இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

வேகத்தடை.

படம்

என் Personal Diary2014.

படம்

எளிமையின் சுவை

படம்

அனுக்ஷாவுக்கு வயதாகிவிட்டது

ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பதைவிட,
அனுக்ஷாவுக்கு வயதாகிவிட்டது
என்பதுதான் பெரும் கவலை..

ஹி.ஹி..லிங்கா பாத்தாச்சி...
ஆபிஸ்க்கு ரெயின் கோட் எடுத்துட்டு போகலாமா.? வேண்டாமா.?
குழப்பத்தில் இருந்தேன்..நல்லவேளை ரமணன் டீவியில் வந்தார்.

வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே மிதமான முதல் கனத்த மழை பொழியும்...

...அப்போ.! எடுத்துட்டு போகவேண்டாம்...

செவ்வாய்

படம்

சந்தை

படம்

ஆண்ட்ராய்டு வாழ்வு

Skipe -ல் அம்மாவின் அன்பு.
We chat -ல் தம்பியிடம் சண்டை.
Whatsup-ல் காதலியின் முத்தம்.
Facebook.-ல் நண்பர்களிடம்
அரட்டை...
என
அன்றாட வாழ்வு
ஆண்ட்ராய்டு வாழ்வாக  மாறிப்போனது....    

உன்னோடு நானிருக்கும் ஒரு பகல் பொழுது .......

இதற்குத்தானே  ஆசைபட்டாய்  என
வழிமீது விழி வைத்து
உன் வருகைக்காக
தவித்திருக்க
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

தாயை கண்ட சேயைப்  போல
முகமெல்லாம் புன்னகையுடன்
உன்னை வாசல்வரை வரவேற்று
தேனீர் கொடுக்க 
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

மோட்சாம் இதுவென
உன் மடிசாய்ந்து
பழங்கதைகள் பேசிமகிழ
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

தீண்டல் ,ஊடல் ,
கூடல், முத்தம் என
ஆடை இழுத்து  
உன்னோடு களியாட
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உன்னோடு நான் நனைந்து
கூந்தல் துவட்டி,
ஆடை உடுத்தி,
மேலும் அழுகு சேர்த்து
நான் மட்டும் ரசிக்க
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உணவு செய்து
உனக்கு ஊட்டிவிட்டு,
நீ மறுக்கும் தருணத்தில்
செல்லமாக தலைத்தட்ட
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

சுகமா? சுமையா? 
தாய்மை என
உன்னை தூக்கிச்சுமந்து
வீடு முழுவதும் சுற்றித்திறிய
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....


மார்பு சாய்த்து
தலைக்கோதி,
கதைகள்  சொல்லி,
உன்னை தூங்கவைத்து
நான் தாலாட்ட
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உன் கைப்பிடித்து
உலகம் மறந்து,
இன்று புதிதாய் பிறந்தது போல்
நடைபழக
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

ஒரு ஆடைக்குள்
இரு…

உன்னோடு நானிருக்கும் ஒரு இரவு ..............

படம்

உன்னைத் தீண்டாத நாட்கள் .....

படம்

நீயா? நானா ?

படம்

Silk (புத்தகம்) .

படம்
”திரும்பி வா....இல்லையென்றால் இறந்துவிடுவேன்”

ஈட்டிய பொருள், எடுத்துச் சென்ற பொருட்கள் இவற்றைத் தவிர்த்து அனுபவங்களும் சில மனிதர்களும் மட்டுமே ஒரு பயணத்தின் உண்மையான மிச்சங்கள். அந்த அனுபவங்களும் மனிதர்களும் ஏதோ ஒருவகையில் அடுத்த பயணத்திற்கும் வாழ்க்கைக்கும் முதலீடாகின்றன. இந்த கதையில் வரும் ஹெர்வே ஜான்கர் என்பவனுக்கு அவ்வாறு ஒரு அனுபவம் கிடைக்கிறது. அதன் களிப்பில் மீண்டும் மீண்டும் பயணிக்கிறான். அதன்வழி வாழ்க்கையின் நிதர்சனத்தை கற்றுக் கொள்கிறான். .


எலிவால் தூரிகை....

படம்

எலிவால் தூரிகை....

படம்

Just Grow Up (Mobile Photography).

படம்

extra curricular activity

படம்

லஜ்ஜா

படம்
தமிழில்-அவமானம்

டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது.
இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு இந்துவையும் தேடிப் பிடித்துத் தாக்கின. இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன.

Shine @ Evening (Mobile Photography).

படம்

பிரபல கொலை வழக்குகள்

படம்
எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?

இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.

என் பெயர் மரியாட்டு (புத்தகம்).

படம்
உலகமெங்கும் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கை புத்தகம் ஏராளம்.
விளையாட்டு, சினிமா, தொழில் என சாதித்தவர்களின் கதைகள்தான் இன்று அதிகமாக விற்பனையாகின்றன. புத்தகம் வாசிக்கத் தொடங்கிய புதிதில் அவ்வாறான கதைகளை படித்திருக்கிறேன். அவர்களின் தன்னம்பிக்கை ரசிக்கத் தக்கவையாகவும் செய்தியைப் போலவும் இருந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. புத்தகங்களுக்கான தேடுதல் தொடங்கியபோது எளிய மனிதர்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது அவர்கள் வாழ்வியலோடு கலந்த தன்னம்பிக்கை அனுபவங்களை உணர முடிந்தது.அப்படி வாசித்து உணர்ந்த வாழ்வியல் கதைதான் "The Bite of the Mango". இன்றளவும் தோற்றுப்போகும் சில தருணங்களில் இந்த நிஜக்கதையின் நாயகி மரியாட்டுவை (Mariatu Kamara) நினைத்துக்கொள்வேன். அவள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தில் அவள் பெற்ற தன்னம்பிக்கை என் தோளிலும் தொற்றிக்கொள்ளும். யார் அவள்? அவள் கதைதான் என்ன? அன்று அவளுக்கு என்ன நிகழ்ந்தது? இன்று அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

அன்று.

தென்னாப்பிரிக்காவின் மேற்குகரையோரம் இருக்கும் அழகிய நாடு Sierra Leone. இயற்கை வளங்களுக்கு கொஞ்சமும் பஞ்சம…

Sun Shine (Mobile Photography).

படம்

திருக்கொள்ளிக்காடு..

படம்
பொங்கு சனி...
திருக்கொள்ளிக்காடு..

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார்.

நாகப்பட்டினம்

படம்
சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்

படம்
சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செய்வார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச்
சீக்கிரமாக​வே புரிந்து ​கொள்வார்கள்.

எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புகளாகிய விவசாயப் ​​பெருங்குடி மக்களிடம்தான். இந்த ​பெரும் சக்தி​யை நம்பி​யே நாங்கள் வீட்​டையும் குடும்பத்​தையும் துறந்து , ​வெளிப்ப​டையான ,இந்த ஆயுதப்​போராட்டத்தின் ​கொடியு​​மேந்தி பரந்து விரிந்து கிடக்கும் நம்மு​டைய கிராமப்புறங்களுக்கு பயணத்​தை ​மேற்​கொண்டிருக்கி​றோம். அங்​கே எங்களது விவசாயத்​தோழர்களுடன் இ​ணைந்து எதிரிக​ளை ​​வெல்கிற ஜீவமரணப் ​போராட்டத்திற்கான சக்தி​யைத் திரட்டிக் ​கொண்டு மீண்டும் நாங்கள் ,இந்த இடத்திங்களுக்​கே திரும்பி வரு​வோம். இதில் யாருக்கும் எவ்வித சந்​தேகங்களும் ​தே​வை​யே இல்​லை. இன்று நாங்கள் தற்​போ​​தைக்கு வி​டை​​பெறும் வர்க்க ச​கோதரர்களும் உடன் பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர்களு​மெல்லாம் இ​தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏ​எனன்றால் இந்தத் …

Fall on (Mobile Photography).

படம்

மீத்தேன் வாயுத் திட்டம்

படம்
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.

Green (Mobile Photography).

படம்

மதராசபட்டினம் to சென்னை

படம்
பலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. 

கால நேரம் கிடைத்தால் எழுத நினைப்பவை (விரைவில்).

வெண்ணிற இரவுகள் குபேரன்  பாலைவனப் பூ  நொச்சி  அரை நிலவு  தனித்துவம்  கிழவனும் கடலும்  அவ்வா பாட்டி  காகம்  சுவாரசிய கணக்கு

அடியேன்.

சிங்கம்

படம்
ர்நாடக- தமிழ்நாடு எல்லைப் பகுதியில் காடுகள் அழித்து வருகிறது .
(---- நாளிதழ் செய்தி..)

காட்டைப் பத்தி  ஒரு கதை சொல்கிறேன்....
காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது.

அட! மீதி கதை உங்களுக்கே  தெரியும்..

நவீனம் ......

படம்

மனிதனும் மர்மங்களும்

படம்
'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.

கி.மு கி.பி

படம்
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.

விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட வைக்கிறார்.

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! '

கிமு கிபிமதன்Rs150.00
விகடன்  


மதன் என்கிற கோவிந்தகுமார், தமிழ்நாட்டு இதழாளர், கேலிச் சித்திரக்காரர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 1947ஆம் ஆண்டு திருவரங்கத்தில் பிறந்தார். தற்பொழுது விகடன்  குழுமத்தில் உதவி ஆசிரியராகப…

Finding Nemo

படம்
தேடுதல் சுகமானது, அனுபவங்களை அள்ளித்தருவது, அதுவே வாழ்க்கையை நகர்த்துகிறது. பணம், பொருள், இன்பம் இவற்றிற்கான தேடுதல் ஒருபுறமிருந்தாலும் அன்பிற்கான தேடுதலே உயர்ந்தது. அதிலும் தொலைந்துபோன உறவுகளை தேடுவது என்பது வலியோடு சேர்ந்த சுகமான சுமையாகிறது. அப்படி தொலைந்துபோன தன் மகனைத்தேடி புறப்படும் தந்தை மீனின் கதைதான் "Finding Nemo".

நிலமெல்லாம் ரத்தம் (புத்தகம்) .

படம்
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன?

இரண்டாம் உலகப்போரில் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு உலகமெங்கும் சிதரிக்கிடந்த யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற அடையாளத்தை கொடுத்தவர்கள் பாலஸ்தீனியர்கள். ஆனால் வரம் கொடுத்தவனின் தலையிலே கை வைத்ததுபோல் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை வஞ்சிப்பதேன்?.பல நூற்றாண்டுகால மதப் பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், 1948 ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேல் என்ற தேசம் தோற்றுவிக்கப் பட்டதிலிருந்து இன்றுவரை அங்கு தினமும் குண்டுவெடிப்பும் கலவரங்களும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது ஊர் அரசியல் கட்சிகள்போல தீவிரவாத இயக்கங்கள் புதிது புதிகாக முளைத்துக் கொண்டிருக்கின்றன, இவற்றையொல்லாம் பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டே உலக நாட்டாமைகளும் ஐ. நா சபையும் வேடிக்கை பார்பதேன்.

சொந்த மண்னை இழந்து, பெரும் மக்களை இழந்து, வளங்கள்…

Leaf (Mobile Photography).

படம்

பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்

படம்
கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட் தமிழ் பாடல் என்பது
லோக்கல் பாரிலோ அல்லது
ஹைகிளாஸ் பப்பிலோ பாடப் படுவதாகும்......ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

படம்
ஆன் பிராங்க் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருயூதச் சிறுமி.  தான் இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டாள்.

The Goal (புத்தகம்).

படம்
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம். உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம். தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் உங்கள் பணியிடத்திலும் வாழ்கையிலும் எதிர்ப்படக் கூடியவைதான். அத்தகைய அனுபவத்தை உணர்வை தரக்கூடியது இந்த புத்தகம் "The Goal". 

என் பெயர் மரியாட்டு

படம்
THE BITE of the MANGOஉலகமெங்கும் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கை புத்தகம் ஏராளம்.
விளையாட்டு, சினிமா, தொழில் என சாதித்தவர்களின் கதைகள்தான் இன்று அதிகமாக விற்பனையாகின்றன. புத்தகம் வாசிக்கத் தொடங்கிய புதிதில் அவ்வாறான கதைகளை படித்திருக்கிறேன். அவர்களின் தன்னம்பிக்கை ரசிக்கத் தக்கவையாகவும் செய்தியைப் போலவும் இருந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. புத்தகங்களுக்கான தேடுதல் தொடங்கியபோது எளிய மனிதர்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது அவர்கள் வாழ்வியலோடு கலந்த தன்னம்பிக்கை அனுபவங்களை உணர முடிந்தது.
அப்படி வாசித்து உணர்ந்த வாழ்வியல் கதைதான் "The Bite of the Mango". இன்றளவும் தோற்றுப்போகும் சில தருணங்களில் இந்த நிஜக்கதையின் நாயகி மரியாட்டுவை (Mariatu Kamara) நினைத்துக்கொள்வேன். அவள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தில் அவள் பெற்ற தன்னம்பிக்கை என் தோளிலும் தொற்றிக்கொள்ளும். யார் அவள்? அவள் கதைதான் என்ன? அன்று அவளுக்கு என்ன நிகழ்ந்தது? இன்று அவள் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்?


மாயவலை..

படம்
ஐ எஸ் ஐ எஸ் - இன்று உலகம் சற்று அச்சத்துடன் உச்சரிக்கும் வார்த்தை இதற்குமுன் அல்காயிதா.
9/11, ஆப்கானிஸ்தான் போர், ஒசாமா பின்லேடனின் மரணம் இவற்றிற்குப் பிறகு உலகம் தீவிரவாத அச்சுறுத்தலிருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது மாயாஜால படங்களில் வரும் பூதம்போல் ஒன்றை அழிக்க மற்றொன்று முளைத்திருக்கிறது. யார் இவர்கள்? தீவிரவாத இயக்கம் என அறியப்படும் இவற்களைப்போல் யார் யார் இருக்கிறார்? இன்னும் யார் யார் ? வருவார்கள். இவர்களது நோக்கம் என்ன?. என உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றி மிக விரிவான துள்ளியமான அறிமுகத்தைத் தருகிறது இந்த புத்தகம்.