1984 - ஜார்ஜ் ஆர்வெல்.

விலங்குகளை கதாபாத்திரமாக வைத்து, ரஷ்யாவின் கம்யூனிச ஆட்சியை பகடி செய்து, விலங்கு பண்ணை என்ற நாவலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெலின் கடைசி படைப்பு 1984. இதிலிருப்பதும் அரசியல் நையாண்டி நிறைந்த கதைதான். அவரது காலத்திலிருந்து 1984 வருடம் உலக அரசியல் எப்படி இருக்கும் என்பதையே நாவல் விவரிக்கிறது. கற்பனையான ஒரு நாடு, அதனை ஆட்சி செய்யும் ஒரு சர்வாதிகாரி, அவரின் கொள்கைகள், அவரது கட்சி, மற்றும் குடிமக்கள் என நாவல் இன்றைய அரசியலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. ஆட்சி செய்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும்?.. ஆட்சி செய்பவர்களுக்கு பனிந்து நடந்தால் என்ன கிடைக்கும்?.. என்பதே நாவலின் முக்கிய கரு. மிகவும் ரசித்ததோடு மட்டுமில்லாமல் உள்ளுக்குள் உணரும்படியாக வாசித்த அந்த நாவலின் வரிகள் சில மயிலிறகு பக்கங்களாய்... 
போர் என்பது அமைதி
சுதந்திரம் என்பது அடிமைத்தனம்
அறியாமையே பலம்...
எதிர்காலமும் 
இந்தகாலம் போலவே
இருந்துவிடலாம்...
புத்தி தடுமாறாமல் இருந்து விடுவதே
மனிதப் பண்பு...
பழங்காலத்தைக் கட்டுப்படுத்துபவன் எதிர்காலத்தையும் 
கட்டுப்படுத்துகிறவன் ஆகிறான்...
நேரடியாகப் பொய் சொன்னால் 
அதை உலகம் ஏற்காது...
எப்போதும் ஏதாவது ஒன்று அகப்படாதிருப்பது என்பது சாதாரணமான நிலைமைதான்...
ஆசைப்படுவதே 
சிந்தனை குற்றம்தான்... 
சுய உணர்வு ஏற்படும் வரையில் 
புரட்சி செய்ய முடியாது. 
புரட்சி செய்யும் வரையில் 
சுய உணர்வு வராது..
கடந்துபோன காலத்தை 
எப்படி மாற்றுகிறார்கள் 
என்று தெரிகிறது. 
ஏன் என்றுதான் தெரியவில்லை... 
இரண்டும் இரண்டும் நான்குதான் 
என்று சொல்லச் சுதந்திரம் தேவை. 
அதை ஒப்புக் கொண்டுவிட்டால், மற்றதெல்லாம் தானே தொடரும்... 
தோல்வி தவிர்க்க முடியாதது என்றாலும் 
ஒரு தோல்வியைவிட
வேறொருவிதமான தோல்வி 
நல்லது... 
வெள்ளை என்பது 
வெள்ளை மட்டுமல்ல 
கருப்பும் தான்...
புரட்சியைக் காப்பாற்ற 
சர்வாதிகாரி வருவதில்லை 
சர்வாதிகாரி வருவதற்குத்தான் 
புரட்சியே நடக்கிறது...
உடல் மனம் இரண்டையும் வெற்றிகொள்ளும் சக்திதான் 
சக்திகளில் பெரியது...