சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ.
ஆப்பிரிக்க இலக்கியத்தில் மதிப்பு மிகுந்தவராக போற்றப்படும் "கூகி வா தியாங்கோவின்" சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவலின் மயிலிறகு பக்கங்களில் கிடைத்தவை இவை. ஒரு சிறந்த படைப்பு எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். கூகி வா தியாங்கோ இந்த நாவலை சிறையிலிருந்த போது எழுதினார். அதுவும் மலம் துடைக்கும் தாளில் எழுதியிருந்தார்.
எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த என்
உடலுக்காக துக்கம் கொண்டாடுகிறேன்.
கல்லறையில் நான் புதைக்கப்படுகையில்
யாருடன் அதனைப் பகிர்ந்து கொள்வது
என்றும் எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்...
கொத்துவது எதுவும் பிறருக்காகக் கொத்துவதில்லை
கிள்ளுவது எதுவும் பிறருக்காகக் கிள்ளுவதில்லை.
பயணிப்பது எதுவும் பிறருக்காக பயணிப்பதில்லை
பிறருக்காக வாழ்கிறவன் எங்கே இருக்கிறான்?...
தேசத்துக்கு செவிகொடுக்காதவன் செவிடன் செவிடன் செவிடன் தேசத்துக்கு முகம் கொடுக்காதவன் குருடன் குருடன் குருடன்...
விதைகளை மாற்றுவோம், ஏனெனில்
குடுவையில் இருப்பவை,
ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள்.
நடைகளை மாற்றுவோம், ஏனெனில் பாடலில் இருப்பவை
ஒன்றுக்கு மேற்பட்ட லயங்கள்...
நிமிர்த்துவதற்கும் வளைப்பதற்கும் இடையில்,
விழுங்குவதற்கும் துப்புவதற்கும் இடையில்,
ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையில்,
போவதற்கும் திரும்புவதற்கும் இடையில்...
நான் உனக்குச் சொல்லுகிறேன்:
தீமையை எதிர்க்காதே.
எவனாவது உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்
அவனுக்கு உன் மறுகன்னத்தையும் காட்டு.
எவனாவது உன்மீது வழக்குப் போட்டு
உன் மேலாடையை எடுத்துக் கொள்வானானால்
உன் உள் ஆடையையும் அவனிடம் கொடுத்துவிடு...
சொட்டு சொட்டு சொட்டு என்று சத்தம் வரக் கேட்டால்
கொட்டும்மழைச் சத்தம் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். நம்மைப் போன்ற குடியானவர் மண்ணைக் காக்கும் போரில்
கேட்கும் அந்த சத்தம் நமது ரத்தம் சிந்தும் சத்தம்!