நேபாளி பாய்ஸ்.
தன்னிருப்பை முன்னிலைப்படுத்தும் ஸ்டேடஸ், ரீல்ஸ் கலாச்சாரத்திற்கு பிறகு விடுமுறை நாட்களில் மலைப்பிரதேசங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள் அதிகமாகிவிட்டனர். மலைகளில் சாகசங்களை நிகழ்த்தவும் மலையேற்றங்களில் ஈடுபடவும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். Trekking, Mountaineering என சொல்லப்படுகிற மலையேற்றத்திற்கு உடல் வலுவும், தைரியமும், பயிற்சி அனுபவமும், நுட்பமும் தேவை. இந்த அடிப்படைகளை மறந்தால் பெரும் விபத்துகளை சந்திக்க நேரலாம். நமக்கெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் கதை நன்றாகத் தெரியும். இந்த குறும்படமும் அத்தகைய கதையை கொண்டதுதான். இவர்கள் நேபாளி பாய்ஸ்.
கதைப்படி நேபாள நாiட்டை சேர்ந்த நண்பர்கள் இருவர் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். அடர்ந்த காட்டின் வழியே அவர்கள் பயணிக்க, குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கின்றனர். பயணம் தொடர அவர்கள் தேர்ந்ததெடுத்த வழியில் எதிர்பாராத ஒன்றை எதிர்கொள்கின்றனர். அது என்ன? என்பதான் குறும்படத்தின் மீதிக் கதை.
இந்த குறும்படம் பிடிக்க காரணம் கதைக்களமான மலையும் காடும் நிறைந்த குறிஞ்சி நிjலம்.
கார் எதிர் கானம்"
"இலை புதை பெருங் காட்டு"
"முள் உடுத்து எழு காடு"
"வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்"
"மலையும் சோலையும் மாபுகல் கானமும்"
என இலக்கியங்களில் வர்ணிக்கும் மலை காடு. அதனை நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை முதன்மையாகக் கொண்டு ஒளிப்பதிவு செய்தவிதம் அற்புதமாக இருக்கிறது. அமைதியின் இசை, பின்னணி பாடல், சிறப்பு சப்தம், நண்பர்கள் ஆங்காங்கே பேசிக்கொள்ளும் நடப்பு விசயங்கள், அழகாக இருiiக்கின்றன. இந்த குறும்படத்தில் தாகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நண்பர் காட்டில் எதிர்கொள்ளும் இறுதிக் காட்சி புதுமையாகவும் ஆச்சரியப்படவும் வைக்கிறது.
THIRSTY
Written by - Aneel Neupane
Directed by - Aneel Neupane
Cinematography - Srijan Prajapati
Sound - Aman Karna
Year - 2023
Language - Nepalese.
இந்த குறும்படம் புதுமைக்காக சொல்லப்பட்டத்திருந்தாலும் இயற்கையை,ப் பற்றிய ஒரு எச்சரிக்கை,. உணர்வைத் தருகிறது. காடு, மலை, கடல் என இயற்கை தனக்கென ஒரு தனி விதியை வைத்திருக்கிறது. அதனை மனிதன் மீற, அது என்றுமே அனுமதித்ததில்லை என்பதை காட்டுகிறது...