பீர் காத்த உலகு.


து வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.  Drinking is injurious to health... என ஆரம்பிப்பது உத்தமம் என நினைக்கிறேன். பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா இவையெல்லாம் மது வகைகள். உற்சாக பானங்கள். போதை வஸ்துக்கள். பொத்தாம் பொதுவாக சரக்குகள். இதில் பீர் மட்டும் விதிவிலக்கு என்ற அபிப்ராயம் இருக்கிறது. மச்சி சரக்கெல்லாம் இப்ப அடிக்கிறது இல்லை, எப்பையாவது ஒரு பீர் அவ்வளவுதான்... சத்தியமா சரக்கு அடிக்கல ஒரு பீர்தான் குடிச்சேன்... பீர் குடித்தால் ஒன்னும் ஆகாது... என பலரும் இருக்க பீரும் ஆல்கஹால் வகையறாதான், அதுவும் உடல் நலத்திற்கு தீங்கானதுதான். ஆனால் முறையாக தயாரிக்கப்பட்ட பீரினை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால் எதுவும் ஆகாது எனவும் சொல்லப்படுகிறது. 

தண்ணீர் மற்றும் காஃபி இவற்றிற்கு அடுத்தபடியாக உலக மக்கள் அதிகமாக குடிப்பது பீர்தான்நீங்கள் ஏன் பீர் குடிக்கிறீர்கள்?... என பீர் பிரியர்களை கேட்டால்... சுவையாக இருக்கிறது... புத்துணர்ச்சி கொடுக்கிறது... நிறைவாக உணர்கிறேன்... ஜாலி... ஆஸம்... ஆசுவாசம்... என சொல்லிக் கொண்டே போவார்கள். உலகின் பழமையான பானம் 13000 வருடங்களுக்கு முந்தைய கண்டுபிடிப்பு, மண் பானைகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே பருகப்பட்டது என்ற சிறப்பெல்லாம் பீருக்கு இருக்கிறது. அதுபோல்
மனித நாகரீகம் பிறப்பதற்கே பீர் காரணமாக இருந்திருக்கிறது. மேலும் தத்துவம், கவிதை, கணிதம், நவீன மருத்துவம், புதிய தொழிலாளர் சட்டங்கள் தோன்றவையும், பிரமிடு போன்ற உலக அதிசயங்கள் உருவாகவும் பீர் உதவியிருக்கிறது. அட! ஏன்.. இன்றைய அமெரிக்கா உருவாக பீரும் அடித்தளமாக இருந்திருக்கிறது. "பீர் காத்த உலகு" எனவும் சொல்லலாம். ஏதோ குடித்துவிட்டு உளறுகிறேன் என நினைக்க வேண்டாம். அத்தனையும் ஆச்சரியம் மற்றும் உண்மை. அதனைப்பற்றியும், பீரின் சொல்லப்படாத கதையையும் "How Beer Saved the World" என்ற டாகுமெண்டரி மூலம் தெரிந்துகொள்ளலாம்.  

Trailer



மானுடவியல் பேராசிரியர் ஜார்ஜ் ஆர்மெலகோஸ், பேராசிரியர் சார்லி பாம்ஃபோர்ட், நுண்ணுயிரியல் பேராசிரியர் கைரியா பவுண்டி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் எகிப்தியலின் பேராசிரியர் டாக்டர் பெட்ஸி பிரையன், உணவு அறிவியல் பேராசிரியர், டாக்டர்.பேட்ரிக் ஹேய்ஸ், பயோ-ஆர்க்கியாலஜி பேராசிரியர் பேட்ரிக் மெக்கவர்ன் போன்ற ஆராய்ச்சியாளர்களும் நிபுணர்களும், பேராசிரியர்களும் இந்த டாகுமெண்டரியில் நேரடியாக பீர் தோன்றிய வரலாற்றையும், அது மனித வாழ்க்கைக்கு எவ்வாறு உதவியிருக்கிறது என்பதையும், ஆதாரத்துடன் நமக்கு காட்டுகின்றனர். எகிப்து பிரமிடுகள் முதல் அமெரிக்க மாகாணங்கள் உட்பட உலகின் பல இடங்களில் கிடைத்த தொல்பொருள்களின் சான்றுகளை ஒவ்வொன்றாக அவர்கள் காண்பிக்க வியப்பாக இருக்கிறது. 

How Beer Saved the World
Written by - Martyn Ives
Cinematography - John Whitteron
Edited -  Gillian Abraham, Warren Saunders, Lukasz Termer
Country - USA
Language - English
Year - 2011.

பீர் தயாரிக்க பார்லி முக்கியமானது. ரொட்டி தயாரிப்பதைக் காட்டிலும் பீருக்காகவே பார்லி அதிகம் பயிரிடப்படுகிறது. கோதுமை, அரிசி, சோளம், ஓட்ஸ் இவற்றில் கூட பீர் கிடைக்க அதன் தயாரிப்பு முறைகளை பற்றியும் வேதியியல் செயல்பாடுகளையும், பீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் இந்த டாகுமெண்டரியில் தெரிந்துகொள்ளலாம். பிரபல பீர் தயாரிப்பு தொழில்சாலைகளில் ஒருசுற்று வலம் வரலாம். டிஸ்கவரி தொலைக்காட்சிக்காக இந்த டாகுமெண்டரியை தயாரித்திருக்கின்றனர். Naration என்ற நேரடி தகவல் சொல்லும் வகையைச் சார்ந்த இது, பீர் பிரியர்கள் மட்டுமல்ல வரலாற்று பிரியர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். 

டாகுமெண்டரியைக் காண:



துளிகள்...

🖊️...பெல்ஜியம் நாடுதான் பீர் தயாரிப்பிற்கு பெயர் போன நாடு. அங்கு தயாரிக்கப்படும் பீரே உலகின் சிறந்த பியர். திருப்பூர் பேக்கரி போல தடுக்கி விழுந்தால் ஒரு பீர் கடை பெல்ஜியத்தில் உண்டு...

🖊️...1.சைனா தயாரிப்பான Snow மற்றும் Harbin அதுபோல் அங்கு பிரபலமான Tsingtao மற்றும் Yanjing.  

2. AB InBev எற்ற நிறுவனத்தின் 
Bud Light மற்றும் Budweiser.

3. பிரேசில் நாட்டின் Skol மற்றும் Brahma.

4. டச்சு நாட்டின் Heineken மற்றும் Carlsberg மற்றும் Amstel.

5. மெக்ஸிகோவின் உலகப் புகழ் Corona மற்றும் Modelo Especial மற்றும் Dos Equis.

6. பிரான்சின் Kronenbourg.

7. அரிசியில் தயாரிக்கப்படும் ஜப்பானின் Asahi மற்றும் Sapporo Yebisu.

8. இத்தாலின் கொடையான Peroni Nastro Azzurro.

9. விலை கொஞ்சம் தூக்கலான ஐரிஸ் நாட்டின் Guinness.

10. செக் குடியரசின் Pilsner Urquell.

11. ஸ்பெயினின் பழமையான Estrella.

12. பெல்ஜியத்தின் Stella Artois   மற்றும் Hoegaarden மற்றும் Hopper. 

13.ஸ்காட்லாந்தின் BrewDog.

14. ஸ்வீடனின் Sofiero.

15. கொலம்பியாவின் Aguila.

16. ஹங்கேரியின் Dreher.

17. ஜெர்மனியின் Becks.

18. ஆஸ்திரேலியாவின் Foster's.

19. தாய்லாந்தின் Chang. 

20. சிங்கப்பூரின் Tiger.

21. டென்மார்க்கின் Tuborg.

இவையெல்லாம் உலகைப் புகழ்பெற்ற பீர் வகைகள். இவற்றில் பெரும்பான்மையானவை இந்தியாவிலும் கிடைக்கிறது. தழிழ்நாட்டின் எல்லையை கடந்து பாண்டிச்சேரியில் கால் வைத்தால் இவைகளில் வாய் வைக்கலாம். 

🖊️... இந்தியாவில் Kingfisher பீரே அதிக விற்பனையாக, பிரபல பீர் வகைகளும் இருக்கிறது. அவைகள் முறையே,

1. காஸ்மீர் ஸ்பெஷல் Godfather.

2. அருணாச்சல பிரதேசத்தின் Simba.

3. கோதுமையில் தயாரிக்கப்படும் பஞ்சாபின் Bira.

4. மத்திய பிரதேசத்தின் White Rhino.

5. பூடானின் Kati Patang.

6. டெல்லி ஸ்பெஷல் BeeYoung மற்றும் Bad Monkey மற்றும் Beor 360.

7. பக்கத்து ஊர் வங்கதேசத்தின் Hunter.

8. மகாராஸ்டிரத்தின் London Pilsner.

9. கோவா புகழ் Goa King’s.

10. தெலுங்கானாவின் Knockout.

11. அமெரிக்கா - பெங்களூர் இணைப்பின் Miller Ace... 

🖊️... "நின்காசி" என்ற தெய்வம்தான் பீரின் கடவுள் (god of beer). மொசபடோமியா நாகரீகத்தின் கடவுளான நின்காசி பீர் மற்றுமல்லாது விஸ்கி, பிராந்திக்கும் கடவுளாகும். நியாயப்படி பார்த்தால் ஒவ்வொரு குடிமகனும் வணங்க வேண்டிய கடவுள் இதுதான்... 

🖊️... Antartic Nail Ale, 
The End Of History,  
Jacobsen Vintage,  
Schorschbock, 
Utopias, 
Crown Ambassador Reserve,
Sink The Bismarck,
Tutankhamun Ale, 
Blue Ribbon, 
Space Barley,
Guinness.

- இவைகள்தான் உலகின் மிக விலையுயர்ந்த பீர்களாகும்...

🖊️... The Weihenstephan Brewery ஜெர்மனியிலிருக்கும்  இதுதான் உலகின் மிகப் பழமையான பீர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இன்றும் செயல்படும் இது 1050 ஆம் வருடம் தனது முதல் உரிமத்தை பெற்றது...

🖊️... இனம், மதம், ஜாதி, மொழி, சாமி, ஆசாமி, மனுதர்மம், மண்ணாங்கட்டி,  மாங்காய் தொக்கு என எதையும் பார்க்காமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழா எது தெரியுமா?.. அதுதான் பீர் திருவிழா...