அதற்குப்பின் வெறும் சம்பிரதாய சடங்குகளே.


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

Declaration of Love's special Excellence

வள்ளுவனின் காதற்சிறப்புரைத்தலே இதற்கு Inspiration. 

bonds that soul and body

உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள உறவு எப்படியோ அப்படியே அவளுக்கும் எனக்கும் உள்ள உறவு. அதைத்தான் உயிர் அன்றிணைந்தது உடல் இன்றிணைந்தது என கிறுக்கியிருக்கிறேன். ஆண்பால் பெண்பால் என இருபால் ஒரு புள்ளியில் இணையும் காமத்துப்பால். 

பெண்பால்
ஆடை சேர்த்து 
நாணமும் அவிழ்...
கண் மேய்....
தலைக்கோது...
அதே பரிச விரல்கொண்டு
உடற் தடவு...
மேலிருந்து கீழ் 
கீழிலிருந்து மேல்
எப் படியோ 
முத்தப் பயணத்தை 
இனிதே தொடங்கு...
வளைவு நெளிவு
மேடு பள்ளங்களில் 
பயணம் தொடர 
களைத்தால்
ஓய்வெடு...
உறிஞ்சி தாகம் தீர்க்கவும்
கடித்து ருசி பார்த்து
மெல்ல அசை போடவும்
பசித்தவனுக்கும்
பரிமாறுபவனுக்கும்
பேரமுதமளிக்கும்
வாய்ப்புகள் அங்கிருக்கிறது...
அள்ளியணை...
அப் படியே தூக்கிச் சும...
மஞ்சம் கிடத்தி
மேனி படர்...
இடைவெளி யில்லாத
ஒட்டுதலில் 
உள் நூழை...
ஆழம்வரைச் செல்...
இயங்க நிறுத்தி
இடையொடி...
இதற்சுவை...
கண்ணம் தேய்த்து
கழுத்து கடி...
காதுமடல் கவ்வி
மெல்லப் புலம்பு...

'உயிர் அன்றிணைந்து
உடல் இன்றிணைந்தது'

அதற்குப்பின் 
வெறும் சம்பிரதாய சடங்குகளே. 


ஆண்பால்
அவிழ்பதில் தொடங்குகிறது
அவிழ்பதம்
ஆடை 
பதம் அவிழ்... 
நிர்வாண முத்தச் சுவையுணர
நீயோ ஊட்டிவிடு...
வளை கை 
வளை...
இடக்கை 
எங்கும் படர விடு...
கன்னம்
மூக்கு
மார்பென 
தாமே உரசுவது
ஒருபக்கம் உரசட்டும்,
நுன் பங்கிற்கு 
தானே உரசுவது
ஒருபக்கம் இருக்கட்டும்...
மடக்கிப் பிடித்து
இறுக்கி கிடத்தி
கை கோர்த்து
அடி வைத்து 
அடி வயிற்று மேலேறு...
கடிவாளத்தைத் தேடி
கையாளக் கற்றுக்கொள்...
உனதாக்கிக்கொள்
உனதுள் ஆக்கிக்கொள்...
அசந்த குதிரை 
அடிபணிய,
இயங்க நிறுத்தி
இடையொடி...
இதற்சுவை...
கண்ணம் தேய்த்து
கழுத்து கடி...
காதுமடல் கவ்வி
மெல்லப் புலம்பு...

'உயிர் அன்றிணைந்து
உடல் இன்றிணைந்தது'

அதற்குப்பின் 
வெறும் சம்பிரதாய சடங்குகளே..