எங்கள் இனம்தான் பெரியது.

வ்வளவு இருக்கலாம் என்ற தோராய எண்ணிக்கையிலான பூச்சியினங்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. 6-10 மில்லியன் இனங்கள் அல்லது 80-100 மில்லியன் இனங்கள் இருக்கலாம் என்கின்றனர். சொல்லப்போனால் பூமியில் வாழும் அதிகப்படியான உயிரினங்கள் பூச்சியினங்களே. எங்கள் இனம்தான் பெரியது, தங்கள் இனம்தான் பெரியது என மார்தட்டிக் கொள்பவர்கள் ஒருநாள் பிறந்து மறுநாள் மடியும் சிறிய ஈசல் கூட்டத்திடம் தோற்றுப் போகலாம். அதுமட்டுமல்லாது பூச்சிகள் உலகின் எல்லா சூழ்நிலைகளுடன் ஒத்து வாழ்வதுடன் புதிய சூழல் ஏதேனும் தோன்றினாலும் அதற்கும் தன்னை இசைவாக்கம் செய்துகொள்ளும் வல்லமை கொண்டது. பூச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ள கொஞ்சம் Macro சிந்தனை தேவைப்படும். அவ்வாறு Macro Lens கொண்டு செல்போன் மூலம் அடியேன் எடுத்த புகைப்படங்கள் இவை. நம்மைவிட யார் பெரியவன்இருக்கிறான் என  அறிந்துகொள்வதும் தற்பெருமைதானே.