அதுபோல.



த்தல ஞாயிற்றுக்கிழமை தூங்கி ஏன்டா திங்கள்கிழமை விடியும் போது எழலாமா வேண்டாமா என புரள்கையில் வருமே தூக்கம் அதுபோல.

ருசி கைப்பக்குவத்தில் வயிறும் கழுத்தும் புடைக்க தின்று மென்று சேமித்து செரிக்க நெளியும் போது பலகாரம் பாக்கியிருக்கு என நீட்டுகையில் ஏற்படுமே மிதப்பு அதுபோல. 

போராட்டமோ கலவரமோ அல்லது பெருந்தலை சாய்ந்த இறங்கலோ தடை உத்தரவில் பெரு நகரத்தில் பசித்த தெருநாய் போல அலையும் போது தோன்றுமே மயான அமைதி அதுபோல,

பயண காத்திருப்பு சுடிதார்,
முன் இருக்கை குழந்தை,
மதிய கடற்கரை,
மஞ்சள் வெயில் கிரிக்கெட்,
புது புத்தகத்தின் முதல் பக்கம்,
மாத கடைசி பட்ஜெட் சிகரெட்,
மனைவி ஊரில் இல்லாத ரெண்டு பெக் எக்ஸ்ட்ரா,
தள்ளுவண்டிக்கடை ஆஃப்பாயில்

- அதுபோல


அதே மெட்டு, அதே வரிகள், அதே படுக்கயறை, அதே 10 லட்சம் பார்வைகளுடன் என்னடா! பாட்டு இது? என சலித்து குரங்குமர மனதோடு சேனல் தாவுகையில் எப்போதாவது காட்சிக்கு வரும் இந்த பாடல்களும் இனிமையானதே.

பாடல்களைக் காண: