பல நாட்களுக்கு இந்த மழை கொட்டித் தீர்க்கும்...

நீண்ட தேடுதலுக்குப் பிறகு 
முத்துப் போல் 
ஒரு வாய்ப்பு கிடைத்தால்,

நம்மை உதாசீனப் படுத்தியவர்களுக்கு முன் 
நிமிர்ந்து நிற்க 
சந்தர்ப்பம் கிட்டினால்,

பல தோல்விகளை மறைக்கும் படி மலையளவு 
வெற்றியடைந்தால்,

அவமானத்தை துடைக்க 
ஒரு கருவி பெற்றால்,

நல்ல கலைஞனுக்கு 
நல்ல மேடை அமைந்தால்,

பாம்பு தீண்டிய பரமபதத்தில் 
ஏணி ஏற 
பகடை விழுந்தால்,

பல வருடங்கள் பிரிந்தவர்கள் சந்திக்க நேர்ந்தால்,

கோப, துக்க, 
சந்தோச, அழுகை உணர்சிகளை 
உள்வாங்குபவர் உடனிருந்தால்,

நீண்ட கோடைக்குப் பின் வரும் 
முதல் மழைப் போல உள்ளிருப்பதையெல்லாம்
கொட்டி தீர்த்து விட வேண்டும்...

(அதைத்தான் சின்மயி செய்திருக்கிறார்)

முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ.....



மேடையில் பாடும் சினிமா பாடல்களை ரசிக்கவே கூடாது என்ற எண்ணமிருந்ததை மாற்றி ஏதோவொரு பைத்தியக்காரத்தனத்துடன் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றிக் கொண்டே இருக்கிறது... 

ஜானு தம் தாரோ தம் தம்

(ஆஹா.. இது கொஞ்சம் புதுசு)

தீம் தோம் த
தீன் தனா தோம்
தனா தோம்
தீம் தனா தோம் தனா
தீன் தனா தோம்

(பழசானாலும் தினுசு)

ஓ பாலை நிலத்தில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்
மோக பனி போர்வையில்
கரம் கோர்க்கையில்
காதல் சொல்வேன்
காதில் காதல் சொல்வேன்

(கோரஸ்,  ஹோ ..ரஷ்...)

இடையில் வரும்

சித்தாரும் 
வீணையும் 
வயலினும்

(சம்கீலாவிற்கு பிறகு லவ் யூ ரஹ்மான் சார்)

என்னோடு உன்னை
ஒன்றக்கும் வரை
என்ன செய்தும் வலி
தீரவில்லை

(நீ என் ஹார்ட்டு,
ஸ்கூட்டிய ஓட்டு,
இதுதான் பாட்டு,
என எழுதத் தெரியாத கவிஞன் 
சிவா ஆனந்த்)

இறுதியில் 

இன்னும் வரும் எந்தன் கதை....

பல நாட்களுக்கு இந்த மழை கொட்டித் தீர்க்கும். பல கசடுகளை வெள்ளத்துடன் அடித்துச் செல்லும்...