இசை எங்கிருந்து வருகிறது?.

இசை எங்கிருந்து வருகிறது தெரியுமா?... இசை... ஆர்மோனிய பெட்டியிலிருந்து வருகிறது என வடிவேலுவின் நகைச்சுவை ஒன்று இருக்கிறது. அதில் டாஸ்மாக் பாரில் சந்திக்கும் ஜோல்னா பை நபர் ஒருவர்... இசை இயற்கையிலிருந்து வருகிறது...  இறைவன் எங்கிருப்பான் அதே மாதிரிதான் இசை... கொத்துர கல்லில் இருக்கும் (தோசைக் கல்), கத்துர குழந்தைகிட்ட இருக்கும், குத்துர கொலைகாரன்கிட்ட இருக்கும், இதோ இவர்கிட்ட இருக்கும், அதோ அவர்கிட்ட இருக்கும், அந்த நண்பர்கிட்ட இருக்கும், அட! ஏன் உங்ககிட்ட கூட இருக்கும் என அடித்து புரிய வைப்பார். அதுபோல சீ ரூவிடம் இசை எங்கிருந்து வருகிறது? என கேட்டாலும் இசை எல்லா இடத்திலிருத்திலும் வருகிறது என அதைத்தான் சொல்லுவார் அவரது ஸ்டைலில்.   

சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த இளம் மல்டிமீடியா டிசைனர்தான் இந்த சீ ரூ. வீடியோ கிரியாட்டிங் என சொல்லுவார்களே அதில் கைதேர்ந்தவர் இவர். பிரபலமான பாடல்கள் மற்றும் பழைய பாடல்களை கொஞ்சம் நவீனம் கலந்து தனது கலைநயத்துடன் மேலே குறிப்பிட்டதுபோல நம்மைச் சுற்றி நாம் கேட்கும் அசல் ஒலிகளை (சமையலறை முதல் சம்மட்டி புழங்கும் இடம் வரை சேமித்து) இணைத்து ரீமிக்ஸ் செய்து  உலகமெங்கும் தி ஃபிளாஷ்பேக் என்ற பெயரில் லைவ் ஷோவாக அவர் நடத்தி வருகிறார். அவரது Memories, River, Work Song, Beatz'n Rhymes போன்ற ஆல்பங்கள் மிகப் பிரபலம். மங்கி குல்லா கூலிங்கிளாஸ் அடையாளத்தில் இருக்கும் அவரை யூ டியூபில் தேடினால் கிடைக்க அவர் உருவாக்கியதே Feel the Sounds ஆல்பம். இதில் 

Feel the Sounds of China
Feel the Sounds of Japan
Feel the Sounds of Kenya
Feel the Sounds of Sri Lanka
Feel the Sounds of Senegal 

என ஐந்து பாடல்கள் இருக்க, சீனா, ஜப்பான், கென்யா, இலங்கை, செனகல் என அந்தந்த நாடுகளுக்கு சென்று அங்கு கேட்ட ஒலிகளை, அங்கு பார்த்த காட்சிகளோடு, அந்நாட்டின் இசையாக ஒலியை உணருங்கள் என உருவாக்கியிருக்கிறார். இதில் இலங்கை மற்றும் செனகல் பாடல் அட்டகாசம் ரகம். இசை எங்கிருந்து வருகிறது என்பதை கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்துகொள்ள இந்த சீ ரூவின் பாடல்களை ஹெட்போன் சகிதம் கேட்டுப் பாருங்களேன். 

பாடல்களைக் காண: