Mysteries at the Museum - Travel Channel.

ரு நாட்டின் மரபுரிமைகளை பேணிக்காப்பதில் அருங்காட்சியகங்களின் பணி இன்றியமையாதது. அரிய பொருட்களை சேகரித்து வைக்கும் இடம் என்பதால் அது அருங்காட்சியகம். ஆங்கிலத்தில் மியூசியம் Museum என அழைக்கப்படும் இதனை அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை சுமந்து நிற்கும் காலப்பெட்டகம் என சொல்லலாம். தொடக்கத்தில் பழமையான பொருட்களை சேமிப்பதில் ஆர்வம் கொண்ட வசதி படைத்த சில தனிப்பட்டவர்களின் மூலமாகவும், சில குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் மூலமாகவும் அருங்காட்சியங்கள் கட்டமைக்கப்பட்டன. பிறகு அது எல்லோருக்கும் பொதுவென மாற்றமடைந்து, நுண்கலைகள், பயன்படு கலைகள், தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாடு, தொழில்நுட்பம், இயற்கை, நாணயவியல், தாவரவியல், விலங்கியல் என தனித்தனி துறைகளுக்கு இன்று உலகமெங்கும் பல அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அத்தகைய அருங்காட்சியகங்களில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களே. மேலும் அத்தகைய பொக்கிஷங்களுக்கு பின்னால் அசாதாரண மர்மமான வரலாறும் ஒளிந்திருக்கக்கூடும்.  அவ்வாறு உலகில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கும் சில பொருட்களின் வரலாற்றையும் அதன் ஆதிமூலத்தையும் தேடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் Mysteries at the Museum



டிஸ்கவரி நிறுவனத்திற்கு சொந்தமான டிராவல் சேனலில் (Travel®) 2010 வருடம் தொடங்கி 2018 வருடம் வரை மொத்தம் 21 சீசன்களில் 278 எபிசோடுகள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. இந்த நிகழ்ச்சியை டான் வைல்ட்மேன் (Don Wildman) என்பவர் தொகுத்து வழங்கினார். வரலாற்று பேராசிரியரான இவரே இந்த நிகழ்ச்சியின் சூத்திரதாரி ஆவார். டான் வைல்ட்மேன், புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்திலிருப்பது யார்? என்ற தேடலை முதன்முதலாக தொடங்கி, உலகின் அருங்காட்சியங்களில் இருக்கும் பொருட்களின் மர்மமான புதிர்களை அலசி ஆராய்ந்து, வரலாற்று பிரியர்கள் மட்டுமல்லாமல் சாதாரணமானவர்களும் ரசிக்கும்படி, ஒரு மணிநேரம் சஸ்பென்ஸ் நிறைந்த விறுவிறுப்பு குறையாத திரைப்படங்களை பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சியை அமைத்திருந்தார். மிக நீண்ட தொடராக ஒளிபரப்பப்பட்டு பலரது பாராட்டுகளை வென்ற இந்நிகழ்ச்சி தற்போது முடிவு பெற்றாலும் சில நேரங்களில் அவ்வபோது சிறப்பு காட்சிகளாக அதே டிராவல் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. எப்போதாவது ரிமோட் மாற்றுகையில் காணக் கிடைத்தால் நிச்சையம் தவறவிடாதீர்கள்.


இந்த நிகழ்ச்சி ஒவ்வொன்றும் பல தேடுதல் மற்றும் ஆய்வுகளுக்கு உட்பட்ட ஆவணங்களைக் கொண்டது. DVD வடிவிலும், அமேசான் பிரைமிலும், யு டியூபிலும் காணக்கிடைக்கிறது. பள்ளி கால்லூரி மாணவ மாணவிகளுக்கு வரலாற்றை எளிமையாக போதிக்க இது பெரிதும் உதவக்கூடும்.

 நிகழ்ச்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 

Click Here