இரண்டாம் உலகப்போர்.
1939 முதல் 1945 வரை மொத்தம் 6 வருடங்கள்,
அச்சு நாடுகள் (ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்), நேச நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா) என இரண்டு மெகா டீம்கள்,
அடால்ஃப் ஹிட்லர், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின், பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், ஹிரோஹிட்டோ போன்ற நட்சத்திர வீரர்கள்,
லண்டன், போலந்து, பிரான்ஸ், இத்தாலியில் முதல் சுற்று, பேர்ல் ஹார்பர், ஸ்டாலின்கிராட், டி-டே, போன்ற இடங்களில் லீக் மேட்ச். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் செமி பைனல், ஜெர்மனியின் பெர்லினில் பங்கருக்குள் பைனல்.,
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மனியின் ஹிட்லர் ஸ்வஸ்டிக் சுழி போட்டு தொடங்க , 1945 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா குண்டு போட்டு முடிக்க, கோடிக்கணக்கான மக்களை காவு வாங்கி, உலகம் விளையாண்ட மிகப்பெரிய விளையாட்டு
இரண்டாம் உலகப்போர்.
இந்த இரண்டாம் உலகப்போர் புதிய உலகிற்கு வழியை கண்டு பிடிக்கவும், தொழில்புரட்சிக்கு விதை போடவும், மனித நாகரிகத்தை வளர்க்கவும், இந்த ஏரியாலா யார்ரா கெத்து? யார் பெரியவன் என தெரிந்து கொள்ளவும் உதவியது. இந்த உலகப்போர் வரைபடம் மட்டுமல்லாது, உலகின் வரலாற்றையே மாற்றியது எனலாம். அத்தகைய இரண்டாம் உலகப்போரைப் பற்றிய டிவி தொடர்தான்,
World War II with Tom Hanks.
இந்த தொடர் மொத்தம் 20 எபிசோடுகளை கொண்டிருக்கிறது.
1. The Beginning — தொடக்கம்
2. Blitz — பிரிட்டன் மீதான தாக்குதல்
3. Barbarossa — சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பு
4. Pearl Harbor — அமெரிக்க மீது மீது ஜப்பான் தாக்குதல்
5. The War at Sea — கடற்போர்
6. Guadalcanal — Pearl Harbor-க்குப் பிறகு தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் முன்னேற்றம்.
7. Darkness Falls — இருள் சூழ்கிறது.
8. Operation Torch — வட ஆப்பிரிக்காவில் போர் தாக்கம்
9. Secrets and Lies — ரகசியப் போர் (உளவு மற்றும் தகவல் போர்)
10. Stalingrad — சோவியத் எண்ணெய் வளங்களை ஜெர்மனி கைப்பற்றும்முயற்சி.
11. Italy — இத்தாலி
12. Battle for the Skies — விமானப் போர்
13. Overlord — D-Day
14. Long Road to Tokyo — ஜப்பான் போர்
15. Home Front — போரின் தாக்கம்
16. Resistance — எதிர்ப்பு இயக்கங்கள்
17. No Surrender — Pacific War
18. Last Days of the Reich — பெர்லின் வீழ்ச்சி
19. Endgame — இறுதிக்கட்டம்
20. Fallout — போருக்குப் பிந்தைய உலகம்
அது 1939-ல் ஜெர்மனி, போலந்தை ஆக்கிரமித்ததில் தொடங்கி, பேர்ல் ஹார்பர், ஸ்டாலின்கிராட், டி-டே, பெர்லீன் வீழ்ச்சி, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் போருக்குப் பிந்தைய அணு யுகம் வரை இரண்டாம் உலகப்போரின் முழு வரலாற்றையும் தொடர்ச்சியாகச் சொல்கிறது. ஒவ்வொரு எபிசோடும் 40-45 நிமிடங்கள் நீள, புகழ்பெற்ற நடிகர் டாம் ஹேங்ஸ் தொகுத்து வழங்குகிறார். உலகப்போரைப் பற்றிய பல தொடர்கள் வெளிவந்திருந்தாலும், இந்த தொடர் பல அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைந்ததாக இருக்கிறது. குறிப்பாக Battle for the Skies என்ற ஐரோப்பாவின் வானில் Allied விமானப்படைகளுக்கும் German Luftwaffe-க்கும் இடையே கடுமையான விமானப் போர் பற்றிய பகுதியும், ஜப்பானை எதிர்த்து தீவிலிருந்து தீவாக முன்னேறும் Long Road to Tokyo என்ற பகுதியும் பிரம்மிக்க வைக்கிறது. இந்த தொடரில் இரண்டாம் உலகப்போரின்போது எடுக்கப்பட்ட 16mm/35mm film, photographs, newsreels, military footage போன்ற ஆயிரக்கணக்கான archival materials பயன்படுத்தப்பட்டுள்ளன. பழைய கருப்பு வெள்ளை footage-ஐ வெறுமனே “colour filter” போடாமல், வரலாற்று ஆய்வின் அடிப்படையில் photorealistic colourisation செய்துள்ளனர். பழைய போர் பதிவுகளில் பெரும்பாலும் ஒரிஜினல் சவுண்டு இருக்காது அல்லது மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இந்ததொடரில் சவுண்டு எபெக்ட்டை புதிதாக உருவாக்கி sound design + re-recording mix செய்துள்ளனர். ஹோம் தியோட்டர் மற்றும் உயர்தர ஒலியமைப்பு கொண்ட டீவியில் பார்க்க புதுவித அனுபவத்தை தரும். மேலும் 20 மணி நேரத்துக்கும் அதிகமான வரலாற்றை வெறும் chronology-ஆக காட்டாமல், ஒரு cinematic story போல அற்புதமாக எடிட்டிங் செய்துள்ளனர்.
இந்த தொடர் வெறும் போர் நிகழ்வுகள் மட்டுமல்லாது ஹிட்லர், முசோலினி, சர்ச்சில், போன்ற தலைவர்களின் முடிவுகள், பொதுமக்களின் அனுபவங்கள், Holocaust என்ற யூத அழிப்பு, உளவு நடவடிக்கைகள் மற்றும் போரின் தாக்கங்கள், மனிதச் செலவு ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த தொடர், ஹிட்டரி தமிழ் சேனலில் திங்கள், செவ்வாய் இரண்டு தினங்களில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. Prime வீடியோவில் காணக்கிடைக்கிறது.
இந்த தொடர் மிகப்பெரிய வரலாற்று அனுபவம் மட்டுமல்லாது, ஆவணமாகவும் இருக்கும் என்பது சந்தேகமில்லை...