நாம் நம்மைக் காண்கிறோம் அவர்களில்...
ஒரு காதலன் தன் காதலியிடம் கேட்டான், நீ என்னை நேசிப்பதை விடஉன்னை அதிகமாக நேசிக்கிறாயா ?
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
என்பதைப் போல ஏதாவது பதில் குறல்(ள்) வருமா என்று.
“என்னை நேசிப்பதைவிட
உன்னையே அதிகம் நேசிக்கிறாயா?
அப்படியென்றால்,
உன் இதயத்தில் நான் எங்கே?”
என தெரிந்துகொள்ள அவன் இவ்வாறு கேட்கிறான்.
அதற்கு அவள் (காதலி) பதிலளிக்கிறள்.
நான் எனக்கே மரித்துவிட்டேன் , உனக்காகவே வாழ்கிறேன்.
என்னிடமிருந்தும்
என் குணங்களிலிருந்தும்
நான் மறைந்துவிட்டேன்.
நான் உனக்காக மட்டுமே இருக்கிறேன்.
என் கற்றல் அனைத்தையும்
மறந்துவிட்டேன், ஆனால்
உன்னை அறிந்ததால்
நான் ஒரு அறிஞனாகிவிட்டேன்.
என் பலம் அனைத்தையும் இழந்துவிட்டேன், ஆனால்
உன் சக்தியால் என்னால் இயலுகிறது.
நான் என்னை நேசித்தால்
உன்னை நேசிக்கிறேன்.
நான் உன்னை நேசித்தால்
என்னை நேசிக்கிறேன்...
If I love myself,
I love you;
If I love you,
I love myself.
இது புகழ்பெற்ற ஜலாலுத்தீன் ரூமி (Rumi) இயற்றிய சூஃபி ஆன்மிகக் வசன காவியமான Mathnawi-யின் 5 ஆம் புத்தகத்தில் வருகிறது. இது வெறும் மனிதக் காதல் பற்றிய கவிதை போல தோன்றினாலும், ரூமியின் சூஃபி சிந்தனையில், காதலன்–காதலி என்ற உருவகத்தின் வழியாக ஆன்மா–இறைவன் ஒன்றிணைதல் பற்றி பேசுகிறது.
ரூமியின் கருத்தை எளிமையாகச் சொன்னால்,
ஒரு கல் சூரியனின் ஒளியில் நீண்ட காலம் இருந்ததால், அது மாணிக்கமாக மாறுகிறது. இப்போது அந்த மாணிக்கத்திற்குள் தெரியும் ஒளி, அதன் சொந்த ஒளி அல்ல, சூரியனிடமிருந்து பெற்ற ஒளி. அதனால் ரூமி ஒரு நுட்பமான கேள்வியை எழுப்புகிறார்:
“மாணிக்கம் தன்னையே நேசிக்கிறதா?
அல்லது அதை மாணிக்கமாக மாற்றிய சூரியனையே நேசிக்கிறதா?”
இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன.
சூரியனை நேசிப்பது
தன்னுள் இருக்கும்
சூரிய ஒளியை நேசிப்பதே.
தன்னை நேசிப்பது
தன்னை மாற்றிய
அந்த ஒளியை நேசிப்பதே.
ஆன்மீக அளவிற்கெல்லாம் போக வேண்டாம். அடிப்படைக்கு வருவோம்
I Mean அன்புக்கு வருவோம்!
அன்பு நம்மை அழிப்பதில்லை;
நம்மை வேறொரு வடிவமாக மாற்றுகிறது.
அன்புக்குரியவரில் நாம் நம்மைக் காண்கிறோம்; நம்மில் அன்புக்குரியவரின் ஒளியைக் காண்கிறோம்.
அந்த அன்புக்குரியவர்
தொடர்பு எல்லைக்கு
தொலைவில் இருந்தாலும்,
அருகில் இருந்தாலும்,
தொடர்பிலே இல்லையென்றாலும்,
தொல்லையாக இருந்தாலும்,
நாம் நம்மைக் காண்கிறோம் அவர்களில்...