ஸ்டிரீட் போட்டோகிராஃபி.
புகைப்படக்கலையில் ஸ்டிரீட் போட்டோகிராஃபி என்ற வகை இருக்கிறது. அதாவது புகைப்படம் எடுப்பதற்கு முன்பாக லொக்கேஷன் சுச்சுவேஷன் பேக்ரவுண்டு லைட்டிங் வானிலை அறிக்கை வெப்பச்சலனம் ராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்து, சீவி சிங்காரித்து பட்டி டிங்கரிங் செய்து smile please முகமாக ஸ்டைலாக நின்று அல்லது விரலை சார் ரெண்டுக்கு போறேன் என சொல்லும் மூனாப்பு பையன் மாதிரி கையை காட்டி போஸ் கொடுத்து, செயற்கையாக அமைதியாக புகைப்படம் எடுப்பதை போலில்லாமல் தெருவில் காண்பதை அல்லது சில நிமிடங்களில் கடந்துபோவதை அப்படியே அதனில் கிளிக்குவதையே ஸ்டிரீட் போட்டோகிராஃபி அல்லது கேன்டிட் போட்டோகிராஃபி என்கின்றனர். இதன் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் ஜாக்ஸ் மன்டே டாகெர் என்பவர் 1838-39 ஆண்டு வாக்கில் தன்னுடைய ஸ்டுடியோவின் சன்னலிலிருந்து நகர தெருவை புகைப்படமாக பதிவு செய்திருக்கிறார். சரி..விசயத்திற்கு வருவோம். அடியேனுக்கு புகைப்பட கலையில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அந்த கொஞ்சத்தை கொண்டு கையிலிருக்கும் மொபைல் போனில் கருப்பு வெள்ளையாக கிளிக்கிய ஸ்டிரீட் போட்டோகிராஃபி வகை புகைப்படங்கள் சில..!