உன் வீடு எங்கிருக்கிறது.
வெளுத்து காய வைக்கும்
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மொட்டைமாடியில்
முதன்முதலாக
பார்த்த நியாபகம் இருக்கிறது.
பல சமயம்
சிரிப்பு வெடி B பிளாக்கிலும்
சிடுமூஞ்சி C பிளாக்கிலும்
போதிமர D பிளாக்கிலும் தென்படும்.
ஒருமுறை அடுத்த பிளாட்டிற்கு
கேபிள் ஒயரில் பயணித்த
அதன்வழி மனம்
பின்தொடர்ந்ததுண்டு.
அதே பிளாட்டின்
தண்ணீர் தொட்டியில்
குட்டைவால் துணையுடன்
பார்த்துவிட்டு
எதோவொரு நினைவில்
கிறுக்கியிருக்கிறேன்.
தெரியுமா!
மெயின் கேட்டிலிருக்கும்
தொந்தி பிள்ளையாரின்
நெய்வேத்தியத்தை அதுதான் சாப்பிடுகிறது என
A பிளாக் சாரதா மேடம் சொன்னபோது இருக்கும் இருக்கும்
என நினைத்ததுண்டு.
ஆத்விக், அருண்,
அனு, ஷாஷா,
அந்த குண்டு பையன் கிஷோர் கூட்டத்தில்
சிக்கிவிடக்கூடாது என
பலமுறை வேண்டிக்கொள்ள,
சென்ற வாரம் மனமில்லாமல்
சன்னலைத் திறக்கையில்
கையில் லேஸ் சிப்ஸ் சகிதம்
கடைசியாக பார்த்தது நினைவிலிருக்கிறது.
வீடு பிரிந்து வெளி தங்கி
நாள் கடந்து திரும்பும்போதெல்லாம்
ஓர் உறவைப்போல
அதனையும் தேடுவதை
வாடிக்கையாக வைத்திருக்க,
மறுமுறை பார்த்தால்
நிச்சையம் கேட்டுவிட வேண்டும்
மூச்சுவிடவே சிரமப்படும்
இந்த கான்கிரீட் காடுகளில்
உன் வீடு எங்கிருக்கிறது
அணிலென்று.
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மொட்டைமாடியில்
முதன்முதலாக
பார்த்த நியாபகம் இருக்கிறது.
பல சமயம்
சிரிப்பு வெடி B பிளாக்கிலும்
சிடுமூஞ்சி C பிளாக்கிலும்
போதிமர D பிளாக்கிலும் தென்படும்.
ஒருமுறை அடுத்த பிளாட்டிற்கு
கேபிள் ஒயரில் பயணித்த
அதன்வழி மனம்
பின்தொடர்ந்ததுண்டு.
அதே பிளாட்டின்
தண்ணீர் தொட்டியில்
குட்டைவால் துணையுடன்
பார்த்துவிட்டு
எதோவொரு நினைவில்
கிறுக்கியிருக்கிறேன்.
தெரியுமா!
மெயின் கேட்டிலிருக்கும்
தொந்தி பிள்ளையாரின்
நெய்வேத்தியத்தை அதுதான் சாப்பிடுகிறது என
A பிளாக் சாரதா மேடம் சொன்னபோது இருக்கும் இருக்கும்
என நினைத்ததுண்டு.
ஆத்விக், அருண்,
அனு, ஷாஷா,
அந்த குண்டு பையன் கிஷோர் கூட்டத்தில்
சிக்கிவிடக்கூடாது என
பலமுறை வேண்டிக்கொள்ள,
சென்ற வாரம் மனமில்லாமல்
சன்னலைத் திறக்கையில்
கையில் லேஸ் சிப்ஸ் சகிதம்
கடைசியாக பார்த்தது நினைவிலிருக்கிறது.
வீடு பிரிந்து வெளி தங்கி
நாள் கடந்து திரும்பும்போதெல்லாம்
ஓர் உறவைப்போல
அதனையும் தேடுவதை
வாடிக்கையாக வைத்திருக்க,
மறுமுறை பார்த்தால்
நிச்சையம் கேட்டுவிட வேண்டும்
மூச்சுவிடவே சிரமப்படும்
இந்த கான்கிரீட் காடுகளில்
உன் வீடு எங்கிருக்கிறது
அணிலென்று.
.
