வரலாறு.
'ஆய்வின் மூலம் பெறப்படும் அறிவு' இதுதான் History வரலாறு என்பதன் பொருள். கடந்தகால நிகழ்வுகள், அதன் நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், என அத்தனையையும் உள்ளடக்கியதே வரலாறு. எந்தவொரு நிகழ்வும் பாதுகாக்கப்படுமாயின் அது வரலாற்று நிகழ்வாகிறது. அத்தகைய வரலாற்றைப் பேசும் புத்தகங்களை நூல் அகம் பகுதியில் இந்த பக்கங்களில் பிரித்து வைத்திருக்கிறேன்.
ஒரு நதியின் மறைவு
DL-068
மிஷல் தனினோ
தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்.
" இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான சிந்து சமவெளி நாகரீகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரீகமே; சரஸ்வதியின் கரையில் உருவான இந்நாகரிகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக கங்கை நதிக் கரையை நோக்கிச் சென்றது என்பது சமீபத்திய புவியியல் ஆய்வுகளால் நிறுபிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களிலும் மகாபாரதத்திலும் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி இப்போது எங்குள்ளது?.. மறக்கடிக்கப்பட்ட, வறண்டு போன ஒரு நதியின் வரலாற்றை இந்த புத்தகம் உயிர்புடன் மீட்டுத் தருகிறது."
எனது இந்தியா
DL-069
எஸ். ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்.
" வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்று தகவல்கள் மட்டும் போதாது. பண்பாடு பொருளாதாரம், அரசியல், சமூக காரணிகள், தொழில்நுட்பத்தின் வருகை, அறிவியலின் வரலாறு, இலக்கியத்தின் போக்குகள், வாய்மொழி மரபு, மொழியியல், மானுடவியல், அகழ்வாய்வு என பல்வேறு துறைகளின் அறிதலும் அதனை தொடர்புபடுத்தி புரிந்து கொள்வதும் அவசியமானது. அதனை சிறப்போடு தந்திருக்கிறது இந்த புத்தகம்."
நிலமெல்லாம் ரத்தம்
DL-070
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்.
" இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல் இஸ்ரேல் - பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவமான இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசில்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்தொரு பிரச்சனை இன்றுவரை தீர்க்கப்படாமல் இழுத்துச் செல்ல காரணம் என்ன?..பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் இன்றைய செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தோடு இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை அலசி ஆராய்கிறது இந்த புத்தகம்."
வந்தார்கள் வென்றார்கள்!
DL-071
மதன்
விகடன் பிரசுரம்.
" பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்து பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஜினி முகமது தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சியில் நாடுகடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களை சுவையாக தனக்கே உரிய பாணியில் மதன் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்."
ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்
DL-072
தோராளிசங்கர்
சென்னை புக்ஸ்.
" உலகப் பேரரசு ஒன்றினை நிறுவ வேண்டும் என்று, அலெக்சாண்டர் கண்ட கனவை, நெப்போலியன் தீட்டிய திட்டத்தை, ஜுலியஸ் சீசர் கட்டிய மனக் கோட்டையை செயல்படுத்த சென்ற நூற்றாண்டில் பிறந்தவன் ஹிட்லர். அதற்கென முதலில் மாபெரும் செல்வாக்கு மிக்க நாடாக இருந்த இங்கிலாந்தை துவம்சம் செய்ய ஹிட்லர் காத்திருக்க அவருக்கு உதவியது "யூ போட்" என சொல்லப்படும் நீர் மூழ்கிக் கப்பல்கள். இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மனி பெற்ற வெற்றிகளுக்கு ஹிட்லரின் கடற்படையும் அது செய்த சாகஸங்களும்தான். இந்த புத்தகம் ஹிட்லரின் கடற்போர் சாகஸங்களை ஆவணமாக விளக்குகிறது."
இந்தியப் பயணக் கடிதங்கள்
DL-073
எலிஸா ஃபே
தமிழில்: அக்களூர் இரவி
சந்தியா பதிப்பகம்.
" இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் இங்கிலாந்திலிருந்து தனது கணவனுடன் எலிஸா ஃபே மேற்கொண்ட ஒருவருடத்திற்கு மேலான சாகசமிக்க கடற்பயண அனுபவ குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். இந்தியாவிற்கு வந்து சேர்ந்தால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என எலிஸா நினைத்திருக்க கள்ளிக்கோட்டையில் வந்திரங்கியவுடன் சிறைபிடிக்கப்பட்டு பிறகு விடுதலையாகி வழிப்பறிக் கொள்ளையர்களிடம் பொருட்களை இழந்து பல இன்னல்களை சந்திக்கிறார். அவற்றை பயண அனுபவமாக இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்."
கடைசி முகலாயன்
DL-074
வில்லியம் டேல்ரிம்பிள்
தமிழில்: இரா.செந்தில்
கிழக்கு பதிப்பகம்.
" இங்கிலாந்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர், பத்திரிக்கையாளர் ஆராய்ச்சியாளரான "வில்லியம் டால்ரிம்பிள்" என்பவர் பல கள ஆய்வுகளை மேற்கொண்டு இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். டெல்லி வீழ்ந்த கதையையும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியையும், பகதூர் ஷா சஃபாரின் வாழ்க்கையையும் கொட்டாவி வரலாறாக இல்லாமல் சுவாரசியம் குறையாமல் இதில் பதிவு செய்திருக்கிறார்."
பயண சரித்திரம்
DL-075
முகில்
சிக்ஸ்த் சென்ஸ்.
" பல சோதனைகள், சாகசங்கள், சாவால்கள், உயிரிழப்புகளுடன் நிகழ்ந்த ஆதி மனிதனின் ஆரம்பகால பயண சரித்திரத்தை இந்த புத்தகம் அழகாக விவரிக்கிறது. புராணங்கள் மற்றும் வாய்வழி கதைகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள், பயணிகளின் நாட்குறிப்புகள் என வரலாற்று சான்றுகளை அலசி ஆராய்ந்து தனது வழக்கமான எழுத்துக்களுடன் முகில் இந்த பயண சரித்திரத்தை படைத்திருக்கிறார். ஆதியில் தொடங்கி சுவாரசியமாக போகும் இதனை பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டதோடு அவர் நிறுத்தி கூடிய விரைவில் இரண்டாம் பாகத்தில் பயணங்கள் தொடரும் என ஆவலுடன் நிறைவு செய்திருக்கிறார்."
பாகிஸ்தான் அரசியல் வரலாறு
DL-076
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்.
" ஒரே ஆண்டு ஒரே சமயம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் சுதந்திரம் கிடைத்தது. எது இல்லாமல் போனாலும் ஏதோ ஜனநாயகம் இருப்பதால் இந்தியா வளர்ச்சிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்க பாகிஸ்தானோ புறப்பட்ட இடத்திலேயே அப்படியே நிற்கிறது. அதற்கு காரணம் அங்கு நிழவும் அரசியல். முகமது அலி ஜின்னா தொடங்கி ஆஸிப் அலி ஜர்தாரி வரை பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துள்ளியமான அறிமுகத்தை முன்வைக்கிறது இந்நூல். பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாத அரசியல் வரலாறு."
சோமநாதா படையெடுப்பு
DL-077
ரொமிலா தாப்பர்
தமிழில்: சஃபி
பாரதி புத்தகாலயம்.
" கஜினி முகமது பதினேழு முறை இந்தியாவின்மீது படையெடுத்தார். இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார் என்பது வரலாறு. ஆனால் கஜினி முகமது படையெடுப்பைப் பற்றி அது நடந்த காலத்தையொட்டியும் பல நூற்றாண்டுகள் கழித்தும் தொடர்ச்சியாக பலவகையான தரப்பிலிருந்து ஆவணங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்க அவரது படையெடுப்பு ஒரே விதமாக ஒற்றைப் பார்வையுடன் எல்லோராலும் பார்க்கப்படவில்லை. அதனையே ரொமிலா தாப்பர் இந்த புத்தகத்தில் ஆராய்ச்சி செய்திருக்காறார்."
வால்காவிலிருந்து கங்கை வரை
DL-078
ராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில்: கண.முத்தையா
தமிழ் புத்தகாலயம்.
" கி.மு.6000 முதல் இருபதாம் நூற்றாண்டு வரை மனித சமுதாயத்தின் தோற்றம் வளர்ச்சி நாகரிகத்தை இருபது கதைகளாக ராகுல சாங்கிருத்தியாயன் படைத்திருக்க கதை என்றில்லாமல் வரலாறாக இந்த புத்தகம் பார்க்கப்படுகிறது."
அகம் புறம் அந்தப்புரம்
DL-079
முகில்
கிழக்கு பதிப்பகம்.
" இந்த புத்தகம் 1800 முதல் 1950 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 536 இந்திய சமஸ்தானங்கள் சிலவற்றின் வரலாற்றை விவரிக்கிறது. ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 20% அகம், 20% புறம், 60% அந்தப்புற வரலாறு இந்த புத்தகம்."
மொஸாட்
DL-144
என்.சொக்கன்
மதி நிலையம்.
" போட்டுத் தாக்கு. குறிவைத்தது யாராக இருந்தாலும், கவலைப் படாதே. செய் அல்லது செத்துமடி. இதுதான் "மொஸாட்டின்" தாரக மந்திரம். இன்று உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளைவிடவும், செயல் நுட்பத்திலும், அதை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவதிலும், இதற்கு நிகர் வேறு இல்லை. எப்படித் திட்டமிடுவது; அதை எப்படி செயல்படுத்துவது; சாதக-பாதகங்கள் என்னென்ன? என ஒரு விஷயத்தை மொஸாட் எப்படியெல்லாம் நுணுக்கமாக அணுகுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்."
நெல்லை ஜமீன்கள்
DL-145
முத்தாலங்குறிச்சி காமராசு
விகடன் பிரசுரம்.
" ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப் பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்."
அட்டிலா
DL-146
டாக்டர் ம. லெனின்
சிக்ஸ்த் சென்ஸ்.
" அட்டிலா என்பவன் வரலாற்றுல் பல சாதனைகள் படைத்தவன்.
மிகப்பெரிய. நிலப்பரப்பை வென்று தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தவன். அவனை நம்பி வந்தவர்களுக்கு அளவில்லாத ஆதாயம் அளித்தவன்.
திட்டங்களை வகுப்பதில் அவனுக்கு ஈடு இணை யாருமில்லை. மிக மிகத் திறமையாக எந்தவொரு செயலையும் செய்து முடிப்பவன் வரலாற்றில் எத்தனையோ மாவீரர்களைச் சந்துத்திருப்பீர்கள்.
அவர்கள், ஏதாவது ஒன்றிரண்டு துறைகளில் தேர்ந்தவர்களாக இருப்பது இயல்பு ஆனால் அட்டிலாவைப் போலப் பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டாகவும் பின்பற்றக் கூடியவர்களாகவும் இருப்பவர்களைக் காண்பது அரிது."
சீக்கியர்கள்
DL-147
எஸ். கிருஷ்ணன்
கிழக்கு பதிப்பகம்.
" எஸ். கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் சீக்கியர்கள் குறித்த அடிப்படை சந்தேகங்கள் அனைத்துக்கும். தெளிவாகப் பதிலளிப்பதோடு சீக்கிய மதம் சூறித்த ஒரு விரிவான வரலாற்றுப் பார்வையையும் அளிக்கிறது. பஞ்சாப் குறித்த எளிமையான அறிமுகத்தோடு தொடங்கும் இந்தப் புத்தகம் சீக்கிய மதத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், பிரிவினை, பிந்தரன்வாலே என்று விரிவாகப் பல விஷயங்களைப் பேசுகிறது. வண்ணமயமான ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு உத்தரவாதம் இந்தப் புத்தகம்."
பஞ்சம், படுகொலை, பேரழிவு
கம்யூனிஸம்
DL-148
அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம்.
" கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. கம்யூனிஸ்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்."
கசார்களின் அகராதி
DL-167
மிலோராத் பாவிச்
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்
எதிர் வெளியீடு.
" சர்வதேச அளவில் மிகச்சிறந்த விற்பனையைக் கொண்ட புத்தகம்,
கசார்களின் அகராதி நியூயார்க் டைம்ஸ்சில் 1988 ஆம் வருடத்தின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றெனக் குறிப்பிடப்பட்டது. ஆண் மற்றும் பெண் என இரண்டு பிரதிகளை உடையது, அவை ஒன்றையொன்று ஒத்தவை என்றாலும் பத்தொன்பது முக்கியமான வரிகளில் வேறுபட்டவை. அகராதி என்பது கசார்களின் கற்பனையான அறிவுப் புத்தகம். இவர்கள் ஏழு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே ட்ரான்சில்வேனியாவைத் தாண்டியதொரு நிலப்பரப்பில் தழைத்திருந்த இனம். மரபார்ந்த கூறுமுறை மற்றும் கதையமைப்பைத் தவிர்த்துவிட்ட அகராதி வடிவிலான இப்புதினம் உலகின் முப்பெரும் மதங்களது அகராதிகள் ஒன்றிணைந்து உருவானது. இதன் பதிவுகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையே தவ்விச் செல்பவை. கட்டுப்பாடற்ற மூன்று மதிநுட்பமுடையவர்கள், நச்சு மையினால் அச்சிடப்பட்ட புத்தகம், முகம் பார்க்கும் கண்ணாடிகளால் நிகழும் தற்கொலை, பெரும்புனைவாய் ஓர் இளவரசி, ஒருவரின் கனவுக்குள் உட்புகுந்து செல்லக்கூடிய குறிப்பிட்டதொரு இனத்தின் பூசாரிகள், இறந்துவிட்டவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையே உருவாகும் காதல் என இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இப்புதினம்."
டிராகன் தேசம்
DL-168
சாய் ஜூன், இளந்தமிழ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
" கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் சீனா பற்றிய ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவை அறிந்து கொள்ளும் போக்கில் பல துறைகள் சார்ந்தும் விரிவான நூல்கள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றுள், அதன் பண்டைக்கால வரலாறு குறித்த நூல்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை. உலகின் பெரும்பாலான மொழிகளில் கிடைக்கும் இத்தகைய நூல்கள், தமிழ் மொழியில் குறைவாகவே. அந்த குறையை இந்த புத்தகம் போக்குகிறது."
மதராசபட்டினம் to சென்னை
DL-169
பார்த்திபன்
விகடன் பிரசுரம்.
" பலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. மிகுந்த தேடுதலோடு சென்னை மாநகரம் கடந்துவந்த நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் கணக்காக இந்த நூலை அற்புதப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர் பார்த்திபன்."
மருதநாயகம்
DL-170
செ.திவான்
விகடன் பிரசுரம்.
" வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். அவரது வரலாரே இந்நூல்."
வன்னி யுத்தம்
DL-202
விகடன் பிரசுரம்.
" இலங்கையின் தமிழீள விடுதலைப் போரில் புலிகளின் தோல்வி ஏன்? பின்னணி சொல்லும் புத்தகம்."
உணவு சரித்திரம் பாகம்-1
DL-203
முகில்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிக்கேஷன்.
"தேயிலை, தேநீரில் தொடங்கி, அப்பளம், வற்றல், வடகம் வரை மொத்தம் 15 மாறுபட்ட அத்தியாயங்கள். நம் மண்ணின் உணவுகள் முதல் அயல் மண்ணிலிருந்து வந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உணவுகள் வரை விதவிதமான வரலாற்றைப் பதிவு செய்துள்ள புத்தகம் முதல் பாகமாக."
"தேயிலை, தேநீரில் தொடங்கி, அப்பளம், வற்றல், வடகம் வரை மொத்தம் 15 மாறுபட்ட அத்தியாயங்கள். நம் மண்ணின் உணவுகள் முதல் அயல் மண்ணிலிருந்து வந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உணவுகள் வரை விதவிதமான வரலாற்றைப் பதிவு செய்துள்ள புத்தகம் இரண்டாம் பாகமாக."