வினையான விளையாட்டு.
விளையாட்டு வினையாகிவிடும் என ஒரு பழமொழி சொல்வார்கள். அதன்படி பிறந்தநாள், திருவிழாக்கள், புத்தாண்டு, சுற்றுலா பயணங்கள் என சில கொண்டாட்ட தருணங்களில் விளையாட்டாக செய்யும் சில செயல்கள் பெரும் விபத்துகளாக மாறிவிடுவதுண்டு. அறிவுரைகளையும் ஆபத்து எச்சரிக்கைகளையும் வேப்பங்காய் பாகற்காயாக நினைக்கும் அலட்சிய போக்கே இதற்கு காரணமாக அமந்துவிடுகின்றன. இந்த குறும்படம் அத்தகைய ஒரு விளையாட்டு வினையாக மாறிய நிகழ்வை காட்டுகிறது.
இவார் மற்றும் போரிஸ் அவனது தோழி கேத் மூவரும் இணைந்து Road Trip என சொல்லக்கூடிய சாகச பயணத்தை தொடங்குகின்றனர். ஒரு காரை எடுத்துக்கொண்டு நகரத்தை விட்டு வெளியே செல்லும் அவர்கள் அந்த பயணத்தை பறவைபோல கொண்டாடித் தீர்க்கின்றனர். ஒரு நாள் இரவு விடுதி ஒன்றில் குடித்துவிட்டு நடைபோடும் அவர்கள் அங்கிருக்கு ஒரு பாலத்தை அடைகின்றனர். அங்கு வந்ததும் போரிஸுக்கு அந்த பாலத்திலிருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குதிக்கும் ஆசை ஏற்படுகிறது. உடனே அதை நிறைவேற்றிப் பார்க்க தனது உடைகளை களைந்துவிட்டு அவன் நிர்வாணமாகிறான். அதனை பார்க்கும் மற்ற இருவாரும் தங்களுடைய உடைகளை களைந்து மோரிஸுடன் இணைந்து ஆற்றில் குதிப்பதற்கு தயாராகின்றனர். ஒன்று இரண்டு மூன்று என எண்ணப்பட முடிவில் மோரிஸ் மட்டுமே ஆற்றில் குதிக்கிறான். மற்ற இருவரும் மேலே இருந்துகொண்டு அவனை கேலி செய்ய அப்போது தற்செயலாக அங்கு வரும் படகு ஒன்றில் சிக்கி மோரிஸ் பரிதாபமாக உயிரிழக்கிறான். ஓராண்டிற்கு பிறகு இவார் மற்றும் கேத் இருவரும் இணைந்து மீண்டும் அதேபோல் பயணத்தை தொடங்குகின்றனர். முன்பு மோரிசுடன் இணைந்து சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவர்கள் செல்கின்றனர். ஆனால் இந்தமுறை அவர்கள் முன்பிருந்த கொண்டாட்ட மனநிலையை கடந்து நினைவுகளை மட்டும் அசைபோட்டபடியே தொடர்கின்றனர். இறுதியில் இருவரும் முன்பு விபத்து நடந்த அந்த ஆற்றுப் பாலத்தை தெருங்குகின்றனர். இந்தமுறை கேத் தனது உடைகளை களைந்துவிட்டு மோரிஸ் செய்ததுபோல் ஆற்றில் குதிக்க தயாராகிறாள். இவாரும் அதற்கு உடன்பட இருவரும் ஆற்றில் குதிக்கின்றனர். அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதுதான் இந்த குறும்படத்தின் முடிவு.
திருப்பத்துடன் அமைந்த கதை, அக்கதைக்குள் பார்வையாளர்களை இழத்துச்சென்ற விதம், நேர்த்தியான ஒளிப்பதிவு, நண்பர்களாக நடித்த மூவரின் நடிப்பு இவைகளே இந்த குறும்படத்தை ரசிக்க வைக்கிறது. மேலும் இன்றைய யுக யுவன் யுவாதிகளின் வேப்பாங்காய் பாகற்காய் மனநிலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த குறும்படம் சுட்டிக்காட்டுகிறது.
Selvilla
Directed by - Bram Schouw
Written by - Marcel Roijaards
Music by - Rutger Reinders
Cinematography - Jasper Wolf
Year - 2012
Country - Netherlands
Language - Dutch
Directed by - Bram Schouw
Written by - Marcel Roijaards
Music by - Rutger Reinders
Cinematography - Jasper Wolf
Year - 2012
Country - Netherlands
Language - Dutch