கழுதைப்புலி கதை.

சிங்கங்கள் இல்லாத காட்டில் கழுதைப்புலி ஒன்று ராஜாவாக நினைத்தது. அதற்கு மற்ற விலங்குகளிடம் பெரும் ஆதரவைப் பெறவேண்டுமே! எனவே ஒரு யுக்தியை அது கையாண்டது. முதலில் அது சிறுத்தை கூட்டத்திடம் சென்று பார்த்தீர்களா உங்களைப்போல புள்ளிகளை கொண்டிருக்கிறேன், அதனால் நானும் உங்கள் இனம்தான் என்றது. சிறுத்தை கூட்டமும் ஆமாம்.. ஆமாம்... உண்மைதான் என்றது. அடுத்து கழுதைப்புலி மான் கூட்டத்திடம் பேசியது. நானும் உங்கள் நிறம்தான் அதனால் நாமும் ஒரே இனம்தான் என்றது. மான் கூட்டமும் ஒப்புக் கொண்டது. காட்டுப்பன்றி கூட்டத்திடம் சென்று உங்களைப் போலவே என்னையும் இறைவன் பாவப் பிறவியாக படைத்துவிட்டான் நாமெல்லாம் ஓரினம் என ஒப்பாரி வைத்தது. காட்டுப்பன்றிகளும் கழுதைப்புலியிடம் சரணடைந்தது. ஓநாய் மற்றும் நரி கூட்டத்திடம் சென்று நீங்கள் உண்பதைத்தான் நானும் உண்கிறேன் நாமெல்லாம் ஓரினமல்லவா என்றது. கரடி வரிக்குதிரை ஒட்டகச்சிவிங்கி என காட்டிலிருக்கும் ஏனைய விலங்குகள் அனைத்தையும் நானும் உங்கள் இனத்தை சேர்ந்தவன்தான் என கழுதைப்புலி நம்ப வைத்தது. கடைசியாக யானை கூட்டத்தை அது எதிர் கொண்டது. யானையை சம்மதிக்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல என்ன செய்யலாம் என நினைத்த கழுதைப்புலி மெதுவாக அக்கூட்டத்தை நெருங்கியது. தங்களை நெருங்கிவரும் கழுதைப்புலியை கண்ட யானைகள் வாங்க ராஜா.. வாங்க.. எப்படி இருக்கீங்க... என்றது.  
 
"தானும் உங்கள் இனம்தான் என நம்ப வைத்துவிட்டால் கழுதைப்புலியும் காட்டிற்கு ராஜாவாகலாம்".