கடலின் வான்வழி பாலே நடனக் கலைஞர்கள்.
கடலோர அடிவானத்தின் இந்த சிறகுகள் கொண்ட தோழர்கள் உங்கள் எஞ்சியிருக்கும் சாண்ட்விச்களுக்காக பிச்சை எடுக்கும் தோட்டிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்...
சிலருக்கு அவை தொல்லை; மற்றவர்களுக்கு அவை சுதந்திரத்தின் சின்னங்கள்...
அவை கடலின் வான்வழி பாலே நடனக் கலைஞர்களைப் போன்று இருக்கின்றன...
சீகல்களை புகைப்படம் எடுக்கும்போது மகிழ்ச்சியும் துக்கமுமாக நினைவுக்கு வந்த மூன்று விசயங்கள் இவை.
மேலும் இந்த கவிதையும்.
ஓ! தனிமையான கடற்புறாவே,
இலக்கற்ற மற்றும்
பரந்த உனது அலைச்சல்கள்
என்றென்றும் வீணாக
கடலின் மிதக்கும்
பனிக்குப்பைகளுக்கு மேல்
ஓய்வு தேடிக் கொண்டிருக்கிறாய்,
உன் துணை எங்கே?...
உன் கூடு எங்கே?...

