ஆன்மிகம் தத்துவம்.
மனம் கடந்த பெருநிலையை அடைவது ஆன்மிகம் ஆகும். ஆன்மாவுடன் தொடர்புடைய விசயங்களை குறிக்கும் ஆன்மவியல். ஆன்மிகத்தை பின்பற்றுதல் என்பது நிருபிக்கப்பட்ட பயனுள்ள செயல். அதுபோல் தத்துவம் என்பது உண்மையை உணர முயலும் ஒன்று. இதுவும் வாழ்க்கை பயணத்தில் வழிகாட்டுவதற்கு உதவக்கூடியது. அத்தகைய ஆன்மிக தத்துவங்களைக் கொண்ட புத்தகங்கள் நூல் அகத்தின் இந்த பகுதியில்.
மிர்தாத்தின் புத்தகம்
DL-184
மிகெய்ல் நைமி
தமிழில்:கவிஞர் புவியரசு
கண்ணதாசன் பதிப்பகம்.
" உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது "மிர்தாதின் புத்தகம்!"...இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது... மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!...நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த நூல் இது."
மதுரமான நகரில் சிவபெருமான்
DL-185
ப்ரீத்தா ராஜா கண்ணன்
ஜெய்கோ பப்ளிஷிங் கவுஸ்.
"பழம் பெரும் இந்தியாவில் சிவபெருமானின் ஐம்பத்தி நான்கு தெய்வீக புராணக் கதைகள்."
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
DL-186
சுவாமி சுகபோதானந்தா
விகடன் பிரசுரம்.
" இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைப் படித்து, அசைப்போட்டு, சிந்தித்து அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். புத்தகத்திலிருக்கும் வார்த்தைகளும் கதைகளும் மட்டும் உங்களின் அறிவுக்கு இடம் மாறாது... அது உங்களையே மாற்றிவிடும்!"
மனசே, நீ ஒரு மந்திரச் சாவி
DL-187
சுகி.சிவம்
விகடன் பிரசுரம்.
" சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட அன்பர் சுகி.சிவம், 'மனசே, நீ ஒரு மந்திரச்சாவி' என்ற தலைப்பின்கீழ் ஆனந்த விகடனில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் வாசகர்களின் மனதில் மற்றொரு மாணிக்கக்கல்லாக ஒளிவீசுகிறது. தன்னை வளர்த்துக் கொள்ளுதல், நேரத்துடன் செயல்படல், தனிமனித முன்னேற்றம், மனிதன் வாழ வேண்டிய விதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுகி.சிவம் சின்ன சின்ன குட்டிக்கதைகள், சம்பவங்கள் மூலமாக வாசகர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளி ஏற்றியிருக்கிறார்."
மூன்றாவது கோணம்
DL-188
ஜக்கி வாசுதேவ்
விகடன் பிரசுரம்.
" அத்தனைக்கும் ஆசைப்படு, உனக்காகவே ஒரு ரகசியம், கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்' வரிசையில் இந்த மூன்றாவது கோணம் சத்குருவின் ஆக்கத்தில்."
அர்த்தமுள்ள இந்துமதம்
DL-189
கவிஞர். கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்.
" இந்து மதத்தில் நடக்கக் கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் சடங்கிற்கும் அர்த்தமுண்டு என்ற கருத்துகளை எல்லாம் பாமர மக்கள் படித்து அறிந்து கொள்ளும் வகையில் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் 'தினமணிகதிர்' மூலம் எழுதி வந்த பத்து பாகங்களும் அடங்கிய புத்தகம்."
ஸ்ரீமத் பகவத்கீதா
DL-190
கீதா பப்ளிகேஷன்
" கீதையின் மூலம் பதவுரை மற்றும் விளக்கம்"