ஒரு மீனும் பறவையும் காதலிக்கலாம்.

ஆப்பிரிக்க பழமொழிகள் சிலவற்றைப் பற்றி இங்கு எழுதியிருந்தேன். ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டின் பழமொழிகளும் வாழ்வியலோடு ஒத்துப்போக அதன் தொடர்ச்சியாக காதலைப் பற்றிய சில ஆப்பிரிக்க பழமொழிகளை பார்கலாம் என நினைக்கிறேன். காதலும் வாழ்வியல்தானே. காதலைப் பற்றி படிக்கவோ, எழுதவோ, நினைக்கவோ என்றைக்குமே அலாதியான அனுபவத்தை தரக்கூடியது. இன்பம், துன்பம் எதுவானாலும் அவ்வபோது அசைபோடக் கூடியது. சரி!.. பழமொழிக்கு வருவோம்.
உண்மை அன்பிலும் 
அன்பு உண்மையிலும் 
இருக்க வேண்டும்...
பௌர்ணமி 
உன்னை நேசித்தால், 
நட்சத்திரங்களைப் பற்றி 
ஏன் கவலைப்பட வேண்டும்?...
எப்போது மழை பெய்யும் 
என்று சொல்ல முடியாத அளவுக்கு 
காதலில் இருக்க வேண்டாம்...
காதல், 
மழையைப் போல, 
அது விழும் புல்லைத் 
தேர்ந்தெடுப்பதில்லை...
குவளையை நேசிப்பவன், 
உள்ளே இருப்பதையும் 
விரும்புகிறான்...
காதல் 
ஒரு மனிதனைக் குருடனாகவும் 
செவிடாகவும் ஆக்குகிறது...
நீங்கள் 
யாரை விரும்புகிறீர்கள் 
என்று உங்களுக்குத் தெரியும், 
ஆனால் 
யார் உங்களை 
நேசிக்கிறார்கள் என்பதை 
உங்களால் அறிய முடியாது...
உண்மையான 
அன்பு என்றால் 
என்னுடையது 
உங்களுடையது 
என்று அர்த்தம்...
நாம் விரும்பும் ஒருவரின் வீடு 
தொலைவில் இல்லை...
இரண்டு 
நீண்ட மூக்கு காதலர்கள் 
முத்தமிடுவது கடினம்...
காதலர்கள் 
தங்கள் நிர்வாணத்தை 
மறைக்க மாட்டார்கள்...
ஒரு ஆணுக்கு தேவையான 
மிக ஆபத்தான விஷயம் 
ஒரு பெண்...
காதலில் விழுந்து 
இதயத்தை உடைப்பதை விட, 
மரத்திலிருந்து விழுந்து 
முதுகை உடைப்பது நல்லது...
ஒரு மீனும் பறவையும் 
காதலிக்கலாம் 
ஆனால் 
இரண்டும் சேர்ந்து 
ஒரு வீட்டைக் கட்ட முடியாது...