கட்டுரை.
அகம் என்றால் உள்ளே. நூல்கள் உள்ளிருக்குமிடம் நூலகம். கொஞ்சம் பிரித்திருக்கிறேன் அவ்வளவுதான். அடியேனிடம் இருக்கும் புத்தகங்களை விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தம் செய்வதுபோல் தூசுதட்டி துடைத்து பிரித்து "நூல் அகம்" என்ற இந்த பகுதியில் அழகாக அடுக்கி வைத்திருக்கிறேன். நல்ல புத்தகம் தூங்கங்கூடாது என்பார்கள் அதுபோல் புத்தகங்களை தூங்கவிடாமல் பிறர்களது வாசிப்பிற்கு கொடுக்கவும் அடியேனிடம் இருக்கும் புத்தங்களை காட்சிப்படுத்தவும் இந்த பகுதி உதவும் என நினைக்கிறேன். இந்த நூல் அகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவோ அல்லது வாசிக்க தேவைப்பட்டாலோ அடியேனை நிச்சையம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
(இந்த பக்கம் நூல் அகத்தின் கட்டுரைகளுக்கு மட்டுமானது).
சிறிது வெளிச்சம்
DL012
எஸ்.ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்.
" வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும் கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாகை இந்த கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. நல்ல உணர்வுகளையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள நம்பிக்கை வெளிச்சத்தைக் காட்டும் புத்தகம்."
ரெட் சன்
(நக்சல் பகுதிகளில் ஒரு பயணம்)
DL013
சுதீப் சக்ரவர்த்தி
தமிழில்: அ. இந்திரா காந்தி
" இந்திய மாவோயிஸ்டுகளின் முக்கியப் பகுதியிலிருந்து செய்தி சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் விதத்தில் துள்ளியமாக தொகுப்பட்ட பயணக் கட்டுரை இது. இதன் ஆசிரியர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவர்களிடமும், அவர்களுக்கு ஆதரவானவர்களிடமும் ஒரே விமர்சன அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். இந்த புத்தகத்தின் மூலம் இந்திய அரசாங்கம் பெரிதுபடுத்தாமல் ஒதுக்குகிற உள்நாட்டு அச்சுருத்தல் குறித்த விளிப்புணர்வை பெறலாம்."
மௌன வசந்தம்
DL-014
ரெய்சல் கார்சன்
தமிழில்: ச.வின்சென்ட்
எதிர் வெளியீடு
" வரலாற்றில் முதல் முறையாகக் கருவறையிலிருந்து கல்லறை வரையில் ஆபத்தான வேதிப் பொருட்களின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொருவரும் உட்படுத்தபடுகிறார்கள் என்ற மையக் கருத்தைக் கொண்டு படைக்கப்பட்ட சூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். உலகை மாற்றிய புத்தகங்களில் ஒன்றாக இன்றளவும் பார்க்கப்படுகிறது."
உயிர்மொழி
DL- 015
டாக்டர் ஷாலினி
விகடன் பிரசுரம்.
" மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் தலையாய பிரச்சனை என்னவென்றால் அது ஆண் மற்றும் பெண்னிற்கு இடையிலான உறவு சிக்கலாக இருக்கும். அந்த சிக்கலான உறவை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்கிறது இந்த கட்டுரை. சுருக்கமாகச் சொன்னால் பாலியல் தொடர்போடு ஆண் பெண் ஊஞ்சல் கட்டுரைகள் இவை."
சிறகை விரிப்போம்
DL-016
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
" உலகம் முதல் உலோகம் வரை, மருத்துவம் முதல் மகத்துவம் வரை வானொலியில் இன்று ஒரு தகவல்களை வழங்கியர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தமிழ் மக்கள் இருக்கும் பட்டிதொட்டியெல்லாம் பெயர்போன அவரது அற்புதமான கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். ஆனந்தமான வாழ்வை வாழ அதற்கான கதவை திறக்கிறது அவரது கட்டுரைகள். தினமணி நாளிதழில் தொடராக வெளிவந்த கது தற்போது புத்தக வடிவில்."
பயணம்
DL-028
சமர் யாஸ்பெக்
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்
எதிர் வெளியீடு.
" பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் சிரியா அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்த புத்தகம் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான ஆற்றல் மிக்க துணிச்சலான சாட்சியம். சிரியப் புரட்சியின் ஒரே தெளிவான அறிக்கை என சொல்லலாம்."
இப்போது அவை இங்கு வருவது இல்லை
DL-017
கிருஷ்ணன் ரஞ்சனா
உயிர்மை பதிப்பகம்.
" நாம் வாழும் பூமியின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போவது இயற்கையே. அதனை பொருட்படுத்தாமல் வேளாண்மை, காட்டுயிர் பாதுகாப்பு, நீர்நிலைகளை அழித்தல் என இயற்கையை நமக்கே தெரியாமல் நாம் சீர்குலைத்துவர அதனை தனது கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் நமக்குள்ள பொருப்புகளையும் ஆசிரியர் கிருஷ்ணன் ரஞ்சனா இந்த புத்தகத்தில் விவாதிக்கிறார்."
கலவர காலக் குறிப்புகள்
DL-018
பா.ராகவன்
மதி நிலையம்.
யுத்தங்கள், புரட்சிகள், கலவரங்கள், கண்ணீர் இவைதான் உலகின் பல்வேறு பகுதியின் பிரச்சனைகள். இதில் இடையே விளையாடும் பணம். அவலங்களை கோலாகலமாக்கி அரசியல் லாபம் பார்க்கும் பெருந்தலைகள் என உலகில் நிகழும் அத்தனை பிரச்சனைகளின் ஆதாரத்தை தேடிப்பிடித்திருக்கிறார் ராகவன். தி ஹிந்து நாளிதழின் Globe ஜாமுன் என்ற தொடராக வெளிவந்த கட்டுரைளின் தொகுப்பு இந்த புத்தகம்."
கடவுளின் பள்ளத்தாக்கு
DL-019
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்.
" பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எந்த தொகுப்பிலும் வெளிவராத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை என பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவிற்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன."
உழவுக்கும் உண்டு வரலாறு
DL-020
கோ.நம்மாழ்வார்
விகடன் பிரசுரம்.
" இயற்கை வேளாண் விஞ்ஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நம்மாழ்வாரின் பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாச்சாரம், வரலாறு, அரசியல், பொருளாதரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச் சூழல் என பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும். அதையே அவர் பசுமை விகடனில் இயற்கை என்ற தலைப்பில் அவர் கட்டுரையாக எழுதிவந்தார். அதன் தொகுப்பே இந்த புத்தகம்."
கற்றதும் பெற்றதும்
DL-021
சுஜாதா
விசா பப்ளிகேஷன்ஸ்
" சினிமா, அரசியல், விளையாட்டு, அறிவியல் என பல துறைகளைப்பற்றி அதில் சிறந்து விளங்கும் பல மனிதர்களைப் பற்றி தனக்கே உரிய பாணியில் சிறு சிறு கதைகள் கலந்து சுயசரிதை சம்பவங்களாக சுஜாதா எழுதிய கட்டுரைகள்."
சீனா விலகும் திரை
DL-022
பல்லவி அய்யர்
தமிழில்: ராமன் ராஜா
கிழக்கு பதிப்பகம்.
" தி ஹிந்து நாளிதழில் பெய்ஜிங் நிருபராகப் பணியாற்றிய பல்லவி அய்யர் சீனாவின் இதயத்துடிப்பை ஐந்தாண்டு காலம் அருகிலிருந்து கவனித்து நேரடி அனுபவங்கள் மூலம் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். ஒரு பயண நூலாக மட்டுமல்லாமல், சமகால சீனாவின் சரித்திரம், அரசியல், கலாச்சாரம், சாதனைகள், சவால்கள், சர்ச்சைகள் என பலவற்றையும் படம்பிடிக்கும் இந்நூல், சீனாவையும் இந்தியாவையும் பல வியங்களில் ஒப்பிட்டு புதிய வெளிச்சத்தை கொடுக்கிறது."
இலக்கியச் சித்திரங்களும்
கொஞ்சம் சினிமாவும்
DL-023
கு.ஞானசம்பந்தன்
விகடன் பிரசுரம்.
" இந்த புத்தகத்தில் மாணவர் பட்டாளத்தோடு ஆசிரியர்களும் இன்பச் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு மாணவர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்புகின்றனர். அதற்கு பேராசிரியர் பொறுமையோடு விளக்கங்கள் அளிக்கிறார். அவர் அளிக்கும் விளக்கங்கள் அந்த மாணவர்களுக்கு மட்டும் தேவைப்படுபவை அல்ல, வாசகர்கள் பலருக்குமானவை."
கதாவிலாசம்
DL-024
எஸ்.ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்.
" நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வானத்தைப்போல கதைகளும் நம்மைச்சுற்றி வளர்ந்து கிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த கதாவிலாசம்."
இஸ்லாமிய வெறுப்புத் தொழில்
DL-025
நாதன் லீன்
தமிழில்: உமா பாலு
அடையாளம் பதிப்பகம்.
" இஸ்லாமிய வெறுப்பு என்பது அறியாமை, அச்சம் பற்றியது மட்டுமல்ல. சிலர் அதை வேண்டுமென்றே ஊட்டிவளர்த்து, அரசியல் ஆட்டமாகப் பயன்படுத்துகின்றனர். முஸ்லீம்களுக்கு எதிரான இந்தப் புதிய வகுப்புவாத உணர்வை வளர்த்துவருவோரின் நோக்கங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் எல்லோருக்கும் அவசியமான புத்தகம்."
கோவணாண்டி கடிதங்கள்
DL-026
விகடன் பிரசுரம்.
" கால ஓட்டத்தில் கையிலிருந்த கால் காணி வெள்ளாமையும் காணாமல் போன இந்த நவீன காலகட்டத்தில் அதற்கு காரணமான அரசியல் வாதிகள், அதிகாரிகள், பண முதலைகள், தன் தொழில் மீது அக்கறை கொள்ளாத சமூகத்தினர் என அனைவரின் மீது தனது கோபத்தைக் காட்டும் ஒரு சாதாரண விவசாயின் கடிதங்களின் தொகுப்பு இந்த புத்தகம்."
தோரணத்து மாவிலைகள்
DL-027
சுஜாதா
விசா பப்ளிகேஷன்ஸ்
" கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம். கட்டுரைகளில்தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி தெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது என சொல்லும் சுஜாதாவின் 28 கட்டுரைகள் அடங்கிய தோரணம் இந்த புத்தகம்."
அழியாத கோலங்கள்
DL-029
சாருஹாசன்
சூரியன் பதிப்பகம்.
" முப்பது வருடம் வக்கீல் தொழில், பிறகு சினிமா, என்பது வயதில் எழுத்து என இருக்கும் சாருஹாசன் தனது பார்வையில் குங்குமம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளை கொண்டது இந்த புத்தகம். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை வெளிப்படையாகவும் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் நேர்மையாகவும் அவர் படைத்திருக்கிறார்."
சீனப் பெண்கள்
DL-155சின்ரன்
தமிழில்: ஜி.விஜயபத்மா
எதிர் வெளியீடு.
" பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஊடகங்களின் குரல் அதிகாரத்தால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில், வானொலி தொகுப்பாளினி "சின்ரன்" அந்தத் தடைகளை மீறி, சீனப் பெண்களின் ஆழ்மனக் குமுறல்களை தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தினார்.
சீனாவில் ஆட்சியில் இருந்த கட்சித் தலைவரின் மனைவிகள், நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் ஏழை விவசாயியின் மனைவி என சமூகத்தின் பல நிலைகளிலும் வசிக்கும் பெண்கள் சின்ரனிடம் நாம் கற்பனை செய்தும் பார்க்கவியலாத தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனம் விட்டுப் பேசியுள்ளனர். அவர்கள் பேசிய வாழ்க்கைப் பதிவுகள், தங்களுக்கு நேர்ந்த கட்டாயத் திருமணம் பற்றி, அரசியல் சூழல் மாற்றத்தால் பிரிக்கப்பட்ட அவர்கள் குடும்பங்கள் பற்றி, அரசியல் சூறையாடிய வாழ்வின் அவலங்கள் பற்றி, பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இக்காரணங்களால் இப்புத்தகம் சீனாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது."
ஒற்றை வைக்கோல் புரட்சி
DL-156
மசானபு ஃபுகோகா
தமிழில்: பூவுலகின் நண்பர்கள்
எதிர் வெளியீடு.
" இந்நூல் வேளாண்மையைப் பற்றி மட்டும் இருக்கும் என எதிர்பார்த்திருக்கும் வாசகர்களுக்கு, இது உணவுப் பழக்கங்கள், உடல் நலம், கலாச்சார மதிப்புகள், மனித அறிவின் எல்லை ஆகியவற்றைக் குறித்தும் இருப்பது வியப்புக்குரிய செய்தியாக இருக்கலாம். இதன் தத்துவம் குறித்துப் பேச்சுவாக்கில் கேள்விப்பட்டவர்களுக்கு, இது நெற்பயிர், மாரிக்காலப் பயிர், ஆரஞ்சு, காய்கறிகள் போன்றவற்றைப் பண்ணையில் எப்படி வளர்ப்பது என்பது குறித்த விரிவான விளக்கங்களைக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கலாம்."
செர்னோபிலின் குரல்கள்
DL-157
ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்.
" 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நீலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது. இதனால் கதீர் வீச்சு கொண்ட சுமார் 5௦ டன் எரிபாருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளுட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!. இதன் விளைவாக இந்த நகரம் கதிர்வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தைப் பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணுஉலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்லவட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.
காற்றில் யாரோ நடக்கிறார்கள்
DL-158
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்.
" எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய வாழ்க்கை தனித்துவமிக்கது. தேடித்தேடி நூல்களை வாசிப்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் மனிதர்களை சந்திப்பதும் அனுபவங்களைப் பெறுவதும் அவருக்கு சாத்தியப் பட்டது போல் தேர்ந்த எழுத்தும் அவருக்கு அழகாய், அருமையாய் வாய்த்துள்ளது. பரந்த வாசிப்பில் உருவான அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்."
எங்கே போகிறோம் நாம்
DL-159
தமிழருவி மணியன்
விகடன் பிரசுரம்.
" நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் எங்கே போகிறோம் நாம்?” என்ற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன."
புரோட்டோகால்ஸ்
DL-160
செர்கி நிலஸ்
தமிழில்: ஆரூர் சலீம்
அடையாளம் பதிப்பகம்.
"1905 இல் செர்கி நிலஸ் ரஷ்ய மொழியில் எழுதிய இந்நூல், இன்றைய - உலகமயச் சூழலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கான திட்டங்களை முன்வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும் தங்களுடைய ஆதிக்கத்தை எப்படி நிறுவுவது, அந்த ஆதிக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் எவை, மனிதர்களை எவ்விதம் கையாண்டு அடிமைப்படுத்துவது என்று சியோன் யூதர்கள் வகுத்த செயல்முறைத் தந்திரங்கள் அடங்கிய இந்நூல், அக்காலத்தில் ஒரு இரகசிய அறிக்கையாகச் சுற்றுக்கு விடப்பட்டது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இப்போது என்னவெல்லாம் செய்கிறார்களோ - அதற்காக எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்களோ - அவற்றையெல்லாம் 110 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூல் சொல்லியிருக்கிறது. "
வெளிச்சத்தின் நிறம் கருப்பு
DL-161
முகில்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்.
" நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷயங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மார்மங்கள் ஏராளம். 'இப்படிக்கூட நடக்குமா?' என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாறெங்கும் நிறைந்து கிடைக் கின்றன. ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மாமங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த மர்மங்களின் கதகதப்பை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்."
எங்கிருந்து வருகுதுவே
DL-162
ரா.கி.ரங்கராஜன்
விகடன் பிரசுரம்.
" வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல்."
திறந்திடு சீஸேம்
DL-163
முகில்
தமிழ் திசை.
" துட்டன்காமனின் கத்தி, மஸாமுனே வாள், டக்கர் சிலுவை, தென்னாப்பிரிக்காவின் முதல் வைரம், ஈஸ்டர் முட்டைகள், மயிலாசனத்தின் கதை, தோரின் சுத்தியலும் வைகிங் வாளும். காணாமல் போன முகம், பாதாள நூலகம், திப்பு சுல்தானின் வாள் போன்ற இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!"
கதவுகளுக்குப் பின்னால்
DL-164
ரிங்கி பட்டாச்சார்யா
தமிழில்: அஞ்சனா தேவ்
விகடன் பிரசுரம்.
" இந்தியாவில் மாறுபட்ட கலசாரமும், படிப்பும், ஆன்மிகப் பின்னணியும் கொண்ட, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பதினேழு பெண்களின் வாழ்க்கைக் கதை இது. தங்கள் மவுனத்தைக் கலைக்க முடிவெடுத்த அந்தப் பெண்களின் உறுதிக்கும் துணிவுக்கும் இந்தப் புத்தகம் ஒரு பாராட்டுப் பத்திரம். மறைவில் துன்பம் அனுபவிக்கும் இதர பெண்கள், மனம் திறந்து பேசவும், தங்கள் அவலங்களை பகிர்ந்து கொள்ளவும், தங்கள் விதியை மாற்றிக் கொள்ளவும் இந்தப் புத்தகம் உந்துதலாக இருக்கும்."
பூர்ணிமா.காம்
DL-165
ராஜா
கவிதா பப்ளிகேஷன்.
" உலகம் முழுதும் இன்றைக்கு வாழ்க்கை வரலாறுகள் ஆவலைத் தூண்டியபடியே உள்ளன. காரணம் வாழ்க்கை, நாவல்களை விட சுவாரஸ்யமானது. தமிழ்நாட்டு மேப்பில் தேடினாலும் கிடைக்காத ஒரு குட்டி கிராமத்தில் பிறந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மகன், பள்ளி இறுதி வகுப்பு வரை எலெக்ட்ரிசிட்டி கூட இல்லாத வீட்டில் வளர்ந்த ஒரு இளைஞன் - இன்று உலகத் தமிழர்களில் பாதிப் பேருக்காவது அறிமுகமான ஆளுமை ஆனது எந்த ரசவாதம்? இந்த நெடிய பயணத்தில் அவர்கூட நடந்த, எதிர்ப்பட்டு விலகிய, காத்திருந்து காதலித்த, காணாமலே போன, காலமெல்லாம் நெஞ்சில் மணம் வீசிய பெண்கள் யார் யார்? இவர்களில் யார் அவரது பூர்ணிமா? இதுதான் பூர்ணிமா.காம் நூலின் சாரம்."
பிரபல கொலை வழக்குகள்
DL-166
SP. சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்.
" க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் SP. சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்."
தென்கச்சியின் சுவையான தகவல்கள்
DL-167
தென்கச்சி சுவாமிநாதன்
வானதி பதிப்பகம்.
" சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சியின் மூலம் பல்லாயிரக் கணக்கான நேயர்களைத் தன் பேச்சாற்றலால் கவர்ந்து மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தென்கச்சி கோ. சுவாமிநாதனின் 100 சுவையான தகவல்கள்."
உஷார் உள்ளே பார்
DL-194
சோம.வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்.
" மனத்தை அடக்கி ஆள்வது முனிவர்களுக்கு மட்டுமே கைவந்த விஷயமல்ல, உங்களாலும் முடியும். நீங்கள் தவம் இருக்க வேண்டாம். தாடி வளர்த்துக்கொண்டு தனிமை தேடிப்போக வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடி சாதிக்கலாம்! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப்படைக்க முடியும்! அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது இந்த புத்தகம்."
ஆதலினால்
DL-195
எஸ்.ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்.
" நம்மைச் சுற்றிய மனிதர்களில் நம் கவனம் செல்லாத சிலரின் மீதான அக்கறைகளே இந்தக் கட்டுரைகள்."
எக்ஸலன்ட்
DL-196
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்.
" வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச்சிறந்த நிலையை, மிகப்பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கெளரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப் பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது."
காமசூத்ரா
DL-197
வாத்ஸாயனர்
மதி நிலையம்.
" காதல்! இதைப் பற்றி கோனார் நோட்ஸ் போடாத மொழிகளே உலகத்தில் இல்லை. என்ன, ஊருக்கு ஊர் விளக்கவுரை மாறுபடும். ஆனால், உலக மக்களில் பெரும் பாலானோர் தலை சிறந்த நோட்ஸாக கருதுவது, வாதீஸாயனர் எழுதிய காமசூத்ராவைத்தான். பல நூற்றாண்டுகளுக்கு முன், சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் எப்படி இன்றும் காதலுக்குக் கலங்கரை விளக்கமாக கலக்கிக்கொண்டு இருக்கிறது?"
ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்
DL-198
சி.மகேந்திரன்
விகடன் பிரசுரம்.
" மனிதனின் சுயநல அட்டூழியத்தால் இன்று பல நதிகள் உயிரிழந்து வருகின்றன என்பதையும், தாமிரபரணி நதியில் தொடங்கி கூவம் நதி வரை அந்த அட்டூழியம் தொடர்நது கொண்டிருப்பதையும் மனதில் ஆதங்கம் பொங்க, நேர்மையுடன் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சி.மகேந்திரன். இதனால் நிகழப்போகும் பேரபாயத்தை நாம் எப்போது உணரப்போகிறோம்? அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இயற்கையோடு முட்டிமோதுவதை நிறுத்திவிட்டு எப்போது விழித்தெழப்போகிறோம்? நதிதோறும் நடக்கும் மணல் கொள்ளைகளை எப்போது நிறுத்தப் போகிறோம்..? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதலில் எழுதப்போவது யார்? - இப்படி, பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தச் சம்பவங்களை அடிக்கோடிட்டு, கேள்விகளைப் பாய்ச்சுகிறார் நூலாசிரியர்."
அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள்
DL-199
அருணா ஸ்ரீனிவாசன்
விகடன் பிரசுரம்.
" மேலாண்மை நூல்கள் மிக எளிய நடையில், சுவையான குட்டிக்கதைகளுடன் ஆங்கிலத்தில் பல வருகின்றன. ஆனால் தமிழில் அந்த வகை குறைவு. ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறவர்கள், ஆங்கிலத்தில் படிக்கும்போது சீக்கிரம் அயர்ச்சி ஏற்படுகிறவர்கள், இவர்களுக்காகவும் அடித்தளத்தில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பலருக்கு இந்த நூல் மிகப் பயனுள்ளதாக இருக்கும்."
ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்
DL- 200
ஆருர்தாஸ்
விகடன் பிரசுரம்.
" சிந்தனைக்கு விருந்தாகும் புராண, இலக்கிய, அறிவியல், பூகோள, வரலாற்றுச் செய்திகள்!"
நறுமனத் தோட்டம்
DL-205
நெஃப்சுவாஹியின்
தமிழில்: பெரு.முருகன்
கடற்குதிரை பதிப்பகம்.
" உலகிலேயே எந்த நாட்டு பெண்கள் தாம்பத்திய சுகத்தில் திருப்தி கொள்கிறார்கள் என்ற கருத்துக்கணிப்பு மேற்க்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவு பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆமாம், அது அரேபியாவையும் அதைச்சார்ந்த நாடுகளின் பெண்களையும் சுட்டிக்காட்டியது. காரணம் என்னவென்று அவர்களில் பலரை ஆய்வுசெய்தபொழுது, அதற்கு அவர்கள் சொன்ன விடை, நாங்கள் நெஃப் சுவாஹி அவர்களின் நறுமணத்தோட்டத்தை எங்கள் உறவுகளில் பயன்படுத்துகிறோம் என்பதுவே!"