வாழ்க்கை வரலாறு மற்றும் சுயசரிதை.
ஒருவரது வாழ்க்கையின் முழுமையான விரிவுரையே வாழ்க்கை வரலாறு ஆகும். இதில் தாமே தமது வரலாற்றை எழுதுவது சுயசரிதை எனப்படும். கி.மு44-ல் "கார்னீலியஸ் நீபோஸ்" என்பவர் "லைவ்ஸ் ஆஃப் அவுட்ஸ்டேன்டிங் ஜென்ரல்ஸ்" என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இதுவே முதல் சுயசரிதை நூலாக பார்க்கப்படுகிறது. எது எப்படியோ ஒருவரது வரலாறு என்பது அவரது ஆளுமையைக் காட்டுவதாகும். அத்தகைய வாழ்க்கை வரலாறு மற்றும் சுயசரிதை புத்கங்களின் தொகுப்பை நூல் அகத்தில் இந்த பக்கத்தில் காணலாம்.
எனது போராட்டம்
DL-050
ஹிட்லர்
தமிழில்: சா.சுப்பிரமணியன்
சாந்தி பப்ளிக்கேஷன்ஸ்.
" முதல் உலகப்போருக்கு பின்பு பவேரியாவில் சுமார் 13 மாதங்கள் சிறைபட்டுக்கிடந்தபோது ஹிட்லர் 'மெயின் காம்ப்' என்ற தனது சுயசரிதையின் முதல் பாகத்தை எழுதினார். பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி அதன் இரண்டாம் பாகத்தை முடித்தார். மெயின் காம்ப் என்ற ஜெர்மன் வார்த்தைக்கு 'எனது போராட்டம்' என்று பொருள். ஹிட்லரின் சுயசரிதை போல வேறெந்த நபரின் சுயசரிதம் இவ்வளவு தூரம் பிரசித்தி பெற்றதில்லை. ஒரு தேசத்தின் மக்கள் அதனை வேத நூலாக கருதவதன் ரகசியத்தை சுயசரிதையை படித்து தெரிந்துகொள்ளலாம்."
என் பின்னால் வா
DL-051
மருதன்
கிழக்கு பதிப்பகம்.
" கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி, தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் அதன் வரலாற்றை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசை கொட்டியவர் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் அழைப்பு விடுக்க தேசம் அவர் பின்னால் அணி திரண்டது. நூற்றாண்டு கால அடிமை வரலாற்றைத் திருத்தி எழுதி, சீனாவை ஒரு புதிய திசையில் அழைத்துச் சென்ற மாவோவின் சிலிர்ப்பூட்டும் புரட்சி வரலாறு இந்த புத்தகம்."
பச்சை விரல்
DL-052
வில்சன் ஐசக்
தமிழில்: எஸ்.ராமன்
காலச்சுவடு பதிப்பகம்.
" கேரளாவின் பாலா கிராமத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு மகளாகப் பிறந்த மேர்சி மாத்யூ எனும் சிறுமி மத்தியப் பிரதேசத்தின் கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருத்தியாகவே மாறி, அம் மக்களின் உரிமைக்காகப் போராடிய போராட்டகளம்தான் இந்த புத்தகம் பச்சை விரல். காடு சார்ந்த வாழ்க்கையால் விளங்குகளாகவே சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி, இந்திய அரசியல் சட்டம் தன் குடிமக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத் தந்த ஒரு போராளியின் கதை இது."
கலைவாணி
DL-053
ஜோதி நரசிம்மன்
எதிர் வெளியீடு.
" இது ஒரு திரைமறைவுத் தொழில். திடீரென்று கைது செய்வார்கள். பேப்பரில் ' விபச்சார அழகி கைது' என்று புகைப்படத்தோடு செய்தி வெளியிடுவார்கள். கோர்ட்டில் நிறுத்தி ஃபைன் கட்டச் சொல்வார்கள். பார்க்கிறவர்கள் காறித் துப்புவார்கள். உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. இந்த புத்தகம் ஒரு பாலியல் தொழிலாளியின் கதையைக் கொண்டது."
பொலிவியன் டைரி
DL-054
சே குவாரா
தமிழில்: N.ராமச்சந்திரன்
கண்ணதாசன் பதிப்பகம்.
" பொலிவியாவில் கொரில்லாப் படையில் இயங்கிய புரட்சியின் நாயகன் சேகுவாரா போராட்டத்தின் நடுவில் எப்போதாவது ஓய்வு கிடைத்த நேரத்தில் எழுதிய நாட்குறிப்பு இந்த புத்தகம். இந்த நாட்குறிப்பு அவரது கடைசி காலத்தில் எழுதப்பட்டவையாக இருக்க அவை நாளும் நடந்த நிகழ்வுகளை விவரமாகப் பகுப்பய்வு செய்தது மட்டுமல்லாமல் சில குறைபாடுகளையும், கடுமையான விமர்சனங்களையும் நடுநிலையோடு பதிவு செய்கிறது."
மயிலம்மா
போராட்டமே வாழ்க்கை
DL-055
ஜோதிபாய் பரியாடத்து
தமிழில்: சுகுமாரன்.
எதிர் வெளியியீடு.
" மயிலம்மா ஓர் ஆதிவாசிப் பெண்மணி. கைம்பெண்ணான நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே விரும்பியவர். பொதுப் பிரச்சனைக்காக முன்னணியில் நின்று பிளாச்சிமடைப் போராட்டத்தில் நாயாகியாக திகழ்ந்தவர். ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு மேலாக தொடந்த கோக்ககோலா ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பின்னணிக்கதை இந்த புத்தகம்."
சார்லி சாப்ளின்
DL-056
அஜயன் பாலா
விகடன் பிரசுரம்.
" உலக திரைப்பட வரலாற்றில் யாரும் எட்டமுடியாத உயரத்தை தொட்டவர் சார்லி சாப்ளின். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்ற அவரது வாழ்க்கை எத்தகைய சோகங்கள் நிறைந்தது என்பதையும், அதனை அவர் எவ்வாறு கடந்தார் என்பதையும் ஆசிரியர் உருக்கமாக இந்த புத்தாகத்தில் எழுதியிருக்கிறார்."
செங்கிஸ்கான்
DL-057
முகில்
கிழக்கு பதிப்பகம்.
" உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர் வெகு சிலரே. அவர்களில் செங்கிஸ்கான் முதன்மையானவர். மாவீரன் அலெக்சாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரியது செங்கிஸ்கானின் மங்கோலிய பேரரசு. செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிதாக ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஒரு பேரரசைக் கட்டியமைக்க வேண்டும். அசாதாரணமான அந்த கனவு நிறைவேற அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதே இந்த புத்தகம்."
பயங்கரவாதி என புனையப்பட்டேன்
DL-058
மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர்
தமிழில்: அப்பணசாமி
எதிர் வெளியீடு.
" அன்றாடம் தீவிரவாதிகள் என்ற பெயரில் பலர் கைதாகின்றனர். அவர்கள் மீது சதி வழக்குகள் போடப்படுகின்றன. அவர்களில் எத்தனைபேர் குற்றவாளிகள்?.. எத்தனைபேர் நிரபராதிகள்?... 24 குண்டு வெடிப்புகளில் சிக்க வைக்கப்பட்டு 14 ஆண்டுகள் நீதிக்காகப் போராடி தனது குற்றமற்றத் தன்மையை நிரூபித்த ஒரு அப்பாவி போராளியின் தன் வரலாறு இந்த புத்தகம்."
தடங்கள்
DL-059
ராபின் டேவிட்சன்
தமிழில்: பத்மஜா நாராயணன்
எதிர் வெளியீடு.
" தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தொடங்கியபோது அவரை பைத்தியமெனவும் இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தை தேடுபவர் என்றும் பலராலும் பழிக்கப்பட்டார். ஆனால் அவர் நினைத்ததை நடத்திக் காட்டி பயண நாயகியாக மின்னியபோது உலகம் அவரை கொண்டாடியது. ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் பயணம் செய்த பெண்மணியான ராபின் டேவிட்சனின் பயண காவியம் இந்த நூல்."
மர்மயோகி நாஸ்டிரடாமஸ்
DL-060
கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
வானவில் புத்தகாலயம்.
" உலகில் எந்த கெட்ட சம்பவங்கள் நடந்தாலும் உடனே தீர்க்கதரிசியான இவரது நாலுவரி பாடலை ஒருசாரார் ஆராய ஆரம்பித்து விடுவார்கள். அவர்தான் உலகமகா ஜோசியர் நாஸ்டிரடாமஸ். நாளை நடக்க போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் நாஸ்டிரடாமஸுக்கு இணையான இன்னொருவர் இல்லை எனலாம். சரி!.. அவர் கணித்த தீர்க்கதரிசனங்கள் உண்மையா அல்லது கட்டுக் கதையா?... அவர் சொன்னது எல்லாம் நடந்ததா? ... நடக்கிறதா?... நடக்குமா?... அத்தனைக்குமான விடைகளை இந்த புத்தகம் ஆராய்கிறது."
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
DL-61
ஆனி ஃபிராங்க்
தமிழில்: உஷாதரன்
எதிர் வெளியீடு.
" இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15 ஆம் வயதில் இறந்துபோன யூதச் சிறுமி ஆனி ஃபிராங்க் தனது 13 மற்றும் 14 வயதில் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தாக்க விதத்தில் தெரிய வந்தவள். அவளது நாட்குறிப்பு உலகை உலுக்கிய புத்தகங்கங்களில் ஒன்றாகும். நாஜிக்கள் நடத்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப் போன குறிப்புகளே இந்த புத்தகம்."
லதிஃபே ஹனிம்
DL-62
இபெக் சாலிஷ்லர்
தமிழில்: பாபு. ராஜேந்திரன்
காலச்சுவடு பதிப்பகம்.
" நவீன துருக்கியை கட்டமைத்தவர் ஆட்டாடூர்க் கெமால் பாஷா. அவர் இல்லாமல் துருக்கியின் வரலாற்றை எழுத முடியாது. லதிஃபே ஹனிம் இல்லாமல் கெமால் பாஷாவின் வரலாற்றை எழுத முடியாது. லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி. இந்த புத்தகம் லதிஃபேவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கெமால் பாஷாவின் வரலாறும், துருக்கியின் அரசியல், சமூக, வரலாறுங் கூட."
என் கதை
DL-063
சார்லி சாப்ளின்
தமிழில்: யூமா வாசுகி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
" திரைப்படத்துறையில் தோன்றிய ஒரு உண்மையான மேதை சாப்ளின். கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம் பிற கலைஞர்கள் எவருக்கும் இல்லை. தமது அழுத்தத்தால் நமது அனுபவங்களை விரித்தளிக்கும் இவரது திரைப்படங்கள் ரசனையின் கலங்கரை விளக்கங்களாக இருக்கின்றன. மனங்கொள்ளாத துயரமும் களங்கமற்ற மகிழ்ச்சியும் இவரது படைப்புகளில் காணலாம். தற்குறி வேடமும் தத்துவ தரிசனமும் அவருடையது. அதுவே அவரது வாழ்க்கையாக இருந்தது. அத்தகைய சாப்ளின் எழுதிய சுயதரிசையே என்கதை."
சந்தனக்காட்டு சிறுத்தை
DL-064
பாலகிஷன்
விகடன் பிரசுரம்.
" இருபது வருடங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி என அனைத்திலும் பரபரப்பாக பவனிவந்தவன் வீரப்பன். சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல் என தனது ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்து நாட்டை அதிரவைத்த அவன் பின்னணி என்ன?. சின்னஞ்சிறிய ஆள்படையை வைத்து பலரது கண்ணில் விரலைவிட்டு மிரட்டியது எப்படி?.. வீரப்பன் என்ற மனிதனுக்குள் இப்படியொரு மிருகம் நுழைந்தது எப்போது?... குடும்பம் மனைவி குழந்தைகள் என அவனது குடும்ப பாசம் எத்தகையது?... என்ற கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாக சந்தனக்காட்டு சிறுத்தை என்ற பெயரில் தொடராக வெளிவந்த வீரப்பனின் கதைதான் இந்த புத்தகம்."
அஜிதா
DL-065
அஜிதா
தமிழில்: குளச்சல் மு.யூசுப்
எதிர் வெளியீடு.
" கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்து சமூகவியலில் பட்டம் பெற்று 1968 முதல் 1981 வரை நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் அஜிதா. புல்பள்ளி காவல்நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 9 ஆண்டுகாலம் சிறையிலிருந்த அவரின் நினைவுக்குளிப்புகளின் தொகுப்பு ஒரு பெண் போராளியின் சுயசரிதையாக."
பாபர்
DL-066
ஸ்டேன்லி லேன் ஃபூல்
தமிழில்: சரவணன்
சந்தியா பதிப்பகம்.
" பாபரின் சுயசரிதையான பாபர்நாமா என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு ஸ்டேன்லி லேன்ஃபூல் எழுதிய ஆங்கில நூலின் மொழியாக்கமே இந்நூல்."
பகுத்தரிவு அல்லது மரண சாசனம்
DL-067
ஜீன் மெஸ்ஸியர்
தமிழில்: எஸ்.குருசாமி
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.
" எப்பேர்ப்பட்ட பொய்யனும் உயிர்ப்போகும் வேளையில் உண்மையை கூறியே தீருவான் என்பது போல கத்தோலிக்க பாதிரியரான ஜீன் மெஸ்ஸியர் தான் இறக்கும் தருணத்தில் தான் கிருஸ்த்து மதப்பிரச்சாரம் செய்த பாவத்திற்காக மனம் நொந்து எழுதிய கடவுளைப்பற்றிய புரிதலே உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த புத்தகம்."
தாலிபானின் பிடியில்
DL-149யுவான்னி ரிட்லி
தமிழில்: மு.குலாம் முஹம்மது.
வேர்கள் பதிப்பகம்.
" யுவான்னி ரிட்லி மேலை நாடெங்கும் பிரபல்யமான ஓர் பெண் பத்திரிகையாளர், அவர், பிரிட்டன் நாட்டிலிருந்து வெளிவரும் பல்வேறு
பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரண்டு பெரிய கோபுரங்கள் தகர்க்கப்படடன. அவற்றைத் தகர்த்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என அமெரிக்கா அறிவித்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்ளே புகுந்து அங்கு நடப்பனவற்றை அறிந்து கட்டுரைகளை எழுதி தனது பெருமையைக் உயர்திக் கொள்ள முன்வந்தார் யுவான்னி ரிட்லி. முறையான அனுமதி இல்லாமல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தாலிபான்களிடம் அவர் சிக்கிக் கொண்டார்.
இந்நிகழ்வு அவரது மொத்த வழக்கையும் புரட்டிப் போட்டது."
டோங்கிரி டு துபாய்
தாவூத் இப்ராகிம்
DL-150
தமிழில்: கார்த்திகா குமாரி
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்.
" சாமானியனாகப் பிறந்த தாவூத் சர்வதேச நிழலுலக தாதாவாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற கதையை அங்குலம் அங்குலமாக விவரித்துச் செல்லும் நூலாசிரியர் மும்பையில் தாதாயிசம் கருவாகிய விதம், வளர்ந்த முறை, தாதாக்களின் தனிவாழ்க்கை, பம்பாய் காவல்துறையின் செயல்பாடுகள், தாதாக்களின் தொழில்கள், நிதியாதாரங்கள், தாதாக்களுக்கு இடையிலான தொழில் உறவுகள், ஈகோ யுத்தங்கள், அரசியல் தொடர்புகள், பாலிவுட் நெருக்கங்கள், தாவூத்தின் சர்வதேச வளர்ச்சி என்று மும்பை மாஃபியாவின் அறுபது ஆண்டுகால அசைவுகள் அனைத்தையும் கச்சிதமாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்துச் செல்கிறார்."
நான் பூலான்தேவி
DL- 151
மரியே தெரஸ்கூன், பால் ராம்பலி
தமிழில்: மு.ந.புகழேந்தி
எதிர் வெளியீடு.
" பூலான் தேவியும் ஒரு மனிதப்பிறவி தான் என்று பிறர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று துடித்தேன் நான். ஆனால், மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் இல்லையா. நான் சிறையிலிருந்து வெளியே வந்த அன்று ஒரு புதிய போராட்டம் தொடங்கியது. ஆமாம், வித்தியாசமான இன்னொரு போராட்டம். இப்பொழுதுங் கூட எனக்குப் படிக்கத் தெரியாது. அனால் வாழ்க்கையை முழுமையாய் எப்படி வாழ வேண்டும் என்று இப்போது நான் கற்றுக் கொண்டேன். சிற்றூர்களிலும் அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்திருக்கிறேன். இந்தப் பெரிய நகரங்களில் வாழவும், ஏழைகளுக்கு உதவவும் என்னைத் தகுதியுடையவளாக்கிக் கொள்ளவும் வேண்டும் என்று இறைவனிடம் இடைவிடாது வேண்டிக் கொண்டிருக்கிறேன்... என் அடுத்த பிறவியிலாவது அப்படி ஓன்று இருக்குமானால் விதி இவ்வளவு குரூரமாய் இல்லாமல் இருக்க வேண்டும்... துர்காதேவி என் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கட்டும். என் குற்றங்கள் மன்னிக்கப்பட்டாலும்... என் ஆன்மா சாந்தியடைய அருளினாலும்."
ஜீவா
DL-152
சா.இலாகுபாரதி
விகடன் பிரசுரம்.
" ஜீவா என்பது வெறும் பெயரல்ல... அது தியாகத்தின் அடையாளம்; போராட்டத்தின் வரிவடிவம்; உழைப்பாளர்களின் மந்திரம்; எளிமைப்படுத்தப்பட்ட கம்யூனிஸம்; மொத்தத்தில் தன்னலமற்ற மனிதன் என்பதை வலியுறுத்தி, விறுவிறுப்பான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் சா.இலாகுபாரதி. ஜீவாவைப் பற்றி எளிய தமிழில் அரிய படங்களுடன் வெளியாகும் இந்த சுருக்கமான வரலாறு - பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அரசியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமான பயனுள்ள படைப்பு."
அன்னை தெரசா
DL-153
அஜயன் பாலா
விகடன் பிரசுரம்.
" இளம் வயதிலேயே தன் தாயை விட்டு, தன் தேசத்தை விட்டு வேறொரு நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும், வேதனையிலிருக்கும் நோயாளிகளுக்கும் "பணி செய்து கிடப்பதே என் கடமை" என, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா. இந்த உலகத்தில் அனைவருக்கும் தாயான தெரசாவின் வாழ்க்கை பற்றி சொல்கிறது இந்த நூல். அவரது சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி உருக வைக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா."
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
DL-154
அஜயன் பாலா
விகடன் பிரசுரம்.
" இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு உண்டு. "இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை" என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது: துப்பாக்கி ஏந்த வைத்தது. அவரது அசத்தலான வாழ்க்கை வரலாறு இந்த புத்தகம்."
ஒரு வாழ்க்கையின் துகள்கள்
DL-201
மைதிலி சிவராமன்
பாரதி புத்தகாலயம்.
" மைதிலி சிவராமன், தன் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது 81 ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்லாது காலத்தின் நிலை, சுதந்திரப் போராட்டப் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயர வாழ்வு பற்றி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது."