வாழ்ந்தா இவங்கள மாதிரி.

❤ ச்..சே..வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழனும்.

❤ இதுதான்டா வாழ்க்கை.

❤ எவ்வளவு அழகு! ஒரு கோப்பை தேனீரை உறிஞ்சுவதுபோல் இருக்கிறது இவர்களது வாழ்க்கை.

❤ இந்த ஜோடி பவர்ஃபுல் ஜோடி இவர்களால் எதை வேண்டுமானாலும் அடைய முடியும். அந்த துணிச்சல் இவர்களுக்கு இருக்கிறது.

❤ இவர்கள் போர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்கார பட்டியலில் இடம் பெறாமல் இருக்கலாம் ஆனால் இவர்கள் இந்த நாட்டின் பணக்காரர்களில் முதன்மையானவர்கள்.

சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில்
இப்படி எக்கச்சக்க பாராட்டுகளை பெற்ற அந்த தம்பதி யார் தெரியுமா?

கேரளாவைச் சேர்ந்த விஜயன் மற்றும் மோகனா

சரி... அப்படி என்ன இவர்கள் பெரிதாக சாதித்து விட்டார்கள் என்றால்? அந்த தம்பதி இணைந்து இதுவரை சுமார் 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கிறார்கள்.

ஏம்பா..இதெல்லாம் ஒரு சாதனையா?.. சுற்றுப்பயணம் செல்வதெல்லாம் ஜூஜுபி விசயம்... வேணும்னா ஆள்பவர்களிடம் கேட்டுப்பார் என நினைத்தால் அவர்கள் செய்தது நிச்சையம் சாதனையாக இருக்கக்கூடும். ஏனென்றால் அவர்கள் வெகு சாதாரணமானவர்கள். உலகைச் சுற்றும் கனவைத் தவிர வேறெந்த பின்புலத்தையும் கொண்டிராதவர்கள்.



கேரளாவின் கொச்சியில் இருக்கிறது பாலாஜி காபி ஹவுஸ். 40 வருட பழமையான அந்த கடையை விஜயன் மோகனா தம்பதி நடத்தி வருகின்றனர். அந்த கடை ஒன்றே அவர்களுக்கு ஆதாரமாக இருக்க அதில் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் ஒரு சிறு பகுதியினை அவர்கள் சேமித்து வைக்கின்றனர். அதனைக்கொண்டு கிடைக்கும் ஓய்வில் மிக எளிமையாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். பயணம் செய்யும் கனவு தனக்கு சிறுவயதில் ஏற்பட்டதாக கூறும் விஜயன் உங்களுடைய கனவுகளை நீங்கள் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லையென்றால் அதை நிறைவேற்றுவதில் என்ன பயன் என தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையான மோகனாவுடன் இணைந்து தனது கனவிற்கு உரமிட்டு வருகிறார். இதுவரை சுமார் 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ள அவர்கள் தங்களின் அடுத்த பயணத்திற்கான திட்டத்தையும் கைவசம் வைத்திருகின்றனர். அவர்கள் தற்போது அறுபது வயதை தாண்டினாலும்  தங்களால் அதனை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையும் வைத்துள்ளனர்.


Travel is the only thing you buy that makes your richer இதை யார் சொன்னார்கள் என தெரியவில்லை என்றாலும் அப்பட்டமான உண்மை. ஏனென்றால் பயணமும் அதன் மூலம் சேகரிக்கப்படும் அனுபவங்கள் மட்டுமே ஒருவனை பல்வேறு அம்சங்களில் பணக்காரனாக்குகின்றது. அவ்வாறு தங்களின் பயணங்களின் மூலம் செல்வந்தர்களாக உயர்ந்து நிற்கும் அந்த தம்பதியால் அவர்களின் பயணங்களை எவ்வாறு திட்டமிட முடிந்தது? அதற்கான உந்துசக்தி எது? என்பதையே இந்த டாகுமெண்டரி வடிவிலிருக்கும் குறும்படம் விளக்குகிறது.

உங்களுக்கும் ஊர் சுற்றும் கனவு இருந்தால், அது கனவாகவே இருந்தால், எங்கப்பா அதுக்கு நேரமும் பொருளாதாரமும் என சலித்துக்கொள்ளும் மனம் இருந்தால், கொஞ்சம் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்துவரும் இந்த சாதனை தம்பதியை சந்தியுங்களேன்.

📎
Invisible Wings
(A Tea Seller Who Travelled The World)
Directed by - Hari M Mohanan
Music by - Anil Johnson
Cinematography - Shyam Joseph
Country - India
Language - Malayalam
Year - 2015