இடுகைகள்

September, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

மலரும்-நினைவுகளும்.

படம்

பயனுள்ள சில ஆண்ராய்டு மென்பொருள்கள்

படம்
Ever Note.


அலுவலக உபயோகத்திற்கு மிகவும் பயனுள்ள மென்பொருள். அன்றாட வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ளவும், அதை பகிர்ந்துக்கொள்ளவும் உதவுகிறது. கூடுதலாக வேர்டு, எக்சல், படங்களையும் இணைத்துக்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது. சிறிய படங்கள் வரைய ஸ்கெட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. மீட்டிங் மற்றும் வேலை அட்டவணைகளை உங்கள்கீழ் பனியாற்றுபவர்களுக்கு Work chat எனும் பகுதிமூலம் பகிர்ந்து கொள்ளலாம். செய்து முடிக்கப்பட்ட வேலைகளை ஹைலைட் செய்யவும், குறியிட்டுக்கொள்ளவும் முடியும். அலுவலகம் மட்டுமல்ல தனிப்பட்ட குறிப்புகளையும் வைத்துக்கொள்ளலாம். ரிமைன்டர் வசதியும் உள்ளது. இது உங்கள் மின்னஞ்சல் கணக்கின் மூலமே இயங்கும். மொபைல்போன் மட்டுமில்லாமல், டேப் மற்றும் லேப்டாப்பிலும் இணைத்துக்கொள்ளலாம். உங்கள் குறிப்புகள் ஒவ்வொருமுறையும் பாதுகாக்கப்படும். நீங்கள் உங்கள் மொபைல் மற்றும் கனிணியினை மாற்றினாலும், அனைத்து குறிப்புகளையும் பெறலாம். ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்து அப்டேட் செய்கிறார்கள். ரகசியமாக குறிப்புகளை பாதுகாத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.மிகச்சிறந்த மென்பொருள்.

Cam Scaner.

இது உங்களுடைய டாகுமென்டுகளை, புகைப்படங்களை, க…

Be with me...

படம்
காதலோ,நண்பர்களோ, உறவினர்களோ யாரும் உடனில்லாதபோது நாம் தனிமையை உணர்கிறோம். ஏனெனில் அன்பும், அது தரும் தனிமை உணர்வும் பிரிக்கமுடியாதவை. இளம் வயதில், நடுத்தர வயதில், முதுமையான கடைசி காலத்தில் வயதிற்கேற்ப தனிமை வேறுபடுகின்றன. அன்பைத்தேடும் அந்த தனிமை உணர்வுடன் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நான்குபேரின் கதைதான்  "Be with me ".
உண்மையான அன்பு எங்கே இருக்கிறது என் அன்பே?உன் கதகதப்பான இதயத்தில் - என எழுத்துக்கள் டைப்ரைட்டரில் தளர்ந்த கைகள் டைப் செய்ய திரைப்படம் துவங்குகிறது. கண் தெரியாத வாய் பேசமுடியாத அறுபது வயதான தெரஸா சிறுவர்கள் பள்ளியில் பணிபுரிகிறாள். கனவனை இழந்த அவள் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில் தன் வாழ்க்கை கதையை டைப்ரைட்டரில் எழுதிக்கொண்டிருக்கிறாள்.

காகர் கி ஆக் (குன்றிலிட்ட தீ)

படம்
சில நீண்ட காத்திருப்புகளில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிடுவேன். அப்படி வாசிக்கப்பட்ட சிறு நாவல்தான் குன்றிலிட்ட தீ. கனவன் இறந்துவிட்டால் மனைவி தீக்குளிக்க வேண்டுமென நிலை மாறி கனவனுக்குப்பின் ஒரு ஆண் துணை தேடிக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் திருமணமானாலும்,ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் சேர்ந்து வாழலாமென கூத்தும் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளக்காதலும்,கொலையும் தினம்தினம் நடந்தவண்ணமே இருக்கின்றன. நியாயம்,அநியாயம் எல்லாம் அவரவர் வைத்திருக்கும் பணத்தைப் பொருத்தே அமைகிறது.

அய்யோ! பாவம்....

படம்

வறுத்த மீன் துண்டுகள்......,

படம்

உன் நினைவுகள்..

படம்

அன்றும் -இன்றும்.

படம்
அன்று - இன்று

பச்சைக்கலர் பட்டுப்புடவை (கவிதை).

நாகப்பனை
கல்யாணம் கட்டிக்கொண்டு
எங்க ஊருக்கு வந்து
புள்ளதாச்சியாய்
வயலில் இறங்குபோது
செல்லம்மாள்
எங்க குடும்பத்திற்கு
பரிச்சியமானாள்.
புள்ள தலைசுத்தி போயிருக்கு
டவுனுக்கு போகனும்
என்ற நிலமையில்
வண்டி கொடுத்துவிட்ட
தாத்தாவிடம்,
பிறந்த பிள்ளையோடு
காலில் விழுந்து
இந்த உசுரு சாகும்வரை
உங்களுக்கு அடிமை
என்றபோது
எங்களுக்குள்
ஒன்றாகிப்போனாள்.
நீ வயித்துல இருக்கும் போது
நல்லது கெட்டது முதல்
பிரசவம் வரை பார்த்து
பீ துணி அலசியவள்
என அம்மா சொன்னபோது
எனக்குள்ளும்
அன்பானவளானாள்.
இடியோ!
மழையோ,
புயலோ
அதிகாலை
விழிக்கும் முகம்
அவளுடையது.
கொல்லையைக் கூட்டி,
எச்சில்பாத்திரம் கழுவி,
பக்கத்துவீட்டு சண்டை,
பைப்படி சண்டைகளை
அம்மாவிடம் கொட்டிவிட்டு
சேற்றில் இறங்கப்
போய்விடுவாள்.
ஒரு டீ,
மீந்துபோன சாப்பாடு. 
பொங்கலுக்கு புதுத்துணி,
ஒரு மூட்டை
நெல்லைத் தவிர
வேரெதுவும்
கொடுத்ததில்லை 
எப்போதாவது
வெற்றிலை,
பாக்கு.
போன வருட
பொங்கலுக்கு
புதுப்புடவை கொடுக்கையில்,
பெரியத்தம்பி கல்யாணத்துக்கு
பச்சை கலர்
பட்டுப்புடவை
வேனுமென்று கேட்டது
நினைவுக்கு வருகிறது.
முடிஞ்சா ஒருஎட்ட…

உனக்கேன் அக்கறை.

படம்

நீல வானம்......

படம்

தூரிகை -அவள் ...?

படம்

Axe.

Axe -மட்டும் இல்லையெனில், நாற்றம்பிடித்த தலைமுறையை உருவாக்கியிருப்போம்.-(ஹி.ஹி. இன்னக்கி குளிக்கல)