நாளைய காற்று.

உலக தத்துவங்கள், பழமொழிகள், கவிதைகள், படித்ததில் பிடித்தது என இங்கு தனி பகுதியாய். 

"தேர்ந்தெடுப்பவனாக இருக்காதே; கிடைப்பதைத் தின்றுகொள்" 
என்கிறது 
கழுதைப் புலியின் முதல் சட்டம். 
ஒருமுறை 
வெண்ணீரில் பட்ட கை, 
குளிர்ந்தநீரைக் கண்டால் கூட 
தயங்கும். 
இன்னும்‌ அதிக மழையும்‌, 
அதிக ஓய்வும்‌, அதிக நீரும்‌ வாத்துகளுக்கு மிகவும்‌ நல்லது.
ஒரு புதிரின் ஆளுமை 
மிதமிஞ்சி இருக்கும்போது 
பணியாமல் இருக்க முடிவதில்லை...
திறப்புகள்‌ கதவுகளை எப்படி இலகுவாகத்‌ திறக்கின்றனவோ அப்படியே பூட்டவும்‌ செய்கின்றன. 
ஒரேயொரு நிலவுதான்‌; 
உலகின்‌ எல்லா குளங்களிலும்‌ 
தனித்‌ தனியாக மிதந்துகொண்டிருக்கிறது. 
சாவதில்‌ சிறந்த அம்சமே அதுதான்‌. இழப்பதற்கு நம்மிடம்‌ எதுவும்‌ இல்லாதபோது நமக்குப்‌ பிடித்த 
எந்த ஆபத்தையும்‌ 
மேற்கொள்ளலாம்.
நாம்‌ எப்பேர்ப்பட்ட கழுதைகள்‌, மடையர்கள்‌ என்பதை நமக்கு நினைவூட்டவே புத்தகங்கள்‌ இருக்கின்றன...
ஞானத்தின்‌ 
கல்விக்கூடத்தில்‌ இருக்கும்‌ 
எளிமையான சாதுவை விட 
தங்க முலாம்‌ பூசிய 
முட்டாளே மேல்‌ என்று நினைக்கும்‌ 
காலம்‌ இது!
புதிய ஆடலுக்கு 
பழைய வாசனைத்‌ தைலம்‌ 
உதவாது.
பணம்தான்
இளமை.
புலன்‌ இன்பத்திற்கு 
அதற்கே உரிய ஒரு வாயும்‌ 
வயிறும்‌ - அத்துடன்‌ 
ஒரு விஷக்‌ கொடுக்கும்‌ உண்டு.
இது மிகவும்‌ இருண்ட காலம்‌. 
யார்‌ மெளனமாக 
இருக்க வேண்டுமோ 
அவர்கள்‌ மிகவும்‌ பேசுகிறார்கள்‌. 
யார்‌ பேச வேண்டுமோ அவர்கள்‌ மெளனமாக இருக்கிறார்கள்‌.
கெட்ட மனிதர்கள்‌ யாரென்பது எல்லோருக்கும்‌ தெரியும். 
ஆனால்‌ நம்மைச்‌ சுற்றியுள்ள 
நல்ல மனிதர்களை 
நாம்‌ ஒருபோதும்‌ அடையாளம் கண்டுகொண்டதில்லை...
முழங்காலிடுபவர்களுக்கு முன்னால்‌, நிற்பவர்கள்‌ மேல்‌ 
முதலில்‌ சூரியன்‌ பிரகாசிக்கும்‌...
நண்டு ஒன்றுமில்லாமல்‌ 
பகல்‌ நேரத்தில்‌ ஓடாது... 
தனக்கென மதிப்பு உள்ள எவருக்கும் நவரத்தினம் எதுவும் 
கிடைப்பதில்லை. 
எல்லாமே தலைகீழாக உள்ள  பைத்தியக்கார உலகம்‌ இது...
ஒரு சவப்பெட்டி எவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும்  வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அது மரணத்தை விரும்பாது.
பனைமரத்தின் உச்சிக்கு 
குறுக்குவழி எதுவுமில்லை.
மழை ஒரு கூரையில் மட்டும் விழுவதில்லை.
மரங்களில் பணம் கிடைத்தால், 
பெரும்பாலான மக்கள் குரங்குகளை 
திருமணம் செய்து கொள்வார்கள்.
முழுமையில்‌ இருந்து 
விலகித்‌ தெரியும்‌ ஒரு பொருள்‌ 
உண்மையானதல்ல.
அமைதியாக இருக்கும் நீரில் 
முதலைகள் இல்லை என்று 
நினைக்க வேண்டாம்.
வெறுப்பைக் 
குணப்படுத்தக் கூடிய மருந்து 
எதுவும் இல்லை.
இரண்டு யானைகள் 
சண்டையிடும் போது 
புல்தான் காயமடைகிறது.
ஒவ்வொரு வகையான அன்பும் 
அன்புதான், ஆனால் 
அவற்றில் சுய-அன்பு 
மிக உயர்ந்தது.
கற்பனையைப் போல் நிஜம்
ஒருபோதும் இருக்காது.
விவசாயி சோளத்தை 
வளர்க்கிறான், ஆனால் 
கரடி அதை சாப்பிடுகிறது.
இருமலைப் போலதான் காதல்
மறைக்க முடியாதது.
ஒரு மோசமான தொழிலாளி 
தனது கருவிகளுடன் 
சண்டையிடுவான். 
இறந்த மனிதர்கள் கதை சொல்லுவதில்லை.
வளைந்த மரமும் 
நேராகத்தான் 
நெருப்பை உண்டாக்கும். 
நாளைய காற்று 
நாளை வீசும்.