தேசம் வீடுகளால் ஆனது.
📣 பி.ஆர்.ஜி. பசுமலை சுவாமிகள்
ஒருவர் முன்னால் எந்த நேரத்திலும் அவர் விரும்பும் கடவுள் தோன்றுவார். அவர் கடவுளைப் போல் இல்லை என்றோ, அவர் கடவுளைப் போல் நடந்து கொள்ளவில்லை என்றோ கூறி அவரைத் திருப்பி அனுப்பி விடக்கூடாது...
📣 ஃபரூக் ஃபர்ருக்ஸாதா
அன்பனே நீ என் வீடு வந்தால்
ஒரு விளக்கும் சிறு ஐன்னலும் கொண்டுவா;
மகிழ்ச்சித் தெருவின் நெரிசலை
நான் பார்க்க வேண்டும்..
📣 ஜங் ஹெங்
📣 லாங்ஃபெல்லோ
காலன் என்ற பெயர் கொண்ட ஒரு அறுவடைக்காரன் தன் கருக்கருவாளைக் கொண்டு
கவனமாக முற்றிய தானியங்களையும் நடுவே மலரும் மலர்களையும் ஒருங்கே அறுத்துப் போடுவான்.
📣 லூ சூன்
நண்டை சாப்பிடும் முதல் மனிதன் சிலந்தியையும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நண்டே அருமையான உணவு என்று முடிவுக்கு வருவான்.
📣 சூ சிகிங்
இயற்கை தன் கண்களைத் திறக்கும்போதே,
உங்கள் மகிழ்ச்சிக்கான புதிய வாசல்களையும் திறக்கிறது.
📣 டயான் ப்ரோகோவன்
சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள்
சொற்களின் அளவுக்கு முக்கியமானவை.
📣 ஜான் எல். எஸ்பொஸிட்டோ
ஒருவரின் பல்வேறு அம்சங்களில் ஒன்றை மட்டும் கட்டாயமாகத் தனியே பிரித்து வைப்பது அரசியல் தன்மை வாய்ந்த செயலாகும். பெரும்பான்மையான மக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திருப்பிவிட்டு, அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைப் பெரிதுபடுத்துவதன் மூலம் சில உலகத் தலைவர்கள் மிகவும் பயங்கரமான செயல்திட்டங்களை வகுக்க வகை செய்திருக்கிறார்கள்.
📣 பல்லவி அய்யர்
அரசாங்கம் நேர்மையாகவும் திறமையாகவும் வேலை செய்தால்தான் நமக்கெல்லாம் அதிர்ச்சி! ஊழலுக்கும் ஏமாற்று வேலைக்கும் நாம் அவ்வளவு தூரம் பழக்கப்பட்டு விட்டோம். ஜனநாயகமும் சுதந்திர மீடியாவும் சேர்ந்து சாதித்திருப்பது இதுதான். அவற்றால் ஊழலை ஒழிக்க முடியாவிட்டாலும், அதை யதார்த்தமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை நமக்குக் கொடுத்திருக்கின்றன.
📣 பெர்ன்ஹார்டு
நாம் விண்வெளியை வெற்றி கொள்வது பற்றிக் கனவு காண்கிறோம். நிலவை வெற்றி கொள்ள ஆயத்தமாகிவிட்டோம். நாம் நமது கோளை நடத்துவது போலவே பிற கோள்களையும் நடத்தப் போகிறோம் என்றால் நிலவு, செவ்வாய், வெள்ளி ஆகியவற்றை எல்லாம் பிழைக்க விட்டுவிடுவது நல்லது.
📣 ஜவர்ஹர்லால் நேரு
இந்தியா ஒரு பழைமையான ஓலைச்சுவடி. அதன் மீது வெங்காயத் தோல் போல அடுக்கடுக்காக எண்ணங்களும் கனவுகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இருந்தும் எந்த அடுக்காலும் அதற்கு முன் எழுதப்பட்டிருந்ததை முற்றிலுமாக மறைத்துவிட முடிந்ததில்லை.
📣 ஜீன் மெஸ்லியர்
உண்மையில் நான் என் ஆத்மாவைக் காண்பதில்லை. உடலை உணர்கிறேன். அறிகிறேன். உணர்வதும் சிந்திப்பதும் முடிவு செய்வதும் சுக துக்கங்களை அனுபவிப்பதும் என் உடலே. உடலின் செயல்கள் எல்லாம் உறுப்பின் காரியங்கள்.
📣 ஹெடிகர்
இரண்டு விலங்கினங்கள் சந்தித்துக் கொள்ளும் போது, எதிரியைப்போல நடந்து கொள்ளும் திறன் படைத்த விலங்கினமே உயர்ந்த தகுதிநிலை கொண்டதாக கருதப்படுகிறது. ஆகவே, சமுதாயத் தகுதிநிலை எப்பொழுதுமே ஒன்றுடன் ஒன்று போரிட்டு வெல்வதன் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை; சந்திக்கும் சூழலே போதுமானது.
📣 தொ. பரமசிவம்
இந்தியாவில் சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது. சாதியில்லாமல் ஒருவன் பிறப்பதுமில்லை, வாழ்வதுமில்லை. இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மனிதன் மதம்மாறத்தான் முடியும். சாதி மாற முடியாது.
வேறுவகையில் சொல்வதானால் மதத்தைவிட சாதி எனும் நிறுவனம் பல நூற்றாண்டுகள் மூத்தது. இந்த விண்வெளி யுகத்தில்கூட தனிமனிதன் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே தன் சாதியின் எல்லைகளை மீறி வாழ முடியும். "சாதியம் என்பது ஒரு கொடுமையான சமூக நெறி".
📣 ஹிட்லர்
பாமர ஜனங்களின் சமுதாய நிலைமையை அபிவிருத்தி செய்து தேசீய வழிகளில் அவர்களுக்கு கல்வியளிக்க வேண்டும். அப்படியானால்தான் தேசத்தின் கலாச்சார வாழ்க்கையில் சகலரும் பங்கு பெறுவதற்கு தகுந்தவாறு சமுதாய நிலைமையை அபிவிருத்தி செய்ய முடியும்.
📣 ஆல்பர்ட் ஸ்வைட்சர்
தானே உண்டாக்கிய சாத்தான்களை
மனிதனால் அடையாளம் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.
📣 மசானபு ஃபுகோகா
எதிலாவது புகுந்து அதை கெடுக்கும் குணமுடைய மனித இனம் ஒரு தவறை செய்து அதை சீராக்காமல் விட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. பாதிப்பான விளைவுகள் ஒன்றாய்ச்சேரும்போது, வரிந்து கட்டிக்கொண்டு அதைச் சரிசெய்ய முனைவதும் அதற்கு வழக்கமே. சரி செய்யும் முறைகள் வெற்றியளித்துவிட்டால், அது பெருமையுடன் தன் முதுகில் தட்டிக்கொடுத்துக் கொள்வதும் உண்டு. மக்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தன் வீட்டுக் கூரையை உடைத்து நொறுக்கிவிட்டு, மழைவரும்போது அது ஒழுகத் துவங்கியவுடன் அவசர அவசரமாக மேலேறி அதை சரிசெய்துவிட்டு ஒரு மாபெரும் தீர்வை தான் கண்டுவிட்டதாக குதுகலிப்பதற்கு இணையாக உள்ளது.
📣 ஜஹனாரா பேகம்
ஆக்ரா கோட்டைக்குள்ளிருந்து மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் இந்த வார்த்தைகளை எழுதும்போது நடுங்குகிறது. என்னுடைய ஆழ்ந்த எண்ணங்களை ரகசியமாகவே வைத்திருக்கிறேன். அப்படியில்லாமல் நான் எப்படி வாழ முடியும்? நான் ஒரு பெண் ஆயிற்றே? ஆனால் இங்கே இந்தத் தனிமை இரவில் என் துக்கங்களை மறதியிடம் பாட முடியும். மறதியிடம்தான் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல முடியும். என் கதையையும் என் துக்கத்தையும்.
📣 எமிலி டிக்கின்சன்
நெஞ்சே! நாம் அவனை மறந்துவிடுவோம்!
நீயும் நானும் - இன்றிரவோடு!
நீ அவன் கொடுத்த கதகதப்பை மறந்துவிடலாம் -
நான் அந்த உள்ளொளியை மறந்துவிடுவேன்!
நீ அதைச் செய்துமுடித்ததும், நான் பிரார்த்திப்பதெல்லாம்
நேராக முதலிலிருந்து துவங்கலாம் என்றுதான்!
சீக்கிரம்! ஏனென்றால் நீ தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
அவன் ஞாபகம் இருந்துகொண்டே இருக்கும்!
📣 அடால்பு ஹிட்லர்
சமுதாயத்தில் ஒருவருடைய அந்தஸ்தை அவரது சம்பளத்தைக் கொண்டு நிர்ணயிக்கும் வழக்கமும், சரீர உழைப்பு சம்பந்தமான வேலைகளை இழிவாகக் கருதும் வழக்கமும் ஒழிய வேண்டும். ஒருவருடைய சம்பளம் என்னவாயினும், அவரது அலுவல்களால் சமூகம் எவ்வளவு தூரம் பலனடைகிறதென்பதை ஆதாரமாகக் கொண்டே அவரது அந்தஸ்தை நிர்ணயிக்க வேண்டும். எந்த வேலையின் தன்மையையும் அதன் ஸ்தூல, சூக்ஷம பலனைக் கொண்டே அளவிட வேண்டும்.
📣 வால்டோர்
கடவுள் என்று யாரும் கிடையாது. ஆனால் இதை என் வேலைக்காரனிடம் கூறிவிடாதீர்கள். இரவோடு இரவாக அவன் என்னைக் கொன்றுவிடக்கூடும்.
📣 பிரான்சுவாஸ் சகன்
இவ்வுலகம் எல்லாவற்றையும் போலவே கற்பனையாலானது, சொல்லப்போனால் மற்றவையோடு ஒப்பிடும்போது மாற்றுக் குறைந்தது.
📣 தயாபாய்
பொதுவாழ்க்கையில் இறங்கிய ஒரு பெண் - அதிலும் குறிப்பாக ஒரு சாதாரண கிராமத்து இளம்பெண் எந்த அளவுக்கு அவளுக்கே அவளுக்கு மட்டுமானவள்? எத்தனை தூரம் மற்றவர்களுக்கானவள்?. இது ஏதோ பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை என்றோ, சித்தாந்த கேள்வி என்றோ நினைத்து இதற்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்க வேண்டாம். உங்களுடைய மதமோ, அரசியலோ, கல்விக் கூடமோ, பொது இடமோ, சாலையோ, பஸ் நிறுத்தமோ, இரயில்வே ஸ்டேஷனோ, சினிமா தியோட்டரோ, பொழுதுபோக்கிடமோ என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ...நீ எங்கே போகிறாய்?... என்னும் கேள்வி வெகு இயல்பாக அவள் மீது வீசப்படுகிறது.
📣 நாஞ்சில் நாடன்
படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல. போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையில் வால் நுழைத்துப் பல்லிளித்து ஓடும் நாட்டு நாய் போலும். பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு. கார்த்திகை மாதத்துக் கனவு என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்.
📣 மயாகோவன்ஸ்கி
அவர்கள் பாலூட்டிகளில் முற்றிலும் வேறுபட்ட இனம் என்பதை சர்வ சக்திமிகு கடவுள் மட்டுமே அறிவார்.
📣 எம். கோபாலகிருஷ்ணன்
இயற்கையுடான போர் என்பதே மனித வளர்ச்சியின் அடிப்படை. விஞ்ஞானத்தின் துணைகொண்டு இன்று ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்து நிற்கும்போதுகூட, இயற்கையின் முன்னெப்போதும் சந்திக்காத ஒரு முகத்தை எதிர்பாராத ஒரு நொடியில் எதிர்கொள்ளும்போது மனிதகுலம் நிலைகுலைந்துதான் போகிறது.
📣 ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா
நான் உண்மையிலேயே அலைகளுடன் பேசத் துவங்கி அவற்றிடமிருந்து பிம்பங்களை உருவாக்கிக் கொள்ளத் துவங்கும் வரை ஒரு கணமும் நில்லாமல் என் வீட்டின் பின்னால் உருண்டு கொண்டிருந்த கடல் எனக்கு மிகவும் நெருக்கமானது.
📣 பாலோ கொயலோ
மரணம் என்பது வாழ்வின் முடிவு அல்ல, மாறாக அது என்னுடைய சிறந்த தோழி என்பதை நான் உணர்ந்துள்ளேன். அவள் எப்போதும் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள். பனி படர்ந்த மலைகளைப் பார்த்தபடி நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதுகூட மரண தேவதை என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள்.
📣 சுப்ரமணிய பாரதி
தேசம் வீடுகளால் ஆனது. நீங்கள் உங்கள் இல்லத்தில் நீதியில்லாமலும், சமத்துவத்தை முழுமையாக அனுசரிக்காமலும் இருக்கும் வரை, அவற்றை உங்கள் பொதுவாழ்வில் காண முடியாது. ஏனெனில், பொதுவாழ்வின் அடிப்படை இல்வாழ்வுதான். வீட்டில் வில்லனாக இருக்கும் ஒருவர் ஒரு கவுன்சிலுக்குள் நுழைந்தவுடனோ, நீதிமன்றத்தில் நுழைந்தவுடனேயோ திடீரென ஞானியாக மாறிவிட மாட்டார்.
📣 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஏதாவது நகரும் வரை எதுவும் நடக்காது.
📣 ஹ்வான் ரமோன் ஹிமெனெஸ்
கோடு போட்ட தாள் உனக்குக் கொடுக்கப்பட்டால் வேறு திசையில் எழுது.
📣 போல் வாலெரி.
ஒரு உருவகத்தை நிரூபணமாகவும், பெரிய வார்த்தைகளின் பொழிவைப் பிரதான உண்மைகளின் ஊற்றாகவும், தன்னை ஒரு தீர்க்கதரிசியாகவும் கருதும் மடமை நம் எல்லோருக்குமே உடன்பிறந்த குணம்.
📣 செம்பேன் உஸ்மான்
மக்களால் உருவாக்கப்படும்போது மட்டுமே எந்த சட்டதிட்டமும் நீதியின்பாற்பட்டதாக இருக்கமுடியும்.