டைனோசர் இரயில்.

தொல்லுயிர் ஆய்வாளர் "ஆலன் கிரான்ட்" மற்றும் தொல் தாவரவியல் அறிஞர் "எல்லி சாட்லர்" இருவரும் இன்ஜென் நிறுவனத்தின் தலைவர் "ஜான் ஹேமண்ட்" அழைப்பில் அந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு வந்து அங்கு உயிரோடு உலாவந்த "பிராக்கியோசாரஸை" முதன்முதலில் பார்த்தபோதுதான் "டைனோசர்" என்ற உயிரினம் ஒரு காலத்தில் இந்த உலகத்தில் வாழ்ந்தது என நமக்கு தெரியவந்தது. நான் ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் ஒரு காட்சியைப் பற்றி சொல்கிறேன் (ஆலன் கிரான்ட், எல்லி சாட்லர், ஜான் ஹேமண்ட் இவர்கள் அத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்). 1993 ஆம் ஆண்டு வெளிவந்த "ஜூராசிக் பார்க்" திரைப்படம் இல்லையென்றால் டைனோசர் என்ற உயிரினம் நமக்கு நிச்சையம் தெரியாமல் போயிருக்கும். ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிரினத்தை, அது வசித்த சூழலை, தற்போதைய உலகின் மூலை முடுக்கிற்கெல்லாம் தெரியப்படுத்தியது பாராட்டக் கூடிய சாதனைதான். அதன்படி இன்று டைனோசர்களைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க, அவற்றைப் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கும் கார்டூன் தொடர்தான் இந்த "டைனோசர் இரயில்". 

PBS kids தொலைக்காட்சியில் 2009 முதல் 2020 வரை தினமும் 30 நிமிடங்கள் 100 எபிசோடுகள் 5 சீசன்கள் ஒளிபரப்பான கார்டூன் தொடர்தான் டைனோசர் இரயில். காடுகள், சதுப்பு நிலங்கள், சுறுசுறுப்பான எரிமலைகள் மற்றும் பெருங்கடல்கள், டைனோசர் மற்றும் பிற விலங்குகளால் நிரப்பப்பட்ட ஒரு விசித்திரமான வரலாற்றுக்கு முந்தைய உலகில் இந்த தொடர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அது டைனோசர் இரயில் என்று பெயரிடப்பட்ட இரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. டைனோசர் இரயில் உலகம் முழுவதையும் வட்டமிடுகிறது. மாயாஜால நேர சுரங்கங்கள் வழியாக "ட்ரயாசிக், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ்" காலகட்டங்களுக்கு செல்கிறது. கடலுக்கடியில் செல்லவும் வரலாற்றுக்கு முந்தைய விலங்குகளைப் பார்வையிடவும் நிறுத்தங்கள் உள்ளன. 

இந்த தொடரின் நாயகர்கள் ஒரு காலத்தில் இந்த மொத்த உலகையும் ஆட்சி செய்த டைனோசர்கள் ஆகும். டைனோசர் ரயிலின் உலகம் "படி" என்ற டைரனோசொரஸின் கண்களால் பார்க்கப்படுகிறது. தப்பி பிழைத்த கலப்பினமான அது தன்னைப் போன்று இருக்கும் பிற டைனோசர்களையும் இந்த உலகையும் தெரிந்துகொள்ள அதன் உடன்பிறப்பாக கருதப்படும் "டைனி, ஷைனி மற்றும் டான்" என்ற மற்றவைகளுடன் இணைந்து இரயிலில் பயணம் செய்கிறது.  இரயிலின் நடத்துனராக இருக்கும் "ட்ரூடன்" என்ற டைனோசர் அவர்களுக்கு உதவுவதோடு டைனோசர்களைப் பற்றியும், அவைகளோடு வாழ்ந்த மற்ற உயிரினங்களைப் பற்றியும், அப்போது நிகழ்ந்த காலநிலைகள் பற்றியும், உலகின் நில அமைப்புகளைப் பற்றியும், ஒரு காலத்தில் புதைந்த இந்த உலகின் இரகசியங்களையும் விளக்குகிறது.  

CGI-அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த தொடரை "நிக்கலோடியோனின் ஹே அர்னால்ட்" வடிமைத்துள்ளார். "ஸ்பார்க்கி அனிமேஷன், ஃபேபிள்விஷன், ஸ்னீ-ஓஷ், இன்க்., ரீல் எஃப்எக்ஸ் மற்றும் சீ டு ஸ்கை என்டர்டெயின்மென்ட்" ஆகியவற்றுடன் "தி ஜிம் ஹென்சன்" நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொடர் தற்போது முடிவடைந்தாலும் OTT தளங்களிலும், யூடியூப் கிட்ஸ் தளத்திலும் காணக் கிடைக்கிறது. Pre School எனப்படும் 3 முதல் 6 வயது குழந்தைக்களுக்காக தொடர் உருவாக்கப்பட்டாலும் டைனோசர் இரயில் அவர்களோடு நாமும் பயணிக்க உலகின் இரகசியங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. 



தேன் தடவிய மருந்து, மிட்டாய் காட்டிய மாத்திரை, நிலா ஊட்டும் சோறு, குழந்தைகளுக்கு தேக ஆரோக்கியம். அது போலவே அவர்களது ஆரம்ப கல்விமுறை இனிமையாக அமைந்துவிட்டால் சமுதாய ஆரோக்கியம் நிச்சையம் மேம்படும். இது வீடியோ சூல் உலகு. குழந்தைகளுக்கு கார்டூன் சூல் உலகு. அதன் மூலம் கற்றலை இனிமையாக போதித்தல் என்பது கலைதான். டைனோசர் இரயில் என்ற கார்டூன் தொடர் அதைத்தான் செய்கிறது. லட்டு தின்றால் சக்தி வரும், சமோசா தின்றால் புக்தி வரும், மேலும் புளுகுமூட்டை புராண இதிகாச கதைகள் கொண்ட கார்டூன் தொடர்களுக்கு மத்தியில் உலகின் புதைந்த இரசியங்களை தெரிந்த கொள்வது இனிமையான கற்றலாக இருக்கும். 

யூடியூபில் தொடரைக் காண: