ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆன் பிராங்க் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருயூதச் சிறுமி. தான் இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டாள்.
மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
ஆன் பிராங்கின் தந்தையார் ஓட்டோ பிராங்க். இவர் ஒரு வணிகராக இருந்தார். ஆன்னுக்கு மர்காட் என்று ஒரு அக்கா இருந்தார். இவர்கள் மறைவிடத்தில் வாழ்ந்த போது இவர்களுடன் இன்னொரு யூதக்குடும்பமும் வசித்து வந்தது. பின்னாளில் மேலும் ஒரு பல் மருத்துவரான யூதரும் வந்து சேர்ந்தார். மொத்தம் இந்த எட்டு பேரும் ஏறத்தாழ இரண்டாண்டுகள் இவ்வாறு மறைந்து வாழ்ந்தனர்.


தவறாமல் வாசியுங்கள் ....
ஆன் பிராங்க் மறைந்து வாழ்ந்த கட்டிடம் இப்போது அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.