1:40 - 100 செகண்ட் குறும்படங்கள்.


கி.மு 500 ஆம் ஆண்டுவாக்கில் சீனாவைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவருக்கு இருட்டு அறையில் சுவருக்கு எதிர்பக்கத்திலிருந்த மற்றொரு சுவரின் துவாரத்தின் வழியாக அந்த அறைக்கு வெளியே உள்ள காட்சிகள் தலைகீழ் பிம்பங்களாக தெரிந்தது. அதற்கு பின் தி கிரேட் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடிலும் இதே முறையில் கிரகணம் ஒன்றை பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறார். ஒளியியலின் இந்த மாயாஜாலத்தை என்னவென்று தெரியாது பலரும் உணர, கி.பி1000 ஆண்டில் அல்ஹசென் என்பவர் மேற்கண்ட காட்சி ஒளியியல் தோற்றப்பாடு என அதனை விளக்கி கட்டுரை எழுதினார். அதனைக் கொண்டு பிறகு வந்தவர்கள் பல சாதனங்களை உருவாக்க இன்றைய புகைப்படக்கலைக்கும் சினிமாவிற்கும் அந்த தோற்றப்பாடே அடிப்படையாக அமைந்தது.


அந்த அடிப்படையில் ஆரம்பகாலகட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஸ்லைடு ஷோ என சொல்லக்கூடிய வடிவில் இருந்தது. பிறகு அது நகர ஒரு ரீல் என்ற 25 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படங்கள் சினிமா உலகை ஆட்சி செய்தது. இந்த ஒரு ரீல் திரைப்படங்களும் தொழில்நுட்பமும் நீளம் எடுக்க இன்று சினிமா வேறொரு பரிணாமம் பெற்றிருக்கிறது. இருந்த போதிலும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பச் செல்கிறோம் என்பதைப்போல ஆரம்பகால ஒரு ரீல் திரைப்படங்களைப் போன்று தற்போது எடுக்கப்படும் குறும்படங்கள் முழு நீள திரைப்படங்களை விஞ்சும் அளவிற்கு இருக்கின்றன. அதிலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் காட்சிகளாகவோ அல்லது பழைய ஸ்லைடு ஷோ வடிவிலோ எடுக்கப்படும் குறும்படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அவ்வாறு சொல்ல வந்த கருத்தை மிக எளிமையாகவும், விரைவாகவும், ஒரு கலையாகவும் எடுக்கப்பட்ட அடியேன் ரசித்த 1.40 நிமிடம் நீளமுள்ள சில குறும்படங்கள் சிலவற்றை சினிமாவின் குட்டி வரலாற்றுடன் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். ஒவ்வொன்றையும் காண 100 செகண்ட் ஒதுக்குங்களேன்.