நாவல் (பகுதி -1)

மனிதனின் உணர்ச்சிகள், எண்ணங்கள், அவனது செயல்களை விளக்கி உரைநடையில் அமைந்த நீண்ட கதை "நாவல்" (புதினம்). Novela என்ற இத்தாலி மொழியிலிருந்து வந்தது. நாவல் இலக்கியத்தின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. ஆனால் பத்தாம் நூற்றாண்டில் சீனாவில் பெரு நாவல் என்ற மரபு இருந்திருக்கிறது. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1876),
கமலாம்பாள் சரித்திரம் - இராஜமய்யர் (1896), பத்மாவதி சரித்திரம் - அ.மாதவையா (1898) இந்த மூன்றும் தமிழின் முதன்மையான நாவல்கள். இலக்கியத்தில் நாவல் என்ற கலையின் வளர்ச்சிக்கு உலகமெங்கும் வெளிவந்த புத்தகங்களே சாட்சி. அத்தகைய நாவல்களின் தொகுப்பு நூல் அகத்தின் முதல் பகுதியாக.  

ஓநாய் குலச்சின்னம்
DL-091
ஜியாங் ரோங்
தமிழில்: சி.மோகன்
அதிர்வு பப்ளிக்கேஷன்.

" மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின்‌ மகத்தான நாகரிகம்‌, நவீனத்துவத்தின்‌ வன்முறைத்‌ தாக்குதல்களால்‌ மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் 'ஓநாய்‌ குலச்சின்னம்‌'. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர்‌ கொண்டிருந்த மேய்ச்சல்‌ நிலம்‌ என்ற பெரிய உயிர்‌ சில ஆண்டுகளுக்குள்ளாக படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின்‌ புனைவு. ஓநாய்‌ குலச்சின்னமானது மேய்ச்சல நிலத்தின்‌ ஆன்மா."

யார் அறிவாரோ
DL-092
மஹாபளேஷ்வர் ஸைல்
தமிழில்: இ.ரா.தழிழ்ச்செல்வன்
காலச்சுவடு பதிப்பகம்.

"கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத்‌ தமிழுக்கு நூல்வடிவில்‌ வெளிவரும்‌ முதல்‌ படைப்பு “யார்‌ அறிவாரோ.” காட்டில்‌ தனிமையில்‌ வாழும்‌ வனப்‌ பாதுகாவலாளி ஒருவன்‌ தன்னை எரிக்கும்‌ காமத்தை எதிர்கொள்ளும்‌ விதமும்‌ அதனையொட்டிய மனப்‌ போராட்டங்களுமே கதையின்‌ மையம்‌. வாசிப்போரின்‌ அகத்தே விளம்பும்‌ எண்ணற்ற செய்திகள்‌ கதையிலுண்டு. - தனிமையின்‌ சலிப்பான பொழுதுகள்‌, ஒழுங்கின்மையுடன்‌ ஒவ்வாது நிற்கும்‌ காமம்‌, நோய்க்கூறு நிரம்பிய சமூகப்‌ போக்கு இவையனைத்தும்‌ கதையில்‌ கவனிக்கத்தக்கவை. நிஜத்தில்‌ கடந்துவந்த மனிதர்களைக்‌ கதையிலும்‌ கடக்க நேரிடுகிற அனுபவம்‌ வாசிப்போருக்கு வாய்க்கும்‌."

பசி
DL-093
எலிஸ் பிளாக்வெல்
தமிழில்: ச.சுப்பாராவ்
பாரதி புத்தகாலயம்.

" புகழ்பெற்ற உயிரியலாளரான நிகோலாய்‌ வாவிலோவ்‌ உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான தாவரங்கள்‌, விதைகளின்‌ மாதிரிகளை சேகரித்து, லெனின்கிராடில்‌ உள்ள "ரிசர்ச்‌ இன்ஸ்டிட்டூட்‌ அஃப்‌ பிளாண்ட்‌ இண்டஸ்ட்ரியில்‌" வைத்திருந்தார்‌. ஸ்டாலின்‌ காலத்தில்‌ சோவியத்‌ விவசாயத்துறையை மெல்ல மெல்ல தன்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டு வந்த ட்ரோம்‌ லைசென்கோவின்‌ மரபியல்‌ எதிர்ப்புப்‌ பிரச்சாரத்திற்கு வாவிலோவ்‌ இரையானார்‌. சிறையில்‌ நடத்தப்பட்ட விதமும்‌, பட்டினியும்‌ ஏதொவொரு விகிதத்தில்‌ இணைப்பது 1942 அல்லது 1943ல்‌ வாவிலோவ்‌ சிறையில்‌ மரணமடைவதற்கு காரணமானது. அவரது சகாக்கள்‌ மற்றும்‌ ஊழியர்கள்‌ பலரும்‌ சிறையிலடைக்கப்பட்டனர்‌. நாடு கடத்தப்பட்டனர்‌. கூட்டுப்‌ பண்ணைகளில்‌ வேலைக்கு அனுப்பப்பட்டனர்‌. அல்லது பணிநீக்கம்‌ செய்யப்பட்டனர்‌. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையால் லெனின்‌ கிராட்‌ முற்றுகையின்‌ போது, எஞ்சியிருந்தவர்கள்‌ வாவிலோவின்‌ சேகரிப்புகளை எலிகளிடமிருந்தும்‌, மனிதர்களிடமிருந்தும்‌, தம்மிடமிருந்தும்‌ பாதுகாத்தனர்‌. அச்சமயத்தில்‌ அங்கு நிகழ்ந்த கதைதான்‌ இது. இந்தக்‌ கதாபாத்திரங்கள்‌ கற்பனையே. இன்று வாவிலோவ்‌ இன்ஸ்ட்டிட்யூட்‌ என்றழைக்கப்படும்‌ அந்த இடத்தில்‌ பணியாற்றிய வீரஞ்செறிந்த மக்களை எந்தவிதத்திலும்‌ அடிப்படையாகக்‌ கொண்டவை அல்ல."

மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
DL-094
டயான் ப்ரோகோவன்
தமிழில்: ஆனந்த்
காலச்சுவடு பதிப்பகம்.

"இச்சிறியதொரு நாவலில்‌ வாசகனுக்கு மாபெரும்‌ வாழ்க்கைச்‌ சித்திரத்தை அளிக்கிறார்‌ டயான்‌. நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள்‌ வாசக மனங்களில்‌ எழுப்பும்‌ பிம்பங்கள்‌ பற்றிய துல்லியமான அவதானம்‌ நூலாசிரியரிடம்‌ இருக்கிறது. 
நாவலின்‌ ஒரு சொற்றொடர்‌ நம்‌ மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச்‌ சென்றுவிடும்‌ நுட்பம்‌ வியப்பூட்டக் கூடியது."

குற்றப் பரம்பரை
DL-095
வேல ராமமூர்த்தி
டிஸ்கவரி புக் பேலஸ்.

" கதைக்‌ ௧ரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும்‌ பெறப்படுவதில்லை. வாழ்வியலோடு படைப்பாளியால்‌ பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்குத்‌ தரப்படுகிற அம்சமாகும்‌. நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின்‌ விசயங்களிலிருந்து கதைக்‌ கருவை உருவாக்கி வாசகனுக்குத்‌ தருவது லேசுப்பட்ட விசயமல்ல. அனுபவப்பட்ட மனிதர்களிடமிருந்து தான்‌ கதைக்கரு எடுக்கப்படுகிறது. வேல ராமமூர்த்தியின்‌ மனப்பதிவுகள்‌ எனும்‌ சேமிப்பறையில்‌ முரட்டுத்தனமாகவும்‌, இளக்கமாகவும்‌ உருவாக்கப்பட்ட ௧ரு, மறு உருவாக்கம்‌ செய்யும்படி தூண்டியிருக்கிறது. அதன்‌ விளைவே குற்றப்பரம்பரை நாவல்‌."

நோர்வீஜியன் வுட்
DL-096
ஹாருகி முரகாமி
தமிழில் க.சுப்பிரமணியன்
எதிர் வெளியீடு.

" டோரு வாட்டனபி, அவனது விருப்பத்துக்குரிய பீட்டில்ஸ்‌ பாடலைக்‌ கேட்க நேர்கையில்‌, அவனது உற்ற நண்பனான கிஸூகியுடனான காதல்‌ ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. உடனடியாக அவன்‌ கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முந்தைய டோக்கியோவில்‌ அவனது மாணவப்‌ மருவத்துக்கு அசாதாரணமான நட்பு, சுதந்திரமான பாலுறவு, காதல்‌ இழப்பு, ஆசை சார்ந்த உலகத்துக்குத்‌ திரும்புகிறான்‌. அச்சமயம்‌ அவனது வாழ்வினுள்‌ மிடோரி எனும்‌ இளம்பெண்‌ குறுக்கிட, 
கடந்தகாலமா, எதிர்காலமா எதைத்‌ தேர்வு செய்வது எனும்‌ இக்கட்டுக்கு ஆளாகிறான்‌."

வெட்கை
DL-097
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ்.

ஒரு கொலை மற்றும்‌ அதன்‌ பின்னணி, இவற்றின்‌ மூலமாக: சாதியக்‌ கட்டமைப்பு, தண்டனைச்‌ சட்டம்‌, சமூக அரசியல்‌ என அனைத்தையும்‌ விமர்சனத்திற்கு. 
உட்படுத்துகிறது வெக்கை நாவல்."

மேடம் பவாரி
DL-098
குஸ்தாவ் ஃப்ளாபர்
தமிழில்: கோ.பரமேஸ்வரன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

"பிரெஞ்சு இலக்கியம்‌ உலக இலக்கியத்துக்குப்‌ பற்பல கொடைகள்‌. அளித்துள்ளது. அதன்‌ முதல்‌ வரிசையில்‌ “மேடம்‌ பவாரி'” இடம்பெறும்‌. அது வெளிவந்தபோது இலக்கிய வானில்‌ புயலைக்‌ கிளப்பியது. அதன்‌ அசிரியர்‌ குஸ்தாவ்‌ ஃப்ளாபர்‌ சமுதாயத்தின்‌ ஒழுங்கையும்‌ மதநம்பிக்கையையும்‌ கெடுப்பதாகக்‌ கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு இறுதியில்‌ விடுதலை செய்யப்பட்டார்‌. 1870-இல்‌ “மேடம்‌ பவாரி” உண்மையை எழுத வேண்டும்‌ என்ற எண்ணமுடைய எழுத்தாளர்களால்‌ புகழப்பட்டது. எழுத்தாளர்‌ எதையும்‌ தீர்ப்புக்‌ கூறக்‌ கூடாது. போதனை செய்யக்கூடாது. அனால்‌ நடுநிலைமை வகிக்க வேண்டும்‌ என்ற அவருடைய எழுத்தின்‌ கோட்பாடு எல்லோராலும்‌ பின்பற்றப்பட்டது."

செம்மீன்
DL-099
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
சாகித்திய அக்காதெமி.

" செம்மீன்‌ 'மீனவார்‌ சமூகத்துக்கதை. செம்பன்‌ குஞ்கவின்‌ வாழ்கையையும்‌ வீழ்ச்சியையும்‌ சொல்லும்‌ கதை; கடற்கரைக்‌ கன்னி கறுத்தம்மாவின்‌ தூய காதல்‌ கதை; தனது செயல்‌ ஒரு தியாகம்‌ என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின்‌ கதை; ஊக்கமும்‌ உற்சாகமுமே உருவான சக்கியின்‌ உழைப்புக்‌ கதை; அண்மையும்‌ ரோஷமும்‌ மிக்க இளைஞன்‌ பழனியின்‌ கதை; மேலைக்கடல்‌ அன்னையின்‌ செல்லக்‌ குழந்தைகளது நித்தியக்‌ கதை. எளிய கதாபாத்திரங்களையும்‌ சாதாரண சம்பவங்களையும்‌ : கொண்டு வரைந்த அழியா வண்ணச்‌ சொற்சித்திரம்‌ செம்மீன்‌."

அன்னா கரினினா
DL-100
லியோ டால்ஸ்டாய்
வ.உ.சி நூலகம்.

" உலகப்‌ புகழ்‌ பெற்ற மிகச்‌ சிறப்பான நாவல்களில்‌ அன்னா -கரினினாவும்‌ ஒன்று. ரஷிய ஆசிரியர்‌ டால்ஸ்டாய்‌ எழுதிய நாவல்‌ இது. அன்னா கரினினா முதன்மையாக அன்னா எனும்‌ உயர்குல பெண்ணின் ஆழ்ந்த தீவிரமான காதலை சித்தரிக்கும்‌ கதைதான்‌. எனினும்‌, பல ரகமான மனிதர்களின்‌ - அவர்‌ காலத்திய ரஷ்யாவின்‌ செல்வச்‌ சீமான்கள்‌ நடத்திக்‌ கொண்டிருந்த - சோம்பேறித்‌ தனமான ஆடம்பர உல்லாச வாழ்க்கையை, அவர்களது செயல்களை, எண்ணங்களை, பொழுது போக்குப்‌ பேச்சுகளை உள்ளத்தின்‌ இயல்புகளை எல்லாம்‌ உள்ளது உள்ளபடி கலைத்‌ தன்மையோடு விவரிக்கும்‌ நாவலாகவும்‌ அது அமைந்துள்ளது."

ரத்தம் விற்பவனின் சரித்திரம்
DL-101
யூ ஹுவா
தமிழில்: யூமா வாசுகி
சந்தியா பதிப்பகம்.

" ரத்தம்‌ விற்பவனின்‌ சரித்திரம்‌” சீனாவின்‌ மையப்பகுதிக்கு நம்மை இட்டுச்‌ செல்கிறது. சாதாரண சீனர்கள்‌ வாழும்‌ நகரங்களுக்கும்‌ தெருக்களுக்கும்‌ முன்வாசலுக்கும்‌ அடுக்களைக்கும்‌ படுக்கையறைக்கும்‌ நம்மை நகர்த்திச்‌ செல்கிறது. இவர்கள்‌ மாபெரும்‌ வீரர்களோ அல்லது அரசியல்வாதிகளே இல்லை. கண்ணியத்தோடும்‌ நம்பிக்கையோடும்‌ வாழ எத்தனிக்கும்‌ இவர்களது துணிவும்‌ முனைப்புமே இவர்களை உண்மையான அருஞ்செயல்‌ வீரர்களாக்குகின்றன. இந்நூல்‌ ஒரு மாணிக்கக்கல்‌."

செஹ்மத் அழைக்கிறாள்
DL-102
ஹரீந்தர் சிக்கா
தமிழில்: எம்.ஏ.சுசீலா
நற்றிணை பதிப்பகம்.

" 1971ஆம்‌ ஆண்டு, இந்தியாவுக்கும்‌, பாகிஸ்தானுக்ககும்‌ இடையே போர்ப்‌ பதட்டம்‌ மிகுந்திருந்த ஒரு கால கட்டம்‌. ஒரே ஒரு இரகசியத்‌ தகவல், வரவாற்றையே புரட்டிப்‌ போட்டு விடக்‌ கூடும்‌! அந்த ரகசியம்‌ இப்போது செஹ்மத்‌ கையில்!... உண்மைச்‌ சம்பவங்களின்‌ அடிப்படையில்‌ உருவாகியிருக்கும்‌ 'செஹ்மத்‌ அழைக்கிறாள்‌' நாவல்‌, உளவு வேலையில்‌ ஈடுபடும்‌ ஒரு பெண்‌ குறித்த துப்பறியும்‌ நாவல்‌ மட்டுமல்ல. இந்திய பாகிஸ்தான்‌ பேரில்‌ முகம்‌ தெரியாமல்‌ போன ஒரு கதாநாயகியின்‌ வீர வாழ்க்கை வரலாறும்‌ கூடத்தான்‌."

எரியும் பனிக்காடு
DL-103
பி.எச்.டேனியல்
தமிழில்: இரா.முருகவேள்
விடியல் பதிப்பகம்.

"உழைக்கும்‌ மக்களின்‌ வரலாற்றில்‌ மிக இருண்ட ஓர்‌ அத்தியாயத்தைப்‌ பற்றிப்‌ பேசும்‌ “ரெட்‌ டீ"ஆங்கிலத்தில்‌ எழுதப்பட்டு முப்பத்தி எட்டு ஆண்டுகள்‌ கழித்து முதல்முதலாக எரியும்‌ பனிக்‌ காடாகத்‌ தமிழுக்கு வருகிறது. இன்றய எழில் மிகுந்த மலைநகரங்களையும்‌, அன்னியச்செலாவணியை அள்ளித்தரும்‌ தேயிலைத் தோட்டங்களையும்‌ கட்டியமைக்கக்‌ கூட்டங்கூட்டமாகப்‌ பலிகொடுக்கப்பட்ட, அந்தக்‌ கண்கவரும்‌ பசிய சரிவுகளில்‌ புதையுண்டுபோன ஆயிரமாயிரம்‌ ஒடுக்கப்பட்ட மக்களின்‌ கதைதான்‌ "எரியும்‌ பனிக்காடு”. தமிழ்‌ இலக்கியம்‌ மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட இரத்தம்‌ தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின்‌ கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம்‌ கண்முன்‌ நிறுத்துகிறது எரியும்‌ பனிக்காடு."

லஜ்ஜா (அவமானம்)
DL-104
தஸ்லிமா நஸ்ரின்
கிழக்கு பதிப்பகம்.

"டிசம்பர்‌ 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள்‌ அயோத்தியில்‌ பாபர்‌ மசூதியைத்‌ தரைமட்டமாக்கினார்கள்‌. சுதந்திரம்‌ அடைந்ததில்‌ இருந்தே 
பெரும்பான்மை இஸ்லாமியர்களால்‌ ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேசின் இந்துக்களின்‌ வாழ்க்கை பாபர்‌ மசூதி உடைப்பைத்‌ தொடர்ந்து நகரமானது. இஸ்லாமிய மதவெறிக்‌ கும்பல்கள்‌ பங்களாதேசத்தில்‌ வசிக்கும்‌ ஒவ்வொரு இந்துவையும்‌ தேடிப்‌ பிடித்துத்‌ தாக்கின. இந்துக்களின்‌ உடமைகள்‌ நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப்‌ பெண்கள்‌ கொடூரமாகப்‌ பாலியல்‌ வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்‌. ஒரு மசூதி உடைப்புக்குப்‌ பதிலடியாக ஓராயிரம்‌ கோவில்கள்‌ தரைமட்டமாக்கப்பட்டன. 

இஸ்லாமிய கட்சிகள்‌, இஸ்லாமிய நண்பர்கள்‌, அரசியல்‌ அமைப்புகள்‌, ஊட்கங்கள்‌, கம்யூனிஸ்ட்டுகள்‌ என அனைத்துத்‌ தரப்பாலும்‌ கைவிடப்‌ பட்ட இந்துக்களின்‌ சோகம்‌ உலுக்கியெடுக்கும்‌ வகையில்‌ இந்நாவவில்‌ விவரிக்கப்பட்டுள்ளது. 

எதிரொலியாக, இந்தியாவில்‌ இருக்கும்‌ சிறுபான்மை முஸ்லிம்கள்‌ பதிலடி கொடுக்கிறார்கள்‌. பங்களாதேசத்தில்‌ வாழும்‌ சிறுபான்மை இந்துக்களோ பெரும்பான்மை முஸ்லிம்களால்‌ அடித்துக்‌ கொல்லப்படு கிறார்கள்‌. இந்தியாவில்‌ நடப்பது ஹிந்து முஸ்லிம்‌ கலவரம்‌. ஆனால்‌ பங்களாதேசத்தில்‌ நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும்‌ பங்களாதேசத்துக்கும்‌ உள்ள வேறுபாடு, அதுவே இந்துக்களுக்கும்‌ முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை இந்நாவலில்‌ விவரிக்கிறார்‌, பிறப்பால்‌ முஸ்லிமான நாவலாசிரியர்‌ தஸ்லிமா நஸ்ரின்‌, 

இந்துச்‌ சிறுபான்மையின்‌ வேதனை வரலாற்றை எவ்விதப்‌ பாசாங்கு மில்லாமல்‌ பதிவு செய்யும்‌ இந்த நாவல்‌, மிகு அபூர்வமான, முக்கியமான ஆவணமாகவும்‌ இருக்கிறது."

கோபல்ல கிராமம்
DL-105
கி.ராஜநாராயணன்
அன்னம் பதிப்பகம்.

"கட்டபொம்மு காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஆந்திராவிலிருந்து பல காரணங்களால்‌ குடி கிளம்பி வந்து தமிழ்நாட்டில்‌, குருமலைச்‌ சரிவுகளில்‌ குடியேறிய கம்மவாரின்‌ வரலாற்றை நாட்டுமக்களின்‌ கண்ணோட்டத்தில்‌ காண்கிறது இந்த நாவல்‌."

கிளாரிந்தா
DL-106
அ.மாதவையா
அடையாளம் பதிப்பகம்.

"இந்த நூல்‌ பதினெட்டாம்‌ நூற்றாண்டின்‌ நடுப்பகுதியைக்‌ களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின்‌ தமிழாக்கம்‌. கதை, வரலாற்றை அடிப்படையாகக்‌ கொண்டு வரையப்பட்ட ஓர்‌ உண்மையான கிளாரிந்தாவைப்‌ பற்றியது. அவர்‌ ஒரு மராட்டிய பிராமண விதவை. அவருடைய கணவர்‌ தஞ்சை அரசரின்‌ பணியாட்களில்‌ ஒருவர்‌. கிளாரிந்தா தம்‌ கணவரின்‌ மரணத்திற்குப்‌ பிறகு, உடன்கட்டை ஏறும்‌ நிலைக்கு ஆளாகிறார்‌. அதிலிருந்து அவரை மீட்கும்‌ லிட்டில்டன்‌ என்ற ஆங்கில அதிகாரி, பிறகு அவருடனேயே இணைந்து வாழ்கிறார்‌. இந்த அசாதாரணமான பெண்ணை மையமாகக்‌ கொண்டது இந்த நாவல்‌. காலப்போக்கில்‌ கிளாரிந்தா தம்‌ வாழ்க்கையைக்‌ கட்டுக்குள்‌ எடுத்துக்கொண்டது மாதவையாவுக்குப்‌ பிடித்த சில மையக்கருவை விரிவாக்கிக்‌ கொள்ளும்‌ வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம்‌ பெண்‌ கல்வி, சதி, விதவை மறுமணம்‌, இந்து-கிறிஸ்தவ மதங்களுக்கிடையே நிலவும்‌ வேறுபாடுகள்‌ ஆகியவற்றை விசாரணைக்குள்ளாக்குகிறார்‌. மேலும்‌, இந்நாவலின்‌ அடிநாதமாக விளங்கும்‌ பண்பாட்டுக்‌ கலப்பும்‌ . கலப்புமத உறவும்‌ வழக்கத்திற்கு மாறானவையாகவும்‌ அளவிடற்கரிய ஆர்வத்தைத்‌ தூண்டுபவையாகவும்‌ இருக்கின்றன."

பாரபாஸ்
DL-107
பேர் லாகர் குவிஸ்ட்
தமிழில்: க.நா.சு
அன்னம் பதிப்பகம்.

" குருட்டு நம்பிக்கைக்கும்‌ நாஸ்திகத்துக்கும்‌ இடையே உள்ள போராட்டத்தை, அதி அற்புதமாக, கலை உணர்வுடன்‌ இந்நாவலில் சித்தரிக்கிறார்‌ ஆசிரியா்‌. இன்றைய ஸ்வீடிஷ்‌ இலக்கியத்தின்‌ கொழுந்தென்று பாரபாஸைச்‌ சொல்லவேண்டும்‌. இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின்‌ போக்கையே ஒரு குலுக்குக்‌ குலுக்கி ஆட்டிவைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின்‌, கிறிஸ்தவ மதத்தின்‌ ஆரம்பத்தை, ஒப்பாதவன்‌ ஒருவனின்‌ கண்களின்‌ மூலம்‌ நமக்கு மிகவும்‌ அற்புதமாக அறிமுகம்‌ செய்து வைக்கிறார்‌ லாரகர்குவிஸ்டு. இந்தச்‌ சிறு நாவலுக்கு 1951-ல்‌ நோபல்‌ இலக்கியப்‌ பரிசு அளிக்கப்பட்டது."

கடல்
DL-108
ஜான் பான்வில்
தமிழில்: ஜி.குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்.

" துயரம்‌, நினைவுகள்‌, காதல்‌ இவை மூன்றும்தாம்‌ ஜான்‌ பான்வில்லின்‌ 'கடலை' உருவாக்கியிருக்கும்‌ கூறுகள்‌, 

கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ்‌ மார்கன்‌, மனைவி அன்னாவின்‌ மறைவுக்குப்‌ பிறகு இளம்‌ பருவத்தில்‌ விடுமுறையைக்‌ கழித்த கடலோர கிராமத்துக்குத்‌ திரும்பவும்‌ வருகிறார்‌. பிள்ளைப்பிராயக்‌ கோடைக்‌ காலத்தில்‌ பார்த்த கிரேஸ்‌ குடும்பத்தினரின்‌ தினைவுகள்‌ முதுமைப்‌ பருவத்தில்‌ அவருடைய தற்கால நிகழ்வுகளுடன்‌ பின்னிப்பிணைந்து இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. திருமதி கிரேஸ்‌, அவருடைய இரண்டு பிள்ளைகளான க்ளோயி, க்ளேயார்‌ 
ஆகியவர்களுக்கிடையில்‌ மாக்ஸுக்கு நேரும்‌ உறவும்‌ அதைத்‌ தொடர்ந்து நிகழும்‌ 
மன நகர்வுகளும்‌ விரிவாகவும்‌ நுட்பமாகவும்‌ நாவலில்‌ விவரிக்கப்படுகின்றன."

ஒரு புளியமரத்தின் கதை
DL-109
சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்.

" 1966 இல்‌ முதல்‌ பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகாகளின்‌ கவனத்தில்‌ இருந்துவரும்‌ ஓரு புளியமரத்தின்‌ கதை ஒரு நவீன செவ்வியல்‌ புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும்‌ இந்தியிலும்‌ மொழிபெயாக்கப்பட்டுள்ள இந்நாவலின்‌ ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின்‌ வெளியிட்டது. 2000-த்தில்‌ தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில்‌ மொழிபெயாக்கப்பட்ட இந்நாவல்‌ குறுகிய காலத்தில்‌ இரண்டு பதிப்புகள்‌ கண்டதுடன்‌ அம்மொழிக்குச சென்றுள்ள முதல்‌ இந்திய மொழி நூல்‌ என்ற பெருமையையும்‌ பெறுகிறது. தற்போது ஜொ்மனிலும்‌ மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ஓப்பீட்டிலக்கிய விமர்சகர்‌ கே. 
எம்‌. ஜார்ஜ்‌ இந்நாவலை நோபல்‌ பரிசு பெறத்‌ தகுதியானதெனக்‌ குறிப்பிடுகிறார்‌."

அஸீஸ் பே சம்பவம்
DL-110
அய்ஃபர் டுன்ஷ்
தமிழில் : சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம். 

" பின்னல்களாகச்‌ சித்தரிக்கப்பட்டிருக்கும்‌ எளிமையான கதை “அஸீஸ்‌ பே சம்பவம்‌.” ஒரு மனிதனின்‌ வாழ்க்கையில்‌ நடைபெற்ற சாதாரணச்‌ சம்பவங்களையே மையமாகக்‌ கொண்‌டிருக்கிறது. ஆனால்‌ அந்தச்‌ சம்பவங்களுக்குக்‌ காரணமான மனவோட்டங்களைச்‌ சித்தரிக்கும்‌ விதத்திலேயே பின்னல்கள்‌ உருவாகின்றன. இந்தப்‌ பின்னல்களில்‌ மறைந்திருக்கும்‌ புதிர்கள்‌தான்‌ வாசகனாக ஈர்த்தவை."

எண்ணும் மனிதன்
DL-111
மல்பா தஹான்
தமிழில்: கயல்விழி
அகல் பதிப்பகம்.

"எண்ணும்‌ மனிதனான பெரமிஸ்‌ சமீர்‌, தன்‌ அதீதமான கணிதத்‌ திறனால்‌ சிக்கல்களைத்‌ தீர்க்கிறான்‌. அறிவார்ந்த ஆலோசனைகள்‌ தருகிறான்‌, அபாயகரமான எதிரிகளை வெல்கிறான்‌. புகழும்‌ பொருளும்‌ பரிசுகளும்‌ பெறுகிறான்‌. மீண்டும்‌ மீண்டும்‌ வரும்‌ நீகழ்வுகள்‌ வழியே நம்மை ஒரு அற்புதப்‌ பயணம்‌ அழைத்துச்‌ செல்கிறான்‌. அவனுடன்‌ செல்லும்‌ நாம்‌ முன்னர்‌ வாழ்ந்த புகழ்பெற்ற கணித அறிஞர்களின்‌ வரலாற்றை அறிகிறோம்‌, 
மதிநுட்பம்‌ மிகுந்த மனிதர்களின்‌ கேள்விகளை அவன்‌ தன்‌ ஞானத்தாலும்‌ நிதானத்தாலும்‌ எதிர்கொள்ளக்‌ காண்கிறோம்."

உடைந்த குடை
DL-112
தாக் ஸூல்ஸ்தாத்
தமிழில்: ஜி.குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்.

" உலகின்‌ மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர்‌ பெற்றிருக்கும்‌ நார்வே நாட்டின்‌ குடிமகன்‌ ஒருவனை, இன்றைய காலகட்டத்தில்‌ எத்தகைய அடையாள சிக்கல்களும்‌ இருத்தலியல்‌ ஐயங்களும்‌ அலைக்கழிக்கின்றன என்பதைச்‌ சொல்லும்‌ நாவல்‌ இது. 

மிலன்‌ குந்தேராவின்‌ புகழ்பெற்ற நாவலான "The Umbearable Lightness of Being" இன்‌ நார்வேஜிய வடிவம்‌ என்று சொல்லக்கூடிய இந்நாவலில்‌ எலியாஸ்‌ ருக்லா என்ற மையப்‌ பாத்திரத்தின்‌ மூலமாக நவீன வாழ்வில்‌ சிக்குண்டிருக்கும்‌ மனிதன்‌ ஒவ்வொருவனும்‌ தனது அக உலகில்‌ விடை காண முடியாத சூட்சுமக்‌ கேள்விகளின்‌ மூலமாக தனது அடையாளத்தை தேடித்தேடித்‌ தோல்வியடைந்து மேலும்‌ தனிமைப்படுத்திக்‌ கொள்வதையும்‌, விரக்தியும்‌ உறவுகளோடு பாராட்டும்‌ போலி அன்பும்‌ மட்டுமே மிச்சமிருப்பதைக்‌ கண்டுகொள்வதையும்‌ தாக்‌ ஸூல்ஸ்தாத்‌ சித்தரிக்கிறார்‌."

கண் தெரியாத இசைஞன்
DL-113
விளாதீமிர் கொரலேன்கோ
தமிழில்: ரா.கிருஷ்ணையா
விகடன் பிரசுரம்.

" ரஷ்ய எழுத்தாளர்‌ கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில்‌ முக்கியமானது “கண்‌ தெரியாத இசைஞன்‌". ஒளியைத்‌ தேடும்‌ வேட்கை பார்வையற்றவர்களிடம்‌ இருப்பதை வலியுறுத்துவதே இந்தக்‌ கதை. இது முற்றிலும்‌ கற்பனைக்‌ கதையன்று. தாம்‌ சந்தித்த பார்வையற்ற திறமைசாலிகளை முன்வைத்து ஆசிரியர் இதைப்‌ பட்டை தீட்டியுள்ளார்‌. மனித மகிழ்ச்சியும்‌, அதனை அடையக்கூடிய வழிகளும்‌ இந்தக்‌ கதையில்‌ அலசப்படுகின்றன. கதாநாயகனான கண்‌ தெரியாத இசைஞன்‌ பியோத்தரைச்‌ சுற்றி நடமாடக்கூடிய, நம்பிக்கையளிக்கக்கூடிய அவனது தாய்‌, காதலி, மாமா ஆகியோர்‌ சமூகத்தில்‌ அவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டங்கள்‌. அன்பைப்‌ பொழியும்‌ ஆற்றலைக்கொண்ட இந்தக்‌ கதை மனித சமுதாயத்தின்‌ உயர்ந்த தன்மையை உணர்த்தக்‌ கூடியது." 

வணக்கம் துயரமே
DL-114
பிரான்சுவாஸ் சகன்
தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
காலச்சுவடு பதிப்பகம்.

" வணக்கம்‌ துயரமே' பிரஞ்சு இலக்கியத்தில்‌ பெரும்‌ தாக்கத்தை ஏற்படுத்திய நாவல்‌, நாவலாசிரியர்‌ 
பிரான்சுவாஸ்‌ சகன்‌ (1935 - 2004). மிக முக்கியமான படைப்பாளி - தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய இயக்கத்துடன்‌ பல சந்தர்ப்பங்களில்‌ முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள்‌ வெற்றிகரமாக திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம்‌ பெண்ணின்‌ மரபை மீறிய வாழ்க்கையைப்‌ பேசும்‌ இப்படைப்பு 
கடும்‌ தாக்குதலுக்கு உள்ளானது."

பாடும் பறவையின் மௌனம்
DL-115
ஹார்ப்பர் லீ
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
எதிர் வெளியீடு.

"1961 ஆம்‌ ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர்‌ பரிசு கொடுக்கப்பட்டது. முப்பதுகளில்‌ இனப் பிரிவினை வழக்கத்திலிருந்த அலபாமா நகரில்‌ வெள்ளையினத்தைச்‌ சேர்ந்த பெண்ணை பலாத்காரம்‌ செய்துவிட்டான்‌ என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நீக்ரோ இளைஞன்‌ டாம்‌ ராபின்சனுக்காக, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ஆட்டிகஸ்‌ ஃபின்ச்‌ வாதாட முன்வந்தார்‌. நகரத்தில்‌ இருந்த பெரும்பாலான வெள்ளையின மக்கள்‌ இதை விரும்பவில்லை. ஆனால்‌ ஒடுக்கப்பட்ட இனத்தவரின்‌ உரிமைக்காக வாதாடியே தீர்வேன்‌ என்கிற முடிவிலிருந்து ஆட்டிகஸ் சிறிதும்‌ விலகவில்லை. வழக்கின்‌ முழவு என்ன...? இந்த வழக்கினால்‌ அலபாமா இனப் பிரச்சனையில்‌ மாற்றம்‌ ஏற்பட்டதா..? நீக்ரோ இளைஞனின்‌ கதி என்னவாயிற்று... ஆட்டிகஸின்‌ ஆறு வயது மகள்‌ ஸ்கெளட்‌  ஃபின்ச்சின்‌ பார்வையில்‌ ஹார்ப்பர்‌ லீ விவரிக்கிறார்‌."

ரசவாதி
DL-116
பாலோ கொயலோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்.

"ஆன்மாவிற்குப்‌ பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம்‌, ஆன்டலூசியா பகுதியைச்‌ சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன்‌ ஒருவனைப்‌ பற்றியது. அவன்‌ , ஸ்பெயினில்‌ உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில்‌ புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத்‌ தேடி எகிப்தியப்‌ பாலைவனத்திற்குச்‌ செல்லுகிறான்‌. வழியில்‌ அவன்‌ ஒரு குறவர்குலப்‌ பெண்ணையும்‌, தன்னை ஓர்‌ அரசர்‌ என்று கூறிக்‌ கொள்ளுகின்ற ஓர்‌ ஆணையும்‌, ஒரு ரசவாதியையும்‌ சந்திக்கிறான்‌. அவர்கள்‌ அனைவரும்‌, அவன்‌ தேடிக்‌ கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுக்‌ செல்லக்கூடிய பாதையை அவனுக்குக்‌ காட்டுகின்றனர்‌. அது என்ன பொக்கிஷம்‌ என்பதோ, வழியில்‌ எதிர்ப்படும்‌ முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால்‌ சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள்‌ யாருக்கும்‌ தெரியாது. ஆனால்‌, லெளகிகப்‌ பொருட்களைத்‌ தேடுவதில்‌ தொடங்குகின்ற ஒரு பயணம்‌, தனக்குள்‌ இருக்கும்‌ பொக்கிஷத்தைக்‌ கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத்‌ , தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப்‌ போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின்‌ சக்திக்கும்‌ நம்முடைய இதயம்‌ சொல்லுவதைக்‌ கேட்க வேண்டியதன்‌ முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச்‌ சான்றாகும்."

கீதாரி
DL-117
சு.தமிழ்ச்செல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

தீவிர இயங்கு தன்மையும்‌ படைப்பூக்கமும்‌ இயல்பாகக்‌ கொண்ட சு.தமிழ்ச்செல்வியின்‌ மூன்றாவது நாவல்‌ "கீதாரி". வாழ்தலின்‌ நிமித்தம்‌ புலம்பெயரும்‌ அனுபவத்தின்‌ வலியை பொற்றேகாட்‌'டின்‌ “விஷக்‌ கன்னி"க்குப்‌ பிறகு அழுத்தத்தோடு விவரித்துச்‌ சொல்கிறது இந்நாவல்‌. மனிதகுலத்தின்‌ நெடிய வரலாறெங்கும்‌ காணக் கிடைக்கும்‌ தீராத அலைச்சலும்‌ மனக்கொதிப்பும்‌ வாழ்தலுக்கான வேட்கையும்‌ இயற்கை தன்னுள்‌ வைத்திருக்கும்‌ உயிர்களுக்கான ஆறுதலும்‌ இப்புனைவின்‌ பரப்பெங்கும்‌ உக்கிரம்‌ கொண்டுள்ளன."

வெண்ணிற இரவுகள்
DL-118
ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி
தமிழில்: ரா.கிருஷ்ணையா
எதிர் வெளியீடு.

" தஸ்தாயெவ்ஸ்கியின்‌ ஆரம்ப கால படைப்புகளில்‌ ஒன்று வெண்ணிற இரவுகள்‌. 1848 ம்‌ ஆண்டு வெளியாகி உள்ளது. 152 ஆண்டகள்‌ கடந்த போதும்‌ இன்று வாசிக்கையிலும்‌ கதாபாத்திரங்களின்‌ அடங்காத இதயத்‌ துடிப்பும்‌ காதலின்‌ பித்தேறிய மொழிகளும்‌ புத்தம்‌ புதியதாகவே இருக்கிறது. உலகில்‌ தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும்‌ அரிய காதல்கதை இது. 

இரண்டு ஆண்கள்‌ ஒரு இளம்‌ பெண்‌. மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள்‌. நான்கு இரவுகள்‌ ஒரு பகலில்‌ கதை முடிந்துவிடுகிறது. கதை முமுவதும்‌ ஒரே இடத்தில்‌ ஒரு ஆணும்‌ பெண்ணும்‌ சந்தித்து கொள்கிறார்கள்‌. பேசிக்‌ கொள்கிறார்கள்‌. முடிவில்‌ பிரிந்து போய்விடுகிறார்கள்‌. இதில்‌ எங்கேயிருக்கிறது காதல்‌ என்ற யோசனை உருவாகக்கூடும்‌. சந்திப்பு என்பதை இயல்பான ஒன்று என்ற தளத்திலிருந்து அபூர்வமானது என்ற தளத்திற்கு உயர்த்தி கொண்டு செல்வதன்‌ வழியே தஸ்தாயெஸ்கி காதல்‌ கதையை துவக்குகிறார்‌." 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
DL-119
ஜெயகாந்தன்
மீனாட்சி புத்தக நிலையம்.

"இந்தக்‌ கதையில்‌ வரும்‌ கல்யாணியோ ரங்காவோ காதலையே வாழ்க்கையின்‌ லட்சியமாகக்‌ கொண்டவர்கள்‌ அல்ல. வாழ்க்கையில்‌ அவர்கள்‌ இருவருக்குமே வேறு வேறு லட்சியங்களும்‌ வேறு வேறு காரியங்களும்‌ இருக்கின்றன. வாழ்க்கையின்‌ முழு அர்த்தத்தோடு வாழ்கிற யாரும்‌ எனக்கு இதுதான்‌ லட்சியம்‌, இது ஒன்று தான்‌ லட்சியம்‌' என்று பிரகடனப்படுத்திக்கொள்ள முடியாது. அவரவர்க்‌கும்‌ சல கொள்கைகள்‌, சில விருப்பு வெறுப்புக்கள்‌, சில 'கூடும்‌-கூடாதுகள்‌ என்று இருக்கின்றன. அதற்கு ஒப்ப வாழ முயல்வதே அவரவர்‌ வாழ்க்கையாய்‌ இருக்கிறது. அதனால்‌ இந்த வாழ்க்கைகளை லட்சியமற்ற வாழ்க்கை என்று சொல்ல முடியாது."

இரண்டு படி
DL-120
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: டி. ராமலிங்கம் பிள்ளை
சாகித்திய அகாதெமி.
" பண்ணை வேலை பார்க்கும்‌ புலையர்‌ என்னும்‌ சமூகத்தைப்‌ பற்றியும்‌ கடினமான, அகெளரவமான விதிகளுக்குக்‌ கட்டுப்பட்டு அவர்கள்‌ நிலச்‌ சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும்‌ இந்த நாவல்‌ விவரிக்கிறது. உண்மையை உள்ளபடியேதான்‌ கூறுகிறது கதை. ஆனால்‌ தகழியின்‌ அனுதாபம்‌ எந்தப்‌ பக்கம்‌ செல்கிறது என்பதை உணர்வது எளிது."

குன்றிலிட்ட தீ
DL-121
ஹிமான்ஷு ஜோஷி
தமிழில்: அலமேலு கிருஷ்ணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

" ஒரு கிராமத்தின்‌ கதை இது. கிராமத்தின்‌ பெயர்‌ எதுவாக இருந்தால்‌ என்ன? கதை மாந்தர்கள்‌ என்னென்ன பெயர்களில்‌ அழைக்கப்பட்டால்‌ என்ன? அவை அனைத்தும்‌ அவ்வளவு முக்கியமானவை அல்ல. இது, சமூகம்‌ உதாசீனம்‌ செய்து ஒதுக்கி வைத்த, சபிக்கப்பட்ட மக்களின்‌ வாழ்க்கை வரலாறு."

சிவப்புக் காதல்
DL-122
அலெக்சாண்டிரா கொலோண்டை
தமிழில்: சொ.பிரபாகரன்
புதுப்புனல் வெளியீடு.

இந்த நாவல்‌ அடிப்படையில்‌ அறவியல்‌ குறித்த ஒரு ஆய்வோ அல்லது சோவியத்‌ ரஷ்யாவில்‌ உள்ள வாழ்வின்‌ தரம்‌ குறித்த ஒரு உரைசித்திரமோ இல்லை. இது போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில்‌, உலக சமூகத்தில்‌ திலவிய பாலியல்‌ உறவுகள்‌ குறித்த ஒரு மனவியல்‌ ரீதியான ஆய்வு மட்டுமே."

மீன்காரத்தெரு
DL-123
கீரனூர் ஜாகிர்ராஜா
எதிர் வெளியீடு.

"மீன்காரத்‌ தெரு புனைவல்ல. 
இஸ்லாமிய விளிம்பு நிலைப்‌ பிரஜைகளின்‌ ரத்தமும்‌ சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில்‌ நடப்பதல்ல இது. சமூகத்தில்‌ எங்கும்‌ புரையோடிப்‌ போயிருப்பதுதான்‌. காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின்‌ மேல்‌, எழுத்தின்‌ மூலமாக வெளிச்சம்‌ பரப்பக்‌ கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும்‌ மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும்‌."

சதுரங்கக் குதிரை
DL-124
நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்.

" எழுத்து என்பது எனக்கு தவம்‌ அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல: ஆத்ம சோதனையோ சத்‌தய சோதனையோ அல்ல; பணம்‌ சம்பாதிக்கும்‌ முயற்சி அல்ல; பேரும்‌ புகழும்‌ தேடும்‌ மார்க்கம்‌ அல்ல; வாழ்க்கையை புரிந்து கொள்ளும்‌ முயற்‌சி; என்‌ சுயத்தை தேடும்‌ முயற்சி” என்று கூறும்‌ நாஞ்சில்‌ நாடனின்‌ நாவல்களும்‌ சிறுகதைகளும்‌ வாழ்வியல்‌ பற்று மிக்கவை. தமது மண்ணின்‌ நிறங்களையும்‌, குணங்களையும்‌ பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும்‌ இம்மை 
சிக்கல்கள்‌ பற்றிய கவலைகளை 
பகிர்ந்து கொள்பவை."

சந்திரகிரி ஆற்றங்கரையில்
DL-125
சாரா அபுபக்கர்
தமிழில்: தி.சு.சதாசிவம்
பரிசல் புத்தக நிலையம்.

"இந்நாவல்‌ முஸ்லிம்களிடையே எப்பொழுதும்‌ நடந்து கொண்டிருக்கும்‌ ஒரு சமூகப்‌ பிரச்சனையைத்தான்‌ சொல்கிறது. வாசிப்பில்‌ மிகச்‌ சாதாரணக்‌ கதையாகவே தோன்றும்‌. எந்தவித அலங்கார அணிகலன்கள்‌ இன்றி நேரிடையாகக்‌ கதை சொல்லப்படுகிறது. கதை மிகச்‌ சாதாரணமானதாக இருந்த  போதிலும்‌, ஆசிரியை இந்தக்‌ கதை வாயிலாகச்‌ சொல்லும் விஷயம்‌, ஆழ்ந்து சிந்திப்போமேயானால்‌ ரொம்பவும்‌ கனமானது என்று உணர முடியும்‌. கனமான ஒரு விஷயத்தை அடிப்‌ பிறழாமல்‌ ஒரு சாதாரணக்‌ கதை மூலம்‌ சாதாரண வாசகர்‌ 
மனங்களிலும்‌ கூட பதியும்படி எழுதியிருப்பது தான்‌ இந்நாவலின் சிறப்பு அம்சங்களில்‌ ஒன்று."

கழிமுகம்
DL-126
பெருமாள்முருகன்
காலச்சுவடு பதிப்பகம்.

"ஒரு தந்‌தை மகன்‌ உறவுக்குள்‌ நவீனச்‌ சமூகம்‌ உருவாக்கும்‌ இறுக்கத்தையும்‌ பதற்றத்தையும்‌, பழைமைக்குள்‌ மூழ்கித்‌ தொலையாமல்‌, புதுப்புனலாடும்‌ தீவிரத்தோடும்‌. சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும்‌ இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்கைக்கும்‌ மனிதனுக்குமான தொல்லுறவின்‌ அபேதத்திலிருந்து இருப்பின்‌ பரபரப்பை எதிர்கொள்ளும்‌ எளிய ஒளி கூடும்போது, மகனும்‌ தந்தையும்‌ அவரவர்‌ இடத்தில்‌ காலூன்றியபடியே காலத்தையும்‌ கல்வியையும்‌ பார்த்துச்‌ சிரிக்கிறார்கள்‌. இப்புன்னகையின்‌ உக்கிரமே கழிமுகம்‌."

பெருவலி
DL-127
சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்.

"அவளுக்கு வரலாறும்‌ கவிதையும்‌ தெரிந்திருந்தன. நடனமும்‌ இசையும்‌ தெரிந்திருந்தன. சிற்பக்‌ கலையிலும்‌ கட்டிடக்‌ கலையிலும்‌ நிபுணத்துவம்‌ இருந்தது. அவற்றைச்‌ சார்ந்து கனவு காணவும்‌ கனவை மெய்ப்பிக்கவும்‌ தெரிந்திருந்தது. அவளிடம்‌ யானைகளும்‌ குதிரைகளும்‌ ஒட்டகங்களும்‌ இருந்தன. அடிமைகள்‌ இருந்தனர்‌. கப்பல்கள்‌ இருந்தன. செல்வக்‌ களஞ்சியம்‌ இருந்தது. அதிகாரம்‌ இருந்தது. எனினும்‌, எது இருந்தால்‌ இவை மேன்மை பெறுமோ அந்தச்‌ சுதந்திரம்‌ இல்லாமல்‌ இருந்தது, காரணம்‌ ஜஹனாரா பெண்ணாக இருந்தாள்‌. முகலாயப்‌ பேரரசர்‌ ஷாஜஹானுக்கும்‌ அவரது அதீத நேசத்துக்குரிய மனைவி மும்தாஜ்‌ மஹலுக்கும்‌ பிறந்த குழந்தைகளில்‌ மூத்தவளான ஜஹனாரா பேகத்தைப்பற்றிய புனைவும் உண்மையும்."

மணற்குன்று பெண்
DL-128
கோபோ ஏப்
தமிழில்: ஜி.விஜயபத்மா
எதிர் வெளியீடு.

"உலகில்‌ இதுவரை 20 மொழிகளில்‌ இந்நாவல்‌ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'ஹிரோஷி தேஸிகாஹரா' என்பவரால்‌ திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற கேன்ஸ்‌ திரைப்பட விழாவில்‌ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப்‌, கம்யூனிஸ்ட்‌ கொள்கையால்‌ ஈர்க்கபட்டு அதில்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டவர்‌. அதன்‌ தாக்கத்தில்‌ பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம்‌ முன்வைக்கிறார்‌. நாவலின்‌ கதாநாயகனின்‌ பார்வையின்‌ வாயிலாக அவர்‌ நம்‌ முன்வைக்கும்‌ உள, சமூக மற்றும்‌ இருத்தலியல்‌ குறித்த விவாதங்கள்‌ கவனிக்கபட வேண்டியவை."

சிவகாமி பர்வம்
DL-129
ஆனந்த் நீலகண்டன்
தமிழில்: மீரா ரவிசங்கர்
மிஸ்டிக்ஸ்ரைட்.

"மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், அசத்தலான கதை களம்‌, துணிகரமான சூழ்ச்சிகள்‌                      நிரம்பி உள்ளன. வசீகரமான பிடிப்புள்ள கதை,பதவி,சக்தி, துரோகம்‌,வஞ்சகம், கயமை என்‌று சிவகாமியின் எழுச்சி என்‌எஸ்‌. ராஜமெளலியின் பாகுபலிக்கு ஏற்ற முன்கதை இந்த புத்தகம்."

வடக்கேமுறி அலிமா
DL-130
கீரனூர் ஜாகிர்ராஜா
எதிர் வெளியீடு

"வடக்கேமுறி இங்கே வெறிச்சோடிக்‌ கிடக்கிறது அலிமா... 'நீ இல்லாத மாளிகையைப்‌ பார்‌' என்றொரு பழைய தமிழ்த்‌ திரைப்படப் பாட்டு வரும்‌. பலாவும்‌ பப்பாளியும்‌ தென்னையும்‌ சூழ்ந்த உன்‌ வீட்டின்‌ முகப்பைப்‌ பார்க்கும்‌ கணமெல்லாம்‌ எனக்குள்‌ அந்த கானம்‌ ரீங்காரமிடுகிறது. இத்தனை செளகர்ய செளபாக்கியங்களை இழக்கும்‌ துணிச்சலை எங்கிருந்து பெற்றாய்‌? அல்லது இது உன்‌ விதிப் பயனா? வாழ்க்கை உன்னை ஏன்‌ இப்படியெல்லாம்‌ அலைக்கழிக்கிறது? அல்லது வாழ்க்கையை நீ பழி தீர்த்துக்‌ கொண்டிருக்கிறாயா. ஒன்றும்‌ எனக்குப்‌ புரியவில்லை. அத்தனை அறிவில்லை எனக்கு."

சிதைவுகள்
DL-131
சினுவ அச்சிபி
தமிழில்: ச. வின்சென்ட்
எதிர் வெளியீடு.

" ஆப்பிரிக்க இனத்திற்கென்று ஒரு பண்பாடு உண்டு, வரலாறு உண்டு, இலக்கியம்‌ உண்டு என்று வெள்ளை உலகிற்கு காட்டுவதைத்‌ தன்‌ முதற்‌ பணியக் கொண்ட சினுவ அச்சிபி தன்‌ நாட்டில்‌ குடியேறிய வெள்ளையர்களை அவர்கள்‌ மொழியிலேயே எதிர்‌ கொண்டார்‌. 

எளிய மக்களின்‌ கதை மொழி நேரடியாக தான்‌ அமையும்‌. எனவே தான்‌ சிதைவுகள்‌ மிக நேரடியாக ஆக்கன்கோ என்னும்‌ மல்யுத்த வீரனின்‌ ஊழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின்‌ வழியே மீட்டெடுக்கிறது... இன்றைய ஆப்பிரிக்க நிலத்தில்‌ சரி பாதிக்கும்‌ மேலான மக்கள்‌ கிறிஸ்துவத்திற்குள்ளும்‌, இஸ்லாத்திற்குள்ளும்‌ அடைக்கலம்‌ ஆகி விட அவர்களின்‌ கதைகளும்‌, கடவுள்களும்‌, ஆவிகளும்‌ இடமற்று அலைவதையே சிதைவுகள்‌ ஆக்கியிருக்கிறார்‌ சினுவ அச்சிபி."

கிழவனும் கடலும்
DL-132
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: எம்.எஸ்
காலச்சுவடு பதிப்பகம்.

கிழவனும்‌ கடலும்‌' வெளிவந்து 
70 ஆண்டுகளுக்கு மேல்‌ ஆகிறது. இன்றும்‌ வாசிக்கும்போது இது ஓரு அற்புதமான கதை. ஓரு தளத்தில்‌ மனிதனையும்‌ மீனையும்‌ பறறிய கதை, மற்றொரு தளத்தில்‌ மனிதனுக்கும்‌ இயற்கைக்குமான போராட்டம்‌, இன்னுமோர்‌ தளத்தில்‌ மானுடப்‌ பண்பாடு, துணிச்சல்‌, போர்க்குணம்‌ பற்றியது. பிறிதொரு தளத்தில்‌ அமெரிக்க வாழ்வின்‌ மையமாகத்‌ தனிமனிதன்‌ (குழுவோ அமைப்போ அல்ல) இருந்த காலகட்டத்தின்‌ கதை. வாழ்வுக்கான அவன்‌ போராட்டத்தின்‌ சித்திரம்‌ சிக்கனமான சொற்பிரயோகம்‌, தெறிக்கும்‌ விவரணைகளில்‌ தனிமனிதப்‌ போராட்டத்தைக்‌ கொண்டாடும்‌ படைப்பு. 

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
DL-133
ராகுலசாங்கிருத்யாயன்
தமிழில்: சௌரிராஜன்
அலைகள் வெளியீட்டகம்.

"ராஜஸ்தானத்து மன்னர்‌ பரம்பரையினரின்‌ அந்தப்புரங்களில்‌ உழலும்‌ பெண்களின்‌ இளமை கிளர்த்தும்‌ ஆசாபாசங்களையும்‌, இனிய இன்ப நினைவுகளையும்‌, ஏக்கம்‌ நிறைந்த தாபத்‌ துயர்களை யும்‌ சுவைபட இந்நூலில்‌ ராகுல்ஜி விவரித்திருக்கிறார்‌. அந்தப்புர மாந்தர்களை நேரில்‌ சந்தித்துச்‌ சேகரித்த உண்மைத்‌ தகவல்களை மூற்போக்கு நோக்குடன்‌ இலக்கிய மரபில்‌ வெளியிட்டிருக்கிறார்‌."

முதல் ஆசிரியர்
DL-134
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில்: பூ.சோமசுந்தரம்
பாரதி புத்தகாலயம்.

" ஊருக்கு வெளியே, மலை முகட்டில்‌ கைவிடப்‌ பட்ட ஒரு பழைய குதிரைக்‌ கொட்டடியே பள்ளிக்‌ கூடமாகிறது. ஊரே கேலிசெய்து புறக்கணிக்கிறது. ஆரம்பத்தில்‌ கவலையே படாமல்‌ அல்டினாய்‌ போன்ற சில குழந்தைகளைத்‌ தீரட்டி மாணவர்கள்‌ ஆக உட்காரச்‌ செய்கிறான்‌ தூய்ஷன்‌. அந்த குதிரைக்‌ கொட்டடியில்‌ தூய்ஷன்‌ தொடங்கி வைக்கிற அப்பள்ளியில்‌ ஒரு புதிய ஆச்சரியமான ஓர்‌ உலகம்‌ 'குக்குரவ்‌' கிராமத்துக்‌ குழந்தைகளுக்கு அறிமுகமாகிறது. அல்டினாயின்‌ ஆர்வம்‌, கற்பதில்‌ காட்டும்‌ வேக முனைப்பு கண்டு அவளைப்‌ பக்கத்து நகருக்கு உயர்நிலைப்‌ பள்ளிக்‌ கல்வி பெறுவதற்கென அழைத்துச்‌ செல்கிறான்‌ தூய்ஷன்‌. அவனே அவளின் முதல் ஆசிரியன். அவனே அந்த கிராமத்தின் முதல் ஆசிரியன். அவனின் கதைதான் இந்த உலகப் புகழ்பெற்ற புத்தகம்."

அவன் காட்டை வென்றான்
DL-135
கேசவ ரெட்டி
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு
நேஷனல் புக் டிரஸ்ட்.

" இந்த நாவலில்‌ மனித பாத்திரம்‌ ஒன்றே ஒன்றுதான்‌. அந்தப்‌ பாத்திரத்திற்கும்‌ பெயரில்லை, கிழவன்‌ என்ற பெயர்‌ மட்டுமே. அவன்‌ இருப்பிடம்‌ எந்த ஊரோ தெரியாது. கதை முழுவதும்‌ கிழவனைச்‌ சுற்றியே நடக்கிறது. இதில்‌ முக்கிய மனிதப்‌ பாத்திரம்‌ கிழவன்‌ என்றால்‌, மனிதரல்லாத முக்கியப்‌ பாத்திரம்‌ தாய்ப்பன்றி. இப்படைப்பு முழுவதும்‌ கிழவனும்‌ தாய்ப்பன்றியும்‌ சம்பந்தப்பட்டதே. இதிலுள்ள மற்ற பாத்திரங்கள்‌ விலங்குகள்‌, மலைகள்‌, மடுக்கள்‌, நீரோடைகள்‌, பள்ளத்தாக்குகள்‌, கல்‌ மண்‌! காடே இக்கிழவனின்‌ விளையாட்டு மைதானம்‌. மிருகங்களும்‌ செடி கொடிகளுமே கிழவனின்‌ நண்பர்கள்‌. அபாயங்கள்‌ அவனுக்கு வெல்லம்‌ போல. இந்த உலகமே தன்‌ கால்களுக்கடியில்‌ இருப்பது போலவும்‌, தான்‌ நினைத்தால்‌ தன்‌ கல்தூண்களைப்‌ போன்ற கால்களால்‌ இந்த உலகையே தூளாக்கிட முடியும்‌ என்ற உறுதியும்‌ அவனுடையது. தான்‌ உண்டாக்கிய தூளில்‌ தானும்‌ தூளாகி விட்டாலும்‌ பெரிதாக என்ன குடி முழுகிவிடும்‌ என்னும்‌ அலட்சியம்‌ அவனுக்கு."

கௌரவன்
DL-136
ஆனந்த் நீலகண்டன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்.

" நாமறிந்து மகாபாரதம்‌, குருச்சேத்திரப்‌ போரில்‌ வெற்றியடைந்த பாண்டவர்களின்‌ கண்ணோட்டத்தில்‌ எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும்‌ நயவஞ்சகமாகத்‌ தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள்‌ பக்கக்‌ கதையை எடுத்துரைக்க வருகிறான்‌ 'கௌரவன்‌' துரியோதனன்‌."

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
DL-137
அம்பை
காலச்சுவடு பதிப்பகம்.

"பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம்‌ பல்லாயிரக்கணக்கான பேர்கள்‌ வந்து குவியும்‌ மகா நகரமான மும்பையின் வாழ்க்கைப்‌ போக்குடன்‌ கலந்திருக்கும்‌ பெண்‌-ஆண்‌ உறவுச்‌ சிக்கல்கள்‌, மகிழ்ச்சி, குதூகலம்‌, ஏமாற்றம்‌, ஏக்கம்‌, தீராத நாட்டம்‌, சோகம்‌, வக்கிரம்‌, வன்முறை இவை எல்லாம்‌ கலந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும்‌ பெண்‌ ஒருத்தியின்‌ தொழில்முறை அனுபவங்கள மூலமாகக கூறும்‌ மூன்று நீண்ட கதைகள்‌."

புலப்படாத நகரங்கள்
DL-138
இடாலோ கால்வினோ
தமிழில்: சா.தேவதாஸ்
எதிர் வெளியீடு.

" இத்தாலியின்‌ பத்திரிகையாளரும்‌ நாவலாசிரியருமான இடாலோ கால்வினோ புதுவகையான கதை சொல்லலும்‌ விவரிப்பும்‌ சேர்த்து அற்புதமான நாவலாக புலப்படாத  நகரங்களை எழுதியிருக்கிறார்‌. விதவிதமான நகரங்களுக்குப்‌ போய்‌ வந்து தன்‌ அனுபவத்தை போலோ குப்ளாய்கானிடம்‌ விவரிப்பதும்‌ அதனைக்‌ கேட்டுவிட்டு மன்னர்‌ கேள்விகள்‌ கேட்பதுமாக நாவலை உருவாக்கியிருக்கிறார்‌."

பார்த்திபன் கனவு
DL-139
கல்கி
கிழக்கு பதிப்பகம்.

" தமிழில்‌ சரித்திரக்‌ கதைகளின்‌ முன்னோடி சிவகாமியின்‌ சபதம்‌, பொன்னியின்‌ செல்வன்‌ போன்ற சரித்திரக்‌ கதைகள்‌ அக்‌ காலத்தில்‌ வாசகர்களின்‌ மனத்தில்‌ இதிகாசம்‌ போலவே இடம்‌ பெற்றன. “பார்த்திபன்‌ கனவு” கல்கி வார இதழில்‌ தொடர்‌ கதையாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப்‌ பெற்றது."

கிடை
DL-140
கி. ராஜநாராயணன்
காலச்சுவடு பதிப்பகம்.

" கிடை காட்டும்‌ சமூக உறவுகள்‌ மிகவும்‌ இறுக்கமானவை. சாதி வேறுபாடும்‌ பொருளாதார ஏற்றத்தாழ்வும்‌ அங்கு இறுகிப்‌ பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின்‌ கலியாண ஊர்வலமும்‌ செவனியின்‌ பேயோட்டு வைபவமும்‌ இந்தச்‌ சமூக முரணை உக்கிரமாகக்‌ காட்டுகின்றன. கிராமத்தின்‌ சில வலியகரங்கள்‌, சில தனிமனிதர்களின்‌ வாழ்வை ரகசியமாக இறுக்கிக் கொண்டிருப்பதை இதில்‌ காண்கிறோம்‌. ஒரு கலை என்ற வகையில்‌ கிடை தான்‌ ராஜநாராயணனின்‌ படைப்புகளிலேயே சிகரம்‌."

இதுதான் என் பெயர்
DL-141
சக்கரியா
தமிழில்: சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்.

" சுதந்திர இந்தியாவின்‌ முதல்‌ அரசியல்‌ படுகொலை காந்தி வதம்‌. ஒரு பொருளில்‌ நாட்டின்‌ மதச்‌ சார்பின்மைக்கு விடப்பட்ட முதல்‌ அறைகூவலும்‌ அதுவே. காந்தியின்‌ மரணத்தில்‌ தொடங்கும்‌ இந்தப்‌ புனைவு மரணத்துக்கு முன்னும்‌ பின்னுமான இரண்டு நபர்களின்‌ காந்தியின்‌ கோட்சே, கோட்சேயின்‌ காந்தி உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல்‌ விசாரணையே சக்கரியாவின்‌ நாவல்‌."

அடிமைப் பெண்
DL-142
செல்மா லாகர் லாவ்
" அடிமைப்‌ பெண்‌ என்கிற இக்குறுநாவல்‌ “செல்மா லாகர்‌ லாவ்‌” என்பவரால்‌ எழுதப்பட்டது. இவர்‌ உலகப்‌ புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள்‌ ஒருவர்‌. சுவீடன்‌ நாட்டுப்‌ பெண்மணி. உலகில்‌ இலக்கியத்திற்கென நோபல்‌ பரிசினைப்‌ பெற்ற முதல்‌ பெண்மணி இவரேயாவார்‌."

பட்டத்து யானை
DL-143
வேல ராமமூர்த்தி
டிஸ்கவரி புக் பேலஸ்.

" ஆப்பநாடு என்றாலே வறட்சி, களவு, வெட்டு, குத்து, கொலை எனும்‌ திட்டமிட்ட கற்பிதங்‌களைப்‌ பொடியாக்கி, அங்கிலேயரை எதிர்த்த போரில்‌ ஆயிரமாயிரம்‌ வீரர்களை அள்ளிக்‌ கொடுத்த தியாக பூமியின்‌ மறைக்கப்பட்ட சரித்திரத்தை சொல்லும் நாவல்."