சிறுகதை.

அகம் என்றால் உள்ளே. நூல்கள் உள்ளிருக்குமிடம் நூலகம்.  கொஞ்சம் பிரித்திருக்கிறேன் அவ்வளவுதான். அடியேனிடம் இருக்கும் புத்தகங்களை விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தம் செய்வதுபோல் தூசுதட்டி துடைத்து பிரித்து "நூல் அகம்" என்ற இந்த பகுதியில் அழகாக அடுக்கி வைத்திருக்கிறேன். நல்ல புத்தகம் தூங்கங்கூடாது என்பார்கள் அதுபோல் புத்தகங்களை தூங்கவிடாமல் பிறர்களது வாசிப்பிற்கு கொடுக்கவும் அடியேனிடம் இருக்கும் புத்தங்களை காட்சிப்படுத்தவும் இந்த பகுதி உதவும் என நினைக்கிறேன். இந்த நூல் அகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவோ அல்லது வாசிக்க தேவைப்பட்டாலோ அடியேனை நிச்சையம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். 
(இந்த பக்கம் நூல் அகத்தின் சிறுகதை தொகுப்பிற்கு மட்டுமானது). 

அயல்வெளி
DL-007
எஸ். சங்கரநாராயணன்
வெல்லும் சொல் பதிப்பகம்.

" துருக்கி, குவைத், உருகுவே, நைஜீரியா, போலந்து, ஸ்பெயின், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா நாட்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். யாவுஸ் எகின்சி, சாத் அல்சனௌசி, ஹொராசியோ கிரோகா, சீமாமந்தா இங்கோசி அடிசி, ஹென்றிக் சியென்கிவிச், பெர்னாண்டோ அரம்புரு, பாட்ரிக் கேம்பெல், ஷெர்வுட் ஆன்டர்சன் போன்ற உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களை நீங்கள் சந்திக்கலாம்."

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்
DL-008
ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர்
தமிழில்: லியோ ஜோசப்
எதிர் வெளியீடு.

"வளம் கொழிக்கும் தாதுப்பொருட்கள் மண்ணில் புதையுண்டு கிடக்கும் வனாந்திரப் பகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில்,  ஒரு தொலைநோக்குப் பார்வையில், இரத்தமும் சதையும் கொண்ட திடகாத்திரமான பாத்திரங்களைப் படைத்து, அவர்களை அத்தனை கதைகளிலும் உலாவவிட்டிருக்கிறார் இந்த சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர்."

ஓலைப்பட்டாசு
DL-009
சுஜாதா
விசா பப்ளிகேஷன்ஸ்.

" குமுதம் வார இதழில் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் சுஜாதா அவர்கள் எழுதிய சிறுகதைகள் இவை. ஒரு சில மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இதிலிருப்பது சிறப்பு." 

கான் சாகிப்
DL-010
நாஞ்சில் நாடன்
தமிழினி பதிப்பகம்.

" அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் அறவுணர்வைத் தட்டியெழுப்பும் எழுத்திற்கு சொந்தக்காரரான நாஞ்சில் நாடனின் 17 சிறுகதைகளை இந்த புத்தகம் கொண்டிருக்கிறது.தழிழினி, உயிர் எழுத்து, டைம்ஸ், மணல்வீடு, தீராநதி, இருவாச்சி, சிக்கி முக்கி டாட் காம்,  போன்ற இணைய பக்கங்களிலும் சிறு பத்திரிக்கைகளிலும் வெளிவந்து பலரது பாராட்டுகளை பெற்ற சிறுகதைகள் இவை."

நதியின் மூன்றாவது கரை
DL-011
பிரபு காளிதாஸ்
உயிர்மை பதிப்பகம்.

" ஏழு தலைச்சிறந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தின் அரசியல் சீர்கேடு, வாழ்வின் அபத்தங்கள், அதன் வலிகள், வன்மம், முதலாளித்துவம் போன்ற உலகின் போக்கை எதார்த்தமாக விவரிக்கிறது."

நாக்கை நீட்டு
DL-171
மா ஜியான்
எத்திராஜ் அகிலன்
அடையாளம் பதிப்பகம்.

" திபெத்‌ எனும்‌ காற்றழுத்தம்‌ குறைந்த உயர்ந்த பீடபூமியில்‌ நடக்கும்‌ இந்த கதைகளின் நிகழ்வுகள்‌, உண்மைக்கும்‌ புனைவுக்குமான வேறுபாட்டைப்‌ பிரித்தறிய முடியாமல்‌ நம்மைத்‌ திணற வைக்கிறது. இதன்‌ மூலம்‌ அந்த எழுத்தாளர்‌ ஓர்‌ அயல்‌ கலாச்சாரத்தால்‌ அதன்‌ ஆழத்துக்கு இழுபட்டுச்‌ செல்கிறார்‌; அது அவருடைய கனவுகளிலும்‌ துன்புறுத்துகிறது. இதுவே படைப்பின்‌ வெற்றியாகவும்‌ அமைந்துவிடுகிறது."

கிளி எழுபது
DL-172
தமிழில்: ராஜ் கவுதமன்
தமிழினி.

" பஞ்சதந்திர கதைகளைப்போல் உருவான நூற்றுக்கணக்கான கதைகளையும்‌ கதைத்‌ திரட்டுகளையும்‌ கி.பி. 1200ல்‌ சோமதேவர்‌ 'கதா சரித்திர 
சாகரம்‌' என்ற பெருந்‌ தொகுப்பாகத்‌ திரட்டினார்‌. இத்திரட்டில்‌ உள்ளவற்றில்‌ ஒன்றுதான்‌ 'சுக சப்ததி' (கிளி எழுபது)."

நீலலோகிதம்
DL-173
ஷீபா இ.கே.
தமிழில்: யூமா வாசுகி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

" யதாரத்தத்துக்கும்‌ யதார்த்தமின்மைக்கும்‌ இடையில்‌ ஊசலாடும்‌ மொழி. நிறங்களின்‌ அதிஅழகான ஒத்திசைவு, இலக்கு பிறழாமல்‌ வந்து தைக்கும்‌ உணர்வுகள்‌. முகத்திலறைந்து நிற்க வைக்கும்‌ நிஜங்கள்‌... மனத்‌ தகிப்பில்‌ காய்ச்சிக்‌ குறுக்கிய கதைகள்‌. இந்த நூல்‌, எளிய வீச்சில்‌ விரியும்‌ வலையாக தன்‌ பரப்பை எல்லையற்று விஸ்தரித்தபடி இறங்குகிறது; தம்மை முற்றுமாய்க்‌ கொள்ள வேண்டி. கேரளத்தின்‌ சிறந்த படைப்பாளிகளில்‌ ஒருவரான ஷீபா இ.கே. அவர்களின்‌ இருபத்து மூன்று கதைகள்‌."

பதினான்காவது அறை
DL-174
தமிழில்: யூமா வாசுகி
நற்றிணை பதிப்பகம்.

" அச்சங்களின்‌ அழகைக்‌ கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர்‌ ஹிட்ச்காக்‌ தான்‌. மர்மத்‌ திரைப்படம்‌ எடுப்பது மட்டுமல்லாது அச்சம்‌ தரும்‌ திகில்‌ கதைகளைத்‌ தேர்ந்தெடுத்துத்‌ தொகுப்பதையும் தன்‌ கலைச்‌ செயல்பாடுகளின்‌ ஒரு பகுதியாக அவர்‌ செய்தார்‌. அவ்வாறு அவர்‌ தேர்ந்தெடுத்த சிறந்த ஏழு துப்பறியும்‌ கதைகளின்‌ தமிழாக்கம்தான்‌ இத்தொகுப்பு."

சூடிய பூ சூடற்க
DL-175
நாஞ்சில் நாடன்
தமிழினி.

" உந்தித்‌ தீயின்‌ வெம்மையும்‌, நாவின்‌ சுவை மொட்டுகளில்‌ சுடர்கிற அதன்‌ தன்மையுமாய்‌ வசப்படுகிற கதையுலகம்‌ மொத்தமும்‌ எளிய கிராமமொன்றின்‌ கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும்‌ இருளுமாய்‌ மனித வாழ்வின்‌ கீழ்மைகளும்‌ அவலங்களும்‌ ஊடாட நாஞ்சில்நாடன்‌ எனும்‌ கதைசொல்லியின்‌ கறாரான கூரல்‌ ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தீயும்‌ தன்‌ பசியாறி பிறர்‌ பசி மறுப்போரின்‌ கயமையை நொந்தும்‌, தீனம்‌ மாறும்‌ சூணம்‌ கொண்டோரைக்‌ கண்டு வெகுண்டும்‌ கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும்‌ எடுத்தெறிந்து பேசியும்‌ முகத்திலறைந்தும்‌ முணுமுணுத்தபடியும்‌ தொடா்கிறது. காட்சிகள்‌ மாறுகின்றன. முகங்களும்‌ மாறுகின்றன. நிலமும்‌ நீள்விசும்பும்‌ வேறாகி திரைகள்‌ விழுந்தும்‌ விரிந்தும்‌ கதையாடல்‌ நடந்தபடியே இருக்கிறது. அந்தக்‌ குரல்‌ மட்டும்‌ தன்‌ கதியில்‌ இருந்தபடி நடுவாண்மை பிசகாது எவர்க்கும்‌ அஞ்சாது யாவற்றையும்‌ உரசிப்‌ பார்த்து உள்ளதை உள்ளபடி சொல்கிறது, மெல்ல மெல்ல அந்தக்‌ கதைசொல்லியின்‌ குரலே காலத்தின்‌ குரலாகவும்‌ அறத்தின்‌ குரலாகவும்‌ ஒலிக்கத்‌ தொடங்குகிறது."

வெண்ணிலை
DL-176
சு.வேணுகோபால்
யுனைட்டட் ரைட்டர்ஸ்.

" மனித மனங்களைப் படிக்கும் 23 கதைகள். விவசாயம், பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றை பின்புலமாகக் கொண்டது"