வலசை வந்த பறவைகள்.

கோடை காலத்தை குளிர்ந்த இடத்திலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடத்திலும் கழிக்க பறவைகள் வலசை போகின்றன. பறவைகள் பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதன் உதவியுடன் சேருமிடத்தை கண்டுபிடிக்கின்றன. அவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன என்ற கருத்தும் இருக்கிறது. பறவைகளின் வலசை போகுதல் பக்கத்திலிருக்கலாம் அல்லது கண்டம் விட்டு கண்டம் தாண்டி பல மைல்கள் தூரத்திலிருக்கலாம். எது எப்படியே இந்த வருடம் பறவைகள் சரணாலயங்கள் மற்றும் சில இடங்களில் அவ்வாறு வலசை வந்த பறவைகளை வளைய வந்து மூன்றாவது கண் வழியே கிளிக்கியதே இவைகள்... 

நீலத் தாழைக்கோழி - Western swamphen


இராக்கொக்கு -  Black-crowned Night Heron


சிறு வெண் கொக்கு - Little egret


தாழைக்கோழி - Common Moorhen


நத்தை குத்தி நாரை - Anastomus oscitans


சிறிய சீழ்க்கைச் சிரவி - Lesser whistling duck


நீளவால் இலைக்கோழி - Pheasant-tailed Jacana


குளத்துக் கொக்கு - Pond heron


பட்டாணி உப்புக்கொத்தி - Little Ringed Plove


கம்புள் கோழி - White-breasted waterhen


பெரிய நீர்க்காகம் - Great Cormorant


பாம்பு தாரா - Darter


வரித்தலை வாத்து - Bar-headed Goose


நீள் சிறகு கடற்பறவை - Sea Gulls


அன்றில் - Glossy ibis


மஞ்சள் மூக்கு நாரை - Painted stork


கோரை உள்ளான் - Jack Snipe


செந்நாரை - Purple Heron


சிறிய நீர்க்காகம் - Little cormorant


சாம்பல் நாரை - Grey Heron


சிவப்பு மூக்கு ஆள்காட்டி - Red-wattled lapwing


ஆற்று ஆலா - River Tern


பெரிய கொக்கு - Great Egret