சிறார் இலக்கியம்.
1001 அரேபிய இரவுகள்
DL-191
தமிழில்: ப்ரியா பாலு
கண்ணப்பன் பதிப்பகம்.
"அராபிய இரவு கதைகள், உலகின் சிறந்த பொக்கிஷங்கள் சிலவற்றுள் ஒன்றாகும். பாரசீகம், அரேபியா, இந்தியா, ஆசியாவில் சொல்லப்பட்ட கதைகள் அடங்கிய இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தலைமுறை, தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றன. அரேபிய இரவுகள் (1001 அராபிய இரவுகள் என்று கூறப்படுவது) புராதன கதைகளின் சக்தி கொண்டவை. உலகம் முழுவதிலுமுள்ள பலரை அவை கவர்ந்துள்ளன."
ஈசாப் கதைகள்
DL-192
தமிழில்: பி.எல்.முத்தையா
பாரதி புத்தகாலயம்.
" கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும், முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை, ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிகம் பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே. அவற்றின் வழியாக உணர்த்தப்படும் நீதி, மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்."
சின்ன சின்ன நீதிக்கதைகள்
DL-193
மு.அப்பாஸ் மந்திரி
கண்ணப்பன் பதிப்பகம்.
" நல்ல பண்புகள் உள்ளவர்களைக் காண்பது, அவர்கள் கூறும் பயன் மிகுந்த சொற்களைக் கேட்பது,
அவர்களுடைய சிறப்புகளை எடுத்துக் கூறுவது, அத்தகைய சான்றோர்களுடன் சேர்ந்து இருப்பது ஆகிய அனைத்தும் சிறந்த நன்மையைத் தரும். இது மூதுரை என்ற அறநூல் அவ்வைப்பிராட்டி கூறியதாகும். மேலும் இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகிய அறநூல்களிலும் இளம் மாணாக்கர்களுக்கு முழுக்க முழுக்க நீதியையே புகட்டியுள்ளார்.
அத்தகைய நீதிக்கதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்."