அம்மாடி! எவ்ளோ பெரிய வார்த்தை.
"Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis" என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். அது சிலிகா எனப்படும் மண் துகள்களை மூச்சோடு சேர்த்து உள்ளிழுப்பதால் உருவாகிறது. அந்த நோயைப் பற்றி நமக்கேன் கவலை. "நோய் கவலையே மிகப்பெரிய நோய்". ஆதலால் Pneumonoultra-microscopicsilicovolcanoconiosis என்ற பெயருக்கு வருவோம். இதை யாரேனும் சரியாக உச்சரித்தால் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும். அவர் டாக்டராக இருந்தாலும் சரி. 45 எழுத்துக்களைக் கொண்ட இதுவே ஆங்கில மொழியின் மிகப்பெரிய வார்த்தையாகும். ஆங்கில மொழியின் எழுத்துக்கள் 26 மட்டுமே. கற்பதற்கு எளிமையான மொழி, சுறுக்கமான மொழி, அவசியமான மொழி. அந்த மொழியில் இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகள் அமைவது விசித்திரம்தான்.
அதற்கு அடுத்த படியாக 34 எழுத்துக்களைக் கொண்ட "Supercalifragilisticexpialidocious" என்ற வார்த்தை இருக்கிறது. Nonsense word என்ற முட்டாள்தனமான வார்த்தையான இதை தலைப்பாக வைத்து வால்ட் டிஸ்னி ஒரு கார்டூன் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அதன் அர்த்தம் பிரமாண்டமான, பெரிய, புகழ்பெற்ற, அற்புதமான, சூப்பர், என அனைத்தையும் குறிக்கிறது.
"Pseudopseudohypoparathyroidism" என்ற 30 எழுத்துக்களைக் கொண்ட வார்த்தை இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலிருக்கிறது. இதுவும் பரம்பரை தொடர்பான ஒரு நோயினை குறிக்கும் பெயர் ஆகும். இந்த மூன்று பெரிய வார்த்தைகளை விட இன்னும் மூன்று பெரிய ஆங்கில வார்த்தைகள் இருக்கிறது.
பண்டைய கிரேக்கத்தில் "அரிஸ்டோஃபேன்ஸ்" என்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். ஹியூமர் சென்ஸ் நிறைந்தவர். அது அவரது எழுத்துக்களில் தெரியும். நாடகங்களுக்கு கதை வசனமும் எழுதுவார். "Assemblywomen" என்ற அவரது நாடகத்தில் மீன், ஆடு, கோழி, இறைச்சி, தக்காளி சாஸ், சாலடுகள் நிறைந்த கலவையான உணவின் பெயர் ஒன்றை 175 எழுத்துக்களை கொண்ட கிரேக்க மொழியில் குறிப்பிட்டிருக்கிறார். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க
" Lopadotemachoselachogaleokranioleipsanodrimhypotrimmatosilphiokarabomelitokatakechymenokichlepikossyphophattoperisteralektryonoptekephalliokigklopeleiolagoiosiraiobaphetraganopterygon" - என வரும். உலக இலக்கியத்தில் 183 எழுத்துக்களைக் கொண்ட இந்த ஆங்கில வார்த்தை கின்னஸ் சாதனையாகவும் இருக்கிறது.
எஷரிக்கியா கோலை என்ற ஈ. கோலை பாக்டீரியாவைப்பற்றி படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்போம். அந்த ஈ கோலை பாக்டீரியாவில் "E. coli TrpA (P0A877)" என்ற ஒருவகை இருக்கிறது. அதன் அறிவியல் பெயர் "Methionylgl-utaminylarginyltyrosylglutamyl" எனத் தொடங்கி "serine" என முடியும். அதன் மொத்த எழுத்துக்கள் எத்தனை தெரியுமா? 1909.
அதைப்போலவே TTN என குறிப்பிடப்படும் "Tintin" என்ற புரதம் ஒன்று இருக்கிறது. அதன் அறிவியல் பெயர் "Methionylthreonylthreonyl -glutaminylalanyl" எனத் தொடங்கி "isoleucine" என முடியும். அதன் மொத்த எழுத்துக்கள் 189,819 ஆகும். உலகின் மிக நீண்ட வார்த்தை. அந்த வார்த்தையை யாராவது படிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அப்படி படித்தாலும் அவருக்கு சுமார் 4 மணிநேரமாவது ஆகலாம். படித்து முடித்ததும் அவர் பெருமூச்சுடன் (இருந்தால்) இதைத்தான் சொல்வார். அம்மாடி!... எவ்ளோ பெரிய வார்த்தை.