இசை காதலித்த கவிதைகள்.


பஞ்சாபில் பிறந்து சட்டம் பயின்று இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இணைந்து வழக்குறைஞர், மனித உரிமைகள் ஆணையத் தலைவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், ராஜ்யசபா எம் பி, சட்ட ஆலோசகர், என இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குபவர் கபில் சிபல் (Kapil Sibal). பொது வாழ்க்கையில் பன்முகம் கொண்டவரான அவர் தனிப்பட்ட முறையில் சிறந்த எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த கவிஞரும் கூடஅவரது I Witness, My World Within என்ற புத்தகங்களில் இருந்த கவிதைகளை வாசித்த ரஹ்மான் அதில் லயித்து அதற்கு இசை வடிவம் கொடுக்க நினைத்தார். காதல், பெண்மை, சோகம், தாலாட்டு, என பல உணர்சிகளை வெளிப்படுத்தும் அவரது வரிகளுக்கு உயிர்கொடுத்து  Raunaq என்ற ஆல்பத்தை 2014-ல் வெளியிட்டார்.


லதா மங்கேஷ்கர், K.S.சித்ரா, ஸ்ரேயா கோஷல், சுவேதா பண்டிட், ஜோனிதா காந்தி, போன்ற பிரபல பாடகர்கள் பாட

1. Laadli - Lata Mangeshkar.
2. Kismat se - Shreya Ghoshal.
3. Aabi Jaa - Jonita Gandhi.
4. Saah Kahoon - A.R. Rahman. & K.S. Chithra.
5. Geet Gaaon - Jonita Gandhi.
6. A Khe Jaayein Hum - Shweta Pandit & Georgia Anne.
7. Khatta Meeta - Mohit Chauhan.

- என மொத்தம் ஏழு பாடல்களைக் இந்த ஆல்பம் கொண்டிருக்கிறது. இவற்றுள் Laadli, Kismat se, Aabhi Ja என்ற மூன்று பாடல்களுக்கு மட்டுமே காட்சிவடிவம் கொடுத்து அதாவது வீடியோவாக வெளியிட்டிருந்தனர். குறிப்பாக Aabhi Jaa பாடலுக்கு ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு அழகிய காதல் கதையைப்போல  காட்சிப்படுத்தியிருப்பது தனி அழகு. லதாவின் குரலில் ஒலிக்கும் Laadli பாடல் பெண்மையை போற்றுவதாகவும், சித்ராவின் குரலில் ஒலிக்கும் Saah Kahoon பாடல் தாலாட்டு போலவும் மயக்குகிறது.   சினிமாவைத் தவிர்த்து ஆல்பங்களில் ரஹ்மான் தனி கவனம் செலுத்துவார் (வந்தேமாதரத்தில் தொடங்கிய பழக்கம்). இதிலும் அந்த கவனம் தெரிகிறது. Raunaq என்ற அரபு சொல்லிற்கு புதுமையான, நேர்த்தியான, அழகான, அமைதியான என்ற பொருள். Raunaq- A Connection of Music and Poets தலைப்பிற்கு பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார் என்பதை இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களைக் கேட்கும்போது உணரலாம். 


அடியேனின் பாடல்களுக்கான தேடுதலில் ரஹ்மானே என்றும் முன்னிலையில் நிற்பார். அத்தகைய தேடுதலில் கிடைத்த ஆல்பம்தான் இந்த Raunaq. அதில் காட்சிகளாக இருக்கும் மூன்று பாடல்களோடு சேர்த்து மற்றவற்றையும் தங்களின் ரசனைக்காக இங்கு பகிர்கிறேன்.

பாடல்களைக் காண