நாவல்.
அகம் என்றால் உள்ளே. நூல்கள் உள்ளிருக்குமிடம் நூலகம். கொஞ்சம் பிரித்திருக்கிறேன் அவ்வளவுதான். அடியேனிடம் இருக்கும் புத்தகங்களை விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தம் செய்வதுபோல் தூசுதட்டி துடைத்து பிரித்து "நூல் அகம்" என்ற இந்த பகுதியில் அழகாக அடுக்கி வைத்திருக்கிறேன். நல்ல புத்தகம் தூங்கங்கூடாது என்பார்கள் அதுபோல் புத்தகங்களை தூங்கவிடாமல் பிறர்களது வாசிப்பிற்கு கொடுக்கவும் அடியேனிடம் இருக்கும் புத்தங்களை காட்சிப்படுத்தவும் இந்த பகுதி உதவும் என நினைக்கிறேன். இந்த நூல் அகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவோ அல்லது வாசிக்க தேவைப்பட்டாலோ அடியேனை நிச்சையம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
தோட்டியின் மகன்
DL001
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்.
"அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் - சேரி; கேட்காத மொழி - பாமரக் கொச்சை: முகர அஞ்சிய வாடை - மலம்: வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொது கவனத்திற்கு வைத்த புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை 1947 -ல் எழுதிய அற்புத நாவல்.
கரைந்தநிழல்கள்
DL-002
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்..
" சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் காட்சிப்படுத்தும் அழகிய நாவல் "
அதிகாலையின் அமைதியில்
DL-003
பரீஸ் வஸீலியெவ்
தமிழில்: பூ.சோமசுந்தரம்
பாரதி புத்தகாலயம்.
" ஐந்து பெண்கள் ஒரு இராணுவ தளபதி மட்டும் இணைந்து இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியினரின் சதி திட்டத்தை எவ்வாறு சீர்குலைத்தனர் எனச் சொல்லும் வீர தீரமிக்க சோவியத் நாவல்."
மாமிசப்படைப்பு
DL-004
நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்.
"மழைப் பெய்ததும் எழும் மண்வாசனைப் போல இந்நாவலில் நாஞ்சில் நாட்டு மெழியின் மணம் பரவிக்கிடக்கிறது. வட்டார வழக்கில் எழுதும் நாஞ்சில் நாடன் மும்பையின் பின்ணியில் எழுதிய நாவல் இது"
ஒன்பது ரூபாய் நோட்டு
DL-005
தங்கர் பச்சான்
அன்னம் பதிப்பகம்.
" மண் மணம் இயற்கை சார்ந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையைப் பேசும் தங்கர் பச்சானின் அற்புத நாவல். திரைப்படமாக வெளிவந்து முத்திரைப் பதித்தது"
கேப்டன் மகள்
DL-006
அலெக்சாந்தர் பூஷ்கின்
தமிழில்: நா.தர்மராஜன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
"யெமெல்யான் புகச்சோவ் என்பவர் 1744-1775 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவில் தலைமை தாங்கிய வலிமையான விவசாயிகள் எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்நாவல் வெகுஜன மக்களின் தன்மை மற்றும் பண்ணையடிமை முறை எதிர்ப்பு போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறது".
ரகசிய ஆசைகள்
DL-030
ப்ரீத்தி ஷெனாய்
தமிழில்: என்.டி.நந்தகோபால்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்.
" உண்மையான காதல் என்று ஒன்று இருக்கிறதா?... ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா?... உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியவில்லை. பரிசுத்தமான நட்பு, மென்மையான காதல் இரண்டையும் விறுவிறுப்பான மொழிநடையில் விவரித்த விதம் பாராட்டிற்குறியது."
அன்புள்ள ஏவாளுக்கு
DL-031
ஆலிஸ் வாக்கர்
தமிழில்: ஷஹிதா
எதிர் வெளியீடு.
" தி கலர் பர்பில் என்ற நாவலின் தமிழாக்கமான அன்புள்ள ஏவாளுக்கு என்ற புத்தகம் ஆப்பிரிக்கஅமெரிக்கர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. இந்த புத்தகம் வெளிவந்து முப்பது ஆண்டுகளாயினும் அது எழுப்பிய உக்கிரமான உணர்வெழுச்சியும் அதன் பாதிப்பும் இன்றும் தொடர்கிறது. மிகசிறந்த புத்தகத்தில் இதுவும் ஒன்று."
துருக்கித்தொப்பி
DL-032
கீரனூர் ஜாகிர்ராஜா
விஜயா பதிப்பகம்.
" இந்த நாவல் ஒரு பாரம்பரியப் பெருமை மிக்க தமிழ் ழுஸ்ஸீம் குடும்பத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் அக்காலகட்டத்து அரசியல் பின்னணி கலந்து நேர்த்தியோடு படைக்கப் பட்டிருக்கிறது. மரபான இஸ்லாமிய வாழ்க்கையைக் கடந்து இயல்பான தமிழ் வாழ்க்கையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்."
போர் தொடர்கிறது
DL-033
அகஸ்டோ ருவா பஸ்டோஸ்
தமிழில்: பாலச்சந்திரன்
சித்தன் புக்ஸ்.
" உலகபுகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க இலக்கிய மேதைகளில் ஒருவரான அகஸ்டோ ருவா பஸ்டோஸ் தனது நாட்டின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் குவாரானி மொழியில் எழுதிய Hijo de Hombre ( Son of Man) என்ற நாவலின் தமிழாக்கம் இந்த புத்தகம். பழங்குடி மக்களின் போர்க்குணத்தை சித்தரிக்கும் இந்த நாவல் மாஜிக்கல் ரியாலிசம் வடிவத்தை கொண்டது."
ரெவல்யூஷன் 2020
DL-034
சேதன் பகத்
தமிழில்: மீரா ரவிஷங்கர்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்.
" முன்னொரு காலத்தில் இந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் இரண்டு புத்திசாலி பையன்கள் வாழ்ந்து வந்தார்கள்... ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்து பணம் சம்பாதித்தான்... ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்து புரட்சியை ஆரம்பித்தான்... பிரச்சனை என்னவென்றால் இருவரும் ஒரே பெண்ணை நேசித்தனர். கோபால், ராகவ், ஆர்த்தி என்ற மூன்று கதாபாத்திரங்கள் வாரணாசியில் தங்கள் வாழ்க்கையில் வெற்றியையும் காதலையும் சந்தோஷத்தையும் தேடுகின்றனர். அது அவர்களுக்கு கிடைத்ததா? "
ஆயிரம் சூரியப் பேரொளி
DL-035
காலித் ஹுசைனி
தமிழில்: ஷஹிதா
எதிர் வெளியீடு.
" தொடர்ச்சியான அந்நியப் படையெடுப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகியவற்றால் அலைவுகளுக்குட்பட்ட ஒரு நாட்டில், பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருந்த அந்நாட்டின் பெண்களுக்கு, முஜாஹிதீன்கள் மற்றும் தாலிபான்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய வன்முறைகளை மரியா, லைலா என்ற இரண்டு முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாக காலீத் ஹுசைனி இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார்."
சின்ன அரயத்தி
DL-036
நாராயண்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்.
" கேரளாவின் ஆதிவாசிச் சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது. இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரீகச் சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற இந்த நாவலில் அடிப்படையாக இருக்கின்றன".
நிழலற்ற பெருவெளி
DL-037
தாஹர் பென் ஜீலோவ்ன்
தமிழில்: எஸ். அர்ஷியா
எதிர் வெளியீடு.
" மொராக்கோ நாட்டு அரசன் ஹாசன் II -க்கு எதிரான சதித்திட்டத்தில் காய்களாகப் பயன்படுத்தப்பட்டு, சதிக்கு சம்பந்தமில்லாமல் கைதான இராணுவ வீரர்களின் மீதி வாழ்க்கையை போசும் இந்நாவல், பாலைவன இருட்டு சிறையான மொராக்கோ- தஜ்மாமார்ட்டில் நிகழ்ந்தக் காட்சிகளை படிமங்களாகச் சித்தரிக்கின்றது. "
ஃபாரென்ஹீட் 451
DL-038
ரே பிராட்பரி
தமிழில்: வெ.ஸ்ரீராம்
க்ரியா பதிப்பகம்.
" ஒரு புத்தகம் எரிந்து சாம்பலாக தேவைப்படும் வெப்பநிலை ஃபாரென்ஹீட் 451. புத்தகங்கள் படிப்பதைத் தடைசெய்த ஒரு நாட்டில் புத்தகங்களை எரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு தீயணைப்பாளனுக்குத் தான் செய்யும் தொழில் மகிழ்ச்சி இருக்கிறது. நாளடைவில் அது வெறுப்பாக மாறி அவன் எரிக்கும் புத்தகங்களைச் சேர்த்து பாதுகாக்கும் நூலக இயக்க பணியில் சேருமளவு அவன் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நிகழ்கிறது. அது என்ன என்பதை விஞ்ஞான புனைவிலக்கியமாக படைக்கப்பட்ட இந்த நாவல் விவரிக்கிறது."
ஒரு நடுப்பகல் மரணம்
DL-039
சுஜாதா
விசா பப்ளிக்கேஷன்ஸ்.
" ஒரு கொலை நடந்து ஆரம்பத்தில் கொன்றது யார் என்றே தெரியாமல், ஒவ்வொருவர் மேலும் சந்தேகம் விழுந்து எதிர்பாராது முடியும் இந்த நாவல் சுஜாதாவின் மர்ம நாவல்களில் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டது."
சிலுவையில் தொங்கும் சாத்தான்
DL-040
கூகி வா தியாங்கோ
தமிழில்: சிங்கராயர்
எதிர் வெளியீடு.
" கென்யாவின் அரசியல்- பொருளாதார - பண்பாட்டு விடுதலையைக் கோரும் உணர்ச்சிமயமான குரலை மரபுவழி கதைசொல்லும் பாணியிலும் புதிய பாணியிலும் இரண்டறக் கலந்து இந்நாவலை கூகி வா தியாங்கோ படைத்திருக்கிறார்."
'ஷ்' இன் ஒலி
DL-041
டேனியல் லிம்
தமிழில்: பத்மஜா நாராயணன்
காலச்சுவடு பதிப்பகம்.
" மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் குறித்து பெரும்பாலும் அறியப்படாததும், மனதை உருக்கும், மறைந்திருக்கும் உலகினுள் ஓர் பயணம் இந்த நாவல்."
மிதவை
DL-042
நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்.
" கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப்போட்டு, சிரட்டையில் ஊற்றி, கருப்புக் கட்டியைக் கடிக்கக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதுபோல நாஞ்சில் நாடனின் மற்றொரு நாவல் இந்த மிதவை."
ஏழு தலைமுறைகள்
DL-043
அலெக்ஸ் ஹேலி
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜிலு
சித்தன் புக்ஸ்.
" வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சமப் பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்கக் கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது. கருப்பினத் தலைவர் ஃபிரெடரிக் டக்ளஸ் கூறிய இச் சொற்களை அமெரிக்க கருப்பர்கள் இன்னும் நினைவு கூர்கிறார்கள். இப் போராட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் எனும் இந்நாவலில் அடிமைச் சேரிகளில் பலமுறை கேட்கின்றன."
கோட்டை வீடு
DL-044
ம.காமுத்துரை
எதிர் வெளியீடு.
" ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால் தரை தட்டி நிற்கும் கப்பலாய் ஆழம் புதைந்து கிடக்கும் உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும்."
மாற்றம்
DL-045
மோ-யான்
தமிழில்: பயணி
காலச்சுவடி பதிப்பகம்.
" சீனாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை, பள்ளிகால நண்பர்களின் வாழ்வில் நடந்த மற்றங்களைப் பதிவு செய்ததன் வழியாக சொல்லியிருக்கிறார் மோ-யான். கற்பனையும் நிஜமும் வரலாற்று பார்வையும் சமுதாய பார்வையும் கலந்த அற்புதமான குறுநாவல்."
வெண்ணிறக் கோட்டை
DL-046
ஓரான் பாமுக்
தமிழில்: ஜி.குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்.
" வெண்ணிறக் கோட்டையின் கதை சிக்கலானது. அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை."
பயாஃப்ராவை நோக்கி
DL-047
புச்சி யமச்செட்டா
தமிழில்: இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்.
" இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல். இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளினால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பதை பற்றி உணர்வுப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட நாவல்."
2ஸ்டேட்டஸ்
DL-048
சேதன் பகத்
தமிழில்: மீரா ஷங்கர்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்.
" இது க்ரிஷ், அனன்யாவின் கதை. இருவரும் இருவேறு மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்கள். மனதார காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். சொல்லவே வேண்டாம், அவர்களின் பெற்றோர்கள் எதிர்க்கின்றனர். அவர்களது காதல் கதையை, காதல் திருமணமாக மாற்ற பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். சண்டையிடுவதும் போராடுவதும் எளிது. சம்மதிக்க வைப்பது கடினம். காதலர்கள் வெல்வார்களா? என்பதுதான் இந்த நாவல்."
சாவோ கடற்கரையின் இளநங்கை
DL-049
பூ-டக்-ஐ
தமிழில்: சு.பாலவிநாயகம்
" வியட்நாம் நாட்டை செயற்க்கைக் கோளிலிருந்து பார்த்தால் நெளிந்து கிடக்கும் பட்டுப் புழு ஒன்று பூமிப்பந்தில் ஒட்டிக்கிடப்பதுபோல் தோன்றும். ஆனாலும் மானுட உணர்வுகளில் துணிச்சலுக்கும், ஆதிக்கச் சக்திகளை வீழ்த்தும் உணர்விக்கும், பொருளாதார வாழ்வில் சமதர்ம நடைமுறைக்கும் இந்த பட்டுப்புழு அளித்த பங்கு கடலினும் பெரிதெனலாம். அத்தகைய சிறிய வியட்நாம் அதைவிட பலமடங்கு பெரிதான பிரெஞ்சு ராணுவத்தை வென்ற மர்மத்தை இந்த நாவல் நமக்கு உணர்த்துகின்றன."