட் கடவுள் சிவபெருமான் - சிவபெருமானின் டாப் மோஸ்ட் பக்தர் இராவணன். இந்த பந்தமே என்னதான் இதிகாச வில்லனாக இருந்தாலும் அவர் வீதியுலாக்களில் கூடவே செல்லும்படியானது. தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட அந்த சிலையை வெறித்துக் கொண்டிருந்தேன். பின்னால் இருந்து என்னடா யோசனை? என்று அக்கா தலையைத் தட்டினாள். "யார் இந்த இராவணன்? இராவணனுக்கு பத்துத்தலை எப்படி வந்தது? அவரது  பிரம்மாண்டமான இதிகாச அட்வெஞ்சர் வரலாறு என்ன? யாரைக் கேட்கலாம் ? யோசிக்கிறேன்" என்றேன். சரி ஒரு நூறு ரூபாய் கொடு நான் சொல்கிறேன் என்றாள். அதை நீட்டியவுடன் 'நான் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போகிறேன் நீ பொறுமையாக பத்துத்தலையின் கதையை கேட்டு தெரிந்துகொண்டு வா' என கோவிலிலிருந்து அவள் மட்டும் புறப்பட்டாள். பத்துத்தலையைப் பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் என் ஒற்றைத் தலை வெடித்துவிடும் போலிருந்தது.

மன்மதலீலை (சாப்ளின் பகுதி - 4)..1928-ஆம் ஆண்டு சாப்ளினின் இரண்டாவது மனைவி லின்டா கிரே விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல் ஏறினார். பிரபலங்களின் வழக்குகள் என்றால் பத்திரிக்கைகளுக்கு கொழுத்த தீணியாக அமைந்துவிடுவது வாடிக்கையான ஒன்று. அதிலும் பிரபலங்களின் படுக்கையறையை ஆராய்ந்து அசைபோடுவது தனிசுகமே. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று காத்திருந்த பத்திரிக்கைகள் சாப்ளினைப் பற்றி தாறுமாறாக எழுதத் தொடங்கின. ரசிகர்களின் வாய்க்கு மெல்ல நல்ல அவலும் கிடைத்திருந்தது. இதனையும் தவிர்த்து சாப்ளினின் புகழை கெடுக்கவும் சிலர் முயன்று வந்தனர். அவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து அதுவரை இருட்டாக இருந்த சாப்ளினின் அந்தரங்க அறையில் முதன்முறையாக LED பல்பை மாட்டினர்.

Neerja (சினிமா) .1986 -ஆம் ஆண்டு செப்டம்பர் 5 -ஆம் நாள் 379 பயணிகளுடன் "Pan American World Airways" நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானம் "Pan Am Flight 73" மும்பையிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றது. மும்பை விமானநிலையத்தில் புறப்பட்டு பாகிஸ்தானின் விமான நிலையத்தில் தரையிறங்கி அங்கு சூடாக வடை, போண்டா, சமோசா, டி சாப்பிட்டுவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனியின் விமான நிலையத்தை தொட்டு இறுதியில் அமேரிக்காவை அடைவதே அதன் பயண ஏற்பாடாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் தரையிறங்கி புறப்படும் சிறுதுநேரத்தில் விமானத்தில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு அனைவரையும் துப்பாக்கியின் முனையில் சிறைபிடித்தனர். விமானம் தீவிரவாதிகளின் கைக்குள் என அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் அமேரிக்கர்கள், இந்தியாவையும் பாகிஸ்தானையும் மற்ற சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலரும் இருந்தனர். மேலும் 18 விமான சிப்பந்திகளும் அதில் அடங்குவார்கள். அவர்களில் ஒருவர்தான் "நீர்ஜா" (Neerja Bhanot).

Jammin -Yaara (பாடல்)..ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே..
....
....
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்.

- தற்போது அடியேன் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இது (ரஹ்மான் ஸ்பெஷல்). ரஹ்மான் இசையமைக்கும் திரைப்பட பாடல்களின் தொகுப்பிற்கு ஒரு குணமுண்டு அதாவது இசைவெளியீட்டிற்கு பிறகு அந்த தொகுப்பில் இடம்பெறும் ஒரு பாடல் பிரபலமாகும். திரைப்படம் வெளிவந்த பிறகு ஒரு பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த தொகுப்பிலிருக்கும் மற்றொரு பாடலை கேட்கும்போது அடடா! மற்ற பாடல்களைவிட இதில் ஏதோ இருக்கிறதே? எனத் தோன்றும். அதுதான் ரஹ்மானின் மாயாஜாலம்.


முதல் கேபிள் டிவி ஆப்பரேட்டர் (குட்டித் தகவல்).தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பது தொலைக்காட்சி. என்னதான் தொல்லைக்காட்சியாக இருந்தாலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவம் அடுத்த நிமிடம் நமது வரவேற்பரையில் காணக்கிடைப்பது என்பது பிரம்மிக்கத்தக்க விஷயமாகும். அதற்காக 1008 தொலைக்காட்சி சேனல்கள் கேபிள் அல்லது டிஷ் தொழில் நுட்பத்தில் ஒரு சிறிய ஒயரின் மூலம் நம்மைத் தேடி வருகின்றன. இதற்கெல்லாம் "ஜான் வால்சன்" (John Walson Jr) என்பவரின் மனதில் உதித்த சிந்தனையே காரணம். இவர்தான் "Community Antenna Television" (CATV) என்று சொல்லக்கூடிய கேபிள் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தின் சூத்திரதாரி ஆவார்.

வீரம் (என் தமிழ்)புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. அதில் பெரும்பாலான பாடல்கள் பண்டைய தமிழர்களின் வீரத்தையே பறைசாற்றுகின்றன. கவணிக்க இங்கு வீரம் என்பது கல்லைத் தூக்குவதும், காளையை அடக்குவது அல்ல. (அவையெல்லாம் Secondary வீரங்கள். பொழுதுபோக்கிற்காக, அத்தை மகள் மாமன் மகள் மற்றும் சில கண்ணியர்களின் மனதின் Favorete லிஸ்டில் இடம்பிடிக்க செய்யப்படும் புஜபலபராக்கிரம வேலைகள்). இங்கு வீரம் என்பது போர்க்களத்தில் புரிந்த சாகசங்களைப் பற்றியதாகும்.

Moana (சினிமா) .அனிமேஷன் தொழில்நுட்பத்தை பிரசவித்ததிலிருந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வால்ட் டிஸ்னி (Walt Disney) நிறுவனத்தார் செதுக்கிக்கொண்டே வருகிறார்கள். மோனா அதில் உச்சக்கட்ட படைப்பு. லிலோ, மூஸன், அலைஸ், மெகாரா, வெண்டி,  போன்ற வால்ட் டிஸ்னியின் முந்தைய பெண் அனிமேஷன் கதாபாத்திரங்களை கொஞ்சம் ஓரங்கட்டுகிறாள் இந்த மோனா.

பரிசு (என் தமிழ்).அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்டுவந்த குறுநில மன்னன். தகடூர் என்பது தற்போது தருமபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியாகும். அந்த அதியமானிடம் பரிசு பெறுவதற்காக "ஔவையார்" பாடல் ஒன்றை எழுதிக்கொண்டு சென்றார். அந்த காலகட்டத்தில் பரிசு பெறுவதற்காக மன்னனைப் புகழ்ந்து பாடல் எழுதுவது புலவர்களின் வழக்கம். அவற்றை வைத்துக்கொண்டு சில புலவர்கள் தம் பானையை வளர்த்தார்கள், சில புலவர்கள் தமிழை வளர்த்தனர். அந்த பாடல்களைக் கேட்டு சில மன்னர்கள் உள்ளம் குளிர்ந்து பரிசுகளை வாரியிறைத்து கஜானாவையே காலி செய்தனர், சில மன்னர்கள் இதனை தமிழ்த்தொண்டு என நினைத்து பிற்கால சந்ததிகளுக்கு உதவும் என்று சேமித்து வைத்தனர். ஔவையாரும் அதியமானும் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்.


பூ பார்வதி (பாடல்கள்).டைட்டான உடை பொருந்தும் அளவிற்கு வெயிட்டான கதாபாத்திரம் பொருந்தும் வாய்ப்பு பல நாயகிகளுக்கு கிடைப்பதில்லை. அங்கங்களைத் தவிர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவங்களை ரசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைப்பதில்லை. இவை இரண்டும் கிடைக்கப்பெற்ற நல்ல கதைகளும் வெகு குறைவு. இருந்தும் சில திரைப்படங்களில் அரிதாக பூக்கும் "பூ" போல சில நாயகிகள் தோன்றி, ஒரு கதாபாத்திரத்தை நடிப்பால் மெருகேற்றி, கதையோட்டத்தை அழகாக்கி ரசிகர்கள் மனதில் நின்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட நாயகிகளில் ஒருவர்தான் "பார்வதி மேனன்".

இவளே, கானல் - நற்றிணை (என் தமிழ்).நன்கு குளித்துமுடித்துவிட்டு மேக்கப் போட்டுக்கொண்டு Axe அடித்து கமகமக்கும் வாசனையுடன் தலைவன் (ஹீரோ) தலைவியைத் (ஹீரோயின்) தேடி அவள் வசிக்கும் நெய்தல் நிலம் என சொல்லக்கூடிய கடற்கரை பகுதிக்குச் செல்கிறான். முதல் பார்வையில் மனதிற்குள் மணியடித்து மூளைக்குள் பல்பை எரியவிட்டு காதினில் சங்கை ஊதிய அவளைப் பார்க்காமல் அவனால் இருப்புக்கொள்ள முடியவில்லை. அங்கு சுற்றித்திரியும் அவனை தலைவியின் தோழி பார்த்துவிடுகிறாள். சங்க இலக்கிய காதல்களில் தோழி மிக முக்கியமானவள். காதலுக்காக தூது சென்று தலைவியின் நிலையை தலைவனுக்கும், தலைவனின் நிலையை தலைவிக்கும் எடுத்துரைக்கவும், தேவையானபோது இருவருக்கும் அறிவுரை வழங்கவும் என இரண்டு இலக்கிய இதயங்களுக்கிடையே 40 சதவீத கமிஷன் இல்லாமல் பாலம் கட்டுபவள் தோழி. அத்தகைய தோழி வெள்ளையும் ஜொல்லையுமாகத் திரியும் இந்த கொக்கு அந்த மீனைத்தான் தேடிவந்திருக்கும் என அறிந்துகொள்கிறாள்.

என் தமிழ் - புதிய பகுதி அறிமுகம்.முதுகுத்தண்டு பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நவீன கருவிகளைக் கொண்டு மிக எளிமையாக சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவதைப்போல் அறுவைசிகிச்சை செய்து மறுநாளே நீங்கள் போகலாம் என அனுப்பிவைத்தனர் (கவணிக்க அந்த மருத்துவமனை அப்பல்லோ அல்ல). இதுவரை முன்றுமுறை பஞ்சர் ஒட்டியிருக்கிறேன் இந்தமுறை எல்லாம் நல்லபடியாக தெலுங்கு சினிமாவைப்போல் முடிந்தாலும் சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடக்க இயலாமல் போனது. நண்பர் ஒருவர் உடல்நலம் சீரகும் வரை எங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார், எனக்காக அவரது வீட்டில் அவரது மகள் படிப்பதற்காக பயன்படுத்தும் அறையை தனியாக ஒதுக்கியிருந்தார். காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாமல் அசைவின்றி சிலநாட்கள் கிடைக்கப் பெற்ற வரத்தை விட அங்கு அவரது வீட்டில் நேரத்தை கொல்லுவதுதான் பெரும்பாடாக இருந்தது. புத்தகத்தை கட்டித் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. அறையிலிருந்த வாரப்பத்திரிக்கைகள் மற்றும் சில புத்தகங்களை ஓரே நாளில் எந்திரன் ரோபோ கணக்காக முடித்து தூக்கியெறிந்தேன். தமிழ் இலக்கியம் படிக்கும் நண்பரின் மகளின் பாட புத்தகங்கள் மட்டும் அங்கு மீதமிருந்தது. அவைகள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு என எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கிய புத்தகங்கள். வேறு வழியில்லாத அரசியல்வாதியைப் போல் தமிழை கையில் எடுத்தேன். அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களும் மூன்றுவேளை உணவு, முதுகுவலி, முத்தமிழ் மட்டுமே.