உள்ளூர் குருவிகளுடன் ஒரு வலம்.
என்னதான் வெளியூர் ஆட்டக்காரர்கள் நல்லா ஆடினாலும் உள்ளூர் ஆட்டக்காரர்களையும் மதிக்கனும் இல்லையா ! அதனால் உள்ளூர் குருவிகளுடன் ஒரு வலம். இதில் மாங்குயிலை பார்த்தது ஏக சந்தோசம்.

கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான்
(Grey-headed canary-flycatcher)
காட்டுக் கீச்சான் (Common woodshrike)
மைனா (Common myna)
கருஞ்சிட்டு (Indian robin)
பனங்காடை (Coracias benghalensis)
புதர் வானம்பாடி (Indian bush lark)
செம்பழுப்பு வால் காக்கை (Rufous Treepie)

மாங்குயில் (Eurasian golden oriole)
வெண்புருவக் கொண்டலாத்தி (White-browed Bulbul)
வைரி (Shikra)
செங்குதக் கொண்டைக்குருவி (Red-vented Bulbul)
தோட்டக்கள்ளன் ("Indian Pitta)
செம்பருந்து (Brahminy Kite)
நீலக்கண்ணி (Blue-faced malkoha)
கருந்தலைக் குயில் கீச்சான் (Black-headed cuckooshrike)
சிட்டுக்குருவி (House sparrow)
தவிட்டுக் குருவி (Yellow-billed babbler)
Grey tit (நீலகிரி சிட்டு)
வெண்மார்பு மீன்கொத்தி(White-throated kingfisher)
சிவப்புமீசைச் சின்னான் (Red-whiskered bulbul)