வெடிக்கெட்டு.


"மஞ்சப்ரா" என ஒரு ஊர். அந்த ஊருக்கென ஒரு ஜாதி. "கரிங்கோட்டா" என மற்றொரு ஊர் அந்த ஊருக்கென ஒரு ஜாதி. ஊருக்கு ஊர் ஜாதியிருந்தால் சொல்லவே வேண்டாம் ஊர் பகையைப் பற்றி. அதில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற கருத்தியலும் உண்டு. ஜாதி என்பது மீசை மயிர். மீசையை தாண்டி தாடி வரை வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு ஊரும் ஒத்துமையாக இருப்பது, வருடா வருடம் வரும் பொது கோவில் திருவிழாவிற்கு மட்டுமே. இந்த இரண்டு ஊரை சேர்ந்த ஒரு ஜோடி காதலித்தால் என்னவாகும்? என்ற கேட்ட, படித்த, பார்த்த, சலித்த, கார்போ ஹைட்டிரேட் ஆல்கஹாலான ரோமியோ ஜூலியட் காலத்து பழைய கதைதான் "வெடிக்கெட்டு" என்ற மலையாளத் திரைப்படம். ஆனாலும் திரைக்கதையும், சண்டைக் காட்சிகளும், BGM பின்னணியும் இந்த திரைப்படத்தை ரசிக்க வைக்கிறது. 

மலையாள திரைப்படங்கள் பெரும்பாலும் இயல்பாக இருக்கும் எதார்த்தத்தை தாங்கி பிடிக்கும். இந்த திரைப்படமும் கிராமத்து சூழலில் அதன் மனிதர்களோடு எதார்த்தமாக இருக்கிறது. குறிப்பாக பாடல்கள் ஜனரஞ்சமாக இருக்கிறது. "ஷியாம் பிரசாத், ஷிபு புலர்கழ்சா, அர்ஜுன் வி அக்ஷயா" என மூவர் இசையமைக்க பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் இருக்கிறது. 

"அதனா கண்டலும், இந்தீவரம்" இவ்விரண்டு பாடல்களும் தாளம் போட வைப்பவை. "டும் டும் டும்" பாடல் Peppy எனப்படும் அழகிய காதல் பாடல். கோபிகா கிருஷ்ணனின் குரலில் ஒளிக்கும் "செம்பாட்டு" பாடல் மற்றும் அர்ஜுன் வி அக்ஷயா குரலில் ஒலிக்கும் "செந்தாரகமே" பாடல் இவ்விரண்டும் மயக்கும் தாலாட்டாக இருக்கிறது. அதனை "Soul of darkness" வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.  "கானாகஞ்சினி மின்னும்" பாடல் அழுத்தம் திருத்தமானவை. பாடல்கள் அனைத்தும் இந்த திரைப்படத்தை தாங்கி பிடிக்கின்றன. முன்பே சொன்னதுபோல் ஜனரஞ்சகமானவை. something that pleases common people. ஜனரஞ்சகம் என்ற வார்த்தையை சினிமாவிற்காக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.


அனைத்து பாடல்களும் இனிமையாக அமைந்த திரைப்பட பட்டியல் மிகக் குறைவு. அந்த பட்டியலில் வெடிக்கெட்டு திரைப்படமும் இணைய, அதன் பாடல்கள் தங்களது பார்வைக்கும்.