இந்த விலையேற்றம் எப்படி இருக்கும்?...

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. Money Plant வளர்வது மாதிரி. Also இவை Money Planned.
...
Already கேஸ் விலை உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ... ,

உணவிலிருந்து உண்டியல் வரை அனைத்து பொருட்களின் விலையும் நிச்சையம் உயரும்.

So..Get Ready 

இந்த விலையேற்றம் எப்படி இருக்கும்?

கடந்த காலங்களை ஒப்பிடும்போது, 2000 நோட்டு ரிலீஸ், கொரோனா தொற்று, GST குளறுபடி, டாலர் விளையாட்டு போன்ற தருணங்களில் விலைவாசி உயர்ந்திருந்தது. அதன் தாக்கம் தெரியாமலே கடந்திருக்கிறோம். விலைவாசி உயர்விற்கு காரணம் சொல்வார்களே தவிர, அது எத்தணை சதவீதம் உயர்ந்திருக்கிறது என யாரும் சொல்வதே கிடையாது. நிதியை கையாள்பவர்கள் உட்பட பொருளாதார புலி, பொருளாதார சிறுத்தை, காண்டாமிருகம், அணில், தவளை, பொருளாதார வெட்டுக்கிளியாக இருப்பவர்கள்கூட, அதனைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் இந்த சதவீதத்தை வைத்து விலை உயர்வை சரியாக கனிக்க முடியும். 

டீசல் விலை உயர்வுக்கு வருவோம்.

டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய் விற்கிறது என வைத்துக்கொள்வோம். அது 108 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அப்படி என்றால் 8% விலை உயர்வு. டீசல் விலை உயர்வினால் ஒரு பொருளின் விலை 100 ரூபாய் என்றால், அது 108 ரூபாயாக உயர்ந்திருக்க வேண்டும். Side effect என இருந்தால் கூட 110 லிருந்து 120 ரூபாய் விலை உயர வேண்டும். ஆனால் நமது நாட்டில் நடப்பதே வேறு. அந்த பொருளின் விலை 130 ரூபாயாக உயர்ந்திருக்கும் (30%). அதற்காக இடையில் விளையாடுபவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்கள் விலை உயர்வு என்ற கற்களை அடுக்கி, அந்த பக்கம் என்ன இருக்கிறது என தெரியாத அளவிற்கு நம் முன் ஒரு பெரிய சுவரை கட்டியமைத்து விடுவார்கள். அதன் நீள அகல உயரத்தை அளந்து பார்க்காமலும், சுவற்றை தாண்டிப் பார்க்காமலும் விலையேற்றத்தை நாமும் ஏற்றுக் கொள்வோம். அதனோடு மட்டுமல்லாது விலையேற்றத்திற்கு பின்பு ஒரு பொருளின் தரமும் குறைந்துவிடும். அதைப்பற்றியும் நாம் சிந்திப்பதே கிடையாது. விலையேற்றத்தோடு செயற்கையான தட்டுப்பாடு என்ற மற்றொரு சுவரும் நம் கண்ணை மறைக்கும். தற்போதும் அவ்வாறே நிகழ வாய்ப்பிருக்கிறது. இந்த நேரத்தில்  தீப்பெட்டி கதை நினைவுக்கு வருகிறது. 

100 குச்சிகளை கொண்ட ஒரு தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாய் இருக்கிறது.

விலையேற்றத்தால் அந்த தீப்பெட்டியின் விலை 2 ரூபாய் ஆக்கப்படுகிறது. 

அதனோடு ஒரு பெட்டியில் இருக்கும் குச்சிகளின் அளவு 100 என்ற எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைக்கப்படுகிறது. 

தற்போது 50 குச்சிகளை கொண்ட அந்த தீப்பெட்டி இரண்டு ரூபாய் விற்கப்படுகிறது.

இதனோடு நிறுத்தினால் கூட பரவாயில்லை. அடுத்ததாக
 
மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் தீக்குச்சியின் முனையில் தடவப்படும் மருந்தின் அளவு முன்பு இருந்ததைவிட சற்று குறைக்கப்படுகிறது. 

தீப்பெட்டி உரசும் இடத்தில் அட்டையில் தடவப்படும் மருந்தின் அளவும் குறைக்கப்படுகிறது. 

அதேபோல் தீக்குச்சியின் அடிப்பகுதியான மரக்கட்டையின் தடிமனும் குறைக்கப்படுகிறது. 

இதனால் தீக்குச்சியின் தரம் குறைகிறது. ஒரு தீக்குச்சி பயன்படும் இடத்தில் இரண்டு தீக்குச்சிகளை உரச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

தீபம், மொழுகுவர்த்தி, ஊதுபத்தியை பற்றவைக்கவோ, அல்லது பீடி சிகரெட்டை பற்றவைக்கவே, முன்பு ஒருவருக்கு மாதம் 4 தீப்பெட்டிகள் தேவைப்படுகிறது என வைத்துக்கொள்ளோம், விலையேற்றத்தால் தற்போது 12 தீப்பெட்டிகள் தேவைப்படும் (4 ரூபாய் செலவிலிருந்து 24 ரூபாய் செலவு). 

இது ஒருபுறமிருக்க, ஆஹா அப்படியென்றால் அந்த தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை பல மடங்கு இலாபம் எட்டி, அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களின்  வாழ்க்கையும், வருமானமும் உயர்ந்திருக்க வேண்டுமே என்று நினைத்தால், அதுவும் தவறு.  

இந்த தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் முன்பு 100 நபர்கள் வேலை செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவை ஏற்பட்டததால் அந்த தொழில்சாலையில் வேலை செய்பவர்கள் 80 நபர்களாக முதலில் குறைக்கப்படுவார்கள், 100 நபர்கள் செய்த வேலையை 80 நபர்கள் செய்ய, அவர்களது சம்பள உயர்வு, ஊக்கத்தொகை போன்றவை நெருக்கடி காலத்தைக் கணக்கில்கொண்டு அவர்களுக்கு கிடைக்காமல் செய்யப்படும். ஒரு தீப்பெட்டியிலே இத்தனை பொருளாதார சூழ்ச்சிகள் இருக்கிறது. 

Tragedy ...

இன்றைய விலையேற்றத்திற்கு போர் காரணம் என  சொல்லப்படுகிறது. 

போர் உயர பேரல் உயரும்
பேரல் உயர எண்ணெய் உயரும்
எண்ணெய் உயர எல்லாம் உயரும்
எல்லாம் உயர கோன் உயர்வான்
கோன் உயர சீமான் உயர்வான்...

போர், நெருக்கடி நிலை, பொருளாதார மந்தம், நோய்த் தொற்று இவையெல்லாம் தற்காலிகம், அதிலிருந்து மீண்டுவருவோம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அனைத்தும் நம் மீது திட்டமிட்டே திணிக்கப்படுகிறது. மாற்றம் உட்பட அனைத்து சுமையும் சாமானியனான நம் தலையிலே தூக்கி வைக்கப்படுகிறது. 

சுமக்கத் தயாராவோம்... 

The common man is the great pillar of society, the one upon whose shoulders the world rests...