ஆப்பிரிக்க பழமொழிகள்.

'ங்க வச்சேன்'... என எதையோ தேட, ஆமா!...இத 'எப்ப வச்சேன்'... என ஏதாவது ஒன்று கிடைப்பது தேடுதலின் இயல்பு. அதுபோலத்தான் சினிமாவைப் பற்றி எழுத நினைத்து இணைய வெளியில் உலாவிக் கொண்டிருக்க ஆப்பிரிக்க பழமொழிகளைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. பல நாடுகளை உள்ளடக்கியது ஆப்பிரிக்கா கண்டம். அங்கு எண்ணற்ற மொழிகள், எண்ணற்ற இன மக்கள், எண்ணற்ற கலாச்சார வேறுபாடுகள் இருக்கின்றன. எண்ணற்ற இருந்தாலும் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை இந்த பூமியுடன் ஏதோ ஒருவிதத்தில் பிணைந்திருக்கின்றன. அதுபோல அவர்களது பழமொழியை எடுத்துக்கொண்டால், அவைகள் விலங்குகளுடனும் பறவைகளுடனும் மரம் செடி கொடிகளுடனும் இயற்கையுடனும் தொடர்பில் இருக்கின்றன. அத்தகைய ஆப்பிரிக்க பழமொழிகள்தான் இவைகள். வெளித் தோற்றத்திற்கு நகைச்சுவை மற்றும் பகடி தொனியிலிருந்தாலும், அத்தனையும் ஆழ்ந்த கருத்தை கொண்டிருப்பவையாக இருக்கின்றன. Black Humor என்ற சோகமும் அதில் கொஞ்சம் இழையோடும். அந்த பழமொழிகளை கார்ப்பரேட் சாமியாராக இருந்தால் விடிய விடிய பேசி கல்லா கட்டலாம். நம்மால் முடிந்ததெல்லாம் டிஜிட்டலில் இதுபோல் ஏதாவது செய்வதுதான். 


ஆடு மேய்ப்பவன் 
நிம்மதியாக வீட்டுக்கு வரும்போது 
பால் இனிப்பாக இருக்கும். 
- எத்தியோப்பியன் பழமொழி
பொறுமை இல்லையென்றால் 
பீர் தயாரிக்க முடியாது. 
- ஓவம்போ பழமொழி
பற்கள் வறுமையைப் பார்ப்பதில்லை. 
- மாசாய் பழமொழி
உங்களுடையது அல்லாதவற்றின் மீது 
உங்களுக்கு அதிக அதிகாரம் இல்லை. 
- ஜிம்பாப்வே பழமொழி
நீங்கள் குச்சியின் ஒரு முனையை எடுத்தால், 
மற்றொன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
- எத்தியோப்பியன் பழமொழி
இளம் பறவை
 முதியவர்கள் கேட்கும் வரை 
கூவுவதில்லை. 
- ஸ்வானா பழமொழி
முட்டைக் கூடையை எடுத்துச் சென்றால் 
நடனமாடாதீர்கள். 
அம்பேட் பழமொழி
ஒரு மரத்தின் 
வேர்கள் அழுகத் தொடங்கும் போது, ​​
அது மரக்கிளைகளுக்கு 
மரணத்தை பரப்புகிறது. 
- நைஜீரிய பழமொழி
நீரோடையின் அவதூறு 
தவளைகளால் கேட்கப்படும். 
மொசாம்பிகன் பழமொழி
அனாதையான கன்று 
தன் முதுகை நக்கும். 
கென்ய பழமொழி
காட்டின் அரசனான சிங்கம் கூட 
ஈக்களிடம் இருந்து 
தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. 
கானா பழமொழி
எலியின் குழந்தை எலி. 
மலகாசி பழமொழி
உங்களிடம் ஒரே கருவி 
சுத்தியல் மட்டுமே இருந்தால், 
ஒவ்வொரு பிரச்சனையையும் 
ஆணியாகத்தான் பார்ப்பீர்கள். 
காம்பியன் பழமொழி
பூமி படுக்கைகளின் ராணி. 
- நமீபிய பழமொழி
ஓடிப்போகும் ஒருவரைப் 
பின்தொடராதீர்கள். 
கென்ய பழமொழி
ஒரு குழந்தைக்கு சந்திரனைக் காட்டினால், 
அது உங்கள் விரலை மட்டுமே பார்க்கிறது. 
ஜாம்பியன் பழமொழி 
ஒரு குழந்தை 
எல்லோருக்கும் ஒரு குழந்தை. 
சூடானிய பழமொழி
குளிர்ந்த நீரில் விருப்பத்துடன் குளிப்பவன் 
குளிரை உணர மாட்டான். 
ஃபிபா பழமொழி
மலையாக இருங்கள் அல்லது 
ஏதாவது ஒன்றின் மீது  சாய்ந்து கொள்ளுங்கள். 
சோமாலி பழமொழி
கடந்த ஆண்டு கோடையில் நீங்கள் 
ஒரு வீட்டைக் கட்ட முடியாது. 
எத்தியோப்பியன் பழமொழி
தேன் உள்ளது ஆனால் 
தேனீக்கள் இல்லை.
ஜிம்பாப்வே பழமொழி