சினிமா.

சமகால மனிதனின் வாழ்விற்குள் சினிமா ஊடுருவாத சந்தர்ப்பங்களே இல்லை. அது வொறும் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கலை என்பது மட்டுமல்லாது அழுகை சிரிப்பு கோபம் காதல் என உணர்வுகளை பிரதிபலிப்பது. அத்தகைய சினிமா சார்ந்த புத்தகங்களை நூல் அகத்தின் இந்த பக்கங்களில் காணலாம். 

ரிதம்
DL-080
வஸந்த்
பேசாமொழி பதிப்பகம்.

" சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை கடைபிடிக்கும் இயக்குனர்களில் ஒருவர் வஸந்த். அவரது திரைப்படங்கள் அழகிய கவிதையைப் போன்றது. ரசனை மிகுந்தது. அவற்றுள் ஒன்தான் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம். வர்த்தகரீதியாக என்பதை ஒதுக்கினால் ரிதம் தமிழ் சினிமாவின் வெற்றி படம். அந்த ரிதம் திரைப்படம் உருவான விதத்தையும் திரைக்கதையையும் இந்த புத்தகம் கொண்டிருக்கிறது. 

உலக சினிமா பாகம்- II
DL-081
செழியன்
விகடன் பிரசுரம்.

" உலக சினிமா வேறு.... சினிமா உலகம் வேறு... ஒருமுறை ஜெயகாந்தன் கூறியது. இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் சிரிப்பும் அழுகையும்தான். அந்த சிரிப்பை அழுகையை கோபத்தை என உணர்ச்சிகளை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. அத்தகைய உலக சினிமாக்கள் சிலவற்றைப் பற்றி "செழியன்" அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய தொடரின் தொகுப்பே இந்த புத்தகம். 

உலக சினிமா பாகம்-III
DL-082
செழியன்
விகடன் பிரசுரம்.

" உலக சினிமா வேறு.... சினிமா உலகம் வேறு... ஒருமுறை ஜெயகாந்தன் கூறியது. இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் சிரிப்பும் அழுகையும்தான். அந்த சிரிப்பை அழுகையை கோபத்தை என உணர்ச்சிகளை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. அத்தகைய உலக சினிமாக்கள் சிலவற்றைப் பற்றி "செழியன்" அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய தொடரின் தொகுப்பே இந்த புத்தகம். 

நான் நடிகன் ஆன கதை
DL-083
சார்லி சாப்ளின்
தமிழில்: சுரா
வஉசி நூலகம்.

" சாப்ளின் என்ற ஒருவரை ஒதுக்கித்தள்ளிவிட்டு உலக சினிமாவை யாராலும் உணரமுடியாது. சாப்ளின் உலக சினிமாவின் சரித்திரம். அதுபோல் மிக சாதாரண நிலையிலிருந்து பிறந்த ஒருவன் நினைத்தால் தன்னுடைய உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தனித்துவத்தாலும் உச்சம் தொடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவரும் சாப்ளின். வறுமையின் பிடியிலிருந்து விலகி ஓட வேண்டும் எல்லோருக்கும் தெரியக்கூடிய ஒரு மனிதனாக ஆக வேண்டும் என்பதே அவரது புகழுக்கு அடிப்படையாக இருந்தது. அத்தகைய சாப்ளின் தான் நடிகன் ஆன கதையை சுயசரிதையாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்."

ஹேராம்
DL-084
கமல்ஹாசன்
சப்னா புக் ஹவுஸ்.

" சுதந்திரம் கிடைத்த பின்பு மகாத்மா காந்தியைக் கொல்ல நாடு முழுவதும் பலபேர் திட்டமிட்டுக் காத்திருந்தனர். கோட்சே அதைச் செய்திருக்காவிட்டிலும் சுதந்திரத்தாலும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தாலும் பாதிக்கப்பட்ட சாகேத் ராம் போன்ற யாரவது ஒருவன் அதை முடித்திருப்பான். இந்த உண்மையின் ஓர் ஒளிக்கற்றை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு வரலற்று படைப்புதான் கமலின் ஹேராம் திரைப்படம். இந்திய சினிமாவின் மைல்கல் இந்த திரைப்படம் என்பது மிகையல்ல. அந்த ஹேராம் திரைப்படத்தின் திரைக்கதை புத்தக வடிவில்." 

உலக சினிமா வரலாறு
(மௌன யுகம்)
DL-085
அஜயன் பாலா
புதிய கோணம்.

"சினிமா என்ற கலையின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆங்கில புத்தகங்களை நாடிச் செல்லவேண்டும் என்ற நிலையை மாற்றி, எளிதாக சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அஜயன் பாலா எழுதிய சினிமா தோன்றிய வரலாற்றின் முதல் பாகம் மௌன யுகம் இந்த புத்தகம்."

வசந்தம் முதல் வசந்தம் வரை
DL-086
கிம்கிடுக்
தமிழில்: தி.குலசேகர்
சந்தியா பதிப்பகம்.

" கிம்கிடுக்கின் Spring autumn winter summer and spring என்கிற கொரியன் திரைப்படம் உலகப்புகழ் பெற்றது. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடுகளாய்க் கொண்டு பௌத்த தத்துவங்களை துல்லியமாக உணர்த்திய அத் திரைப்படத்தின் திரைக்கதையை அழகான குறு நாவலாக கிம்கிடுக் எழுதியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பே வசந்தம் முதல் வசந்தம் வரை." 

நாதஸ்வரம்
DL-087
ஜேடி - ஜெர்ரி
சந்தியா பதிப்பகம்.

" தமிழின் இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ஆவணப்படம் நாதஸ்வரம். அந்த ஆவணப்படத்தின் எழுத்து வடிவமே இந்த புத்தகம். இந்த புத்தகம் நாதஸ்வரத்தின் கடந்தகால வரலாற்றையும் அதன் முன்னோடி கலைஞர்களின் வாழ்க்கையும் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மிக நுட்பமான கலையுணர்வுடன் தயாரிக்கப்படும் நாதஸ்வரம் இன்று வெறும் மூவாயிரம் ரூபாய்க்கே விற்பனையாகிறது என்ற அக்கலையின் இன்றைய நிலையையும் சுட்டிக்காட்டுகிறது. ஆவணப்படத்தின் எழுத்து வடிவம் என்பதே சற்று புதிதுதான்." 

காதல் வந்த சாலை
DL-088
பவோ ஷீ
தமிழில்: தி.குலசேகர்
சந்தியா பதிப்பகம்.

" சீன மொழியில் பவோ ஷீ எழுதி இமோயூ ஜாங் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தி ரோட் ஹோம். அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தின் திரைக்கதை நாவல் இந்த புத்தகம். இது ஒரு அற்புதமான காதல் கதை. அப்பாவின் மீது அம்மா கொண்ட காதலை மகன் விவரிப்பதாக உள்ளது. அவர்களுக்கிடையில் காதல் எப்படி தொடங்கியது. அது படிப்படியாக உயிர்த்துளியின் கடைசி சொட்டு உலரும் வரை வளர்ந்து பூர்ணத்துவம் அடைந்தது என மகன் நினைவு கூர்ந்து பார்ப்பதாக இந்நாவல் இருக்கிறது."

ரெட் பலூன்
DL-089
ஆல்பர்ட் லாமொரிஸ்
தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ
பாரதி புத்தகாலயம்.

" ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதைபேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பி அழுதபோது உங்களை தேற்றியதுண்டா?.. உயிரற்ற ஒரு பொருளைக்கூட அன்பினால் வசப்படுத்த முடியும் என விளக்கிய ஆஸ்கர் விருதுபெற்ற ஆல்பர் லாமொரிஸின் "தி ரெட் பலூன்" என்ற குறும்படத்தின் மூலக்கதை இந்த புத்தகம்."

அபூர்வ ராகங்கள்
DL-090
கே.பாலசந்தர்
விகடன் பிரசுரம்.

" சினிமாவிற்கான இலக்கணங்களை மீறி புது முகங்கள், புது யுக்திகள், புதிய கிளைமாக்ஸ் என 1975 -ல் கே.பாலசந்தர் எடுத்த திரைப்படம் அபூர்வ ராகங்கள். சிக்கலான கதை அதில் புதுமை என்பது யாரும் செய்யத் துணியாதது. அபூர்வ என்ற வடமொழிக்கு புதினானது என்று பொருள் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது திரைப்படமே அபூர்வமாக இருக்க அதன் திரைக்கதை மற்றும் வசனம் இந்த புத்தகம்."