உயரம்.




வங்களா?...இவங்க எவரெஸ்ட் சிகரத்தின் பக்கத்திலிருக்கும் 23000 அடி உயரம் கொண்ட லக்பா ரி என்ற மலையின் ஒரு பகுதியின் மேல் ஏறி சாதனை படைக்கப் போறாங்களா?... இவங்களால பக்கத்து தெருவுல இருக்க பெட்டிக் கடைக்கு போய் ஒரு பர்பி கூட வாங்கிட்டு ஒழுங்கா திரும்பி வரத்தெரியாது... என ஊரார்கள் அந்த ஐந்து பேரையும் ஏளனமாக பார்த்தார்கள். தங்களை அவர்கள் இப்படி பார்ப்பதை பொருட்படுத்தாது திபெத்தை சேர்ந்த அந்த ஐவரும் கடும் முயற்சிக்குப் பின் அந்த சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.


எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நோர்கே இவர்களுக்குப் பின் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேறும் பலருக்கு சாத்தியமான ஒன்றாகிப் போனது உண்மைதான். அதிலும் இமய மலைக்கு கீழே திபெத்தில் இருப்பவர்களால் அங்குள்ள சிகரங்களில் எளிதில் ஏறி ஐஸ் பாய் அல்லது ஐஸ் கேர்ள் என தொட்டுவிட்டு வர முடியும். இருந்தும் அந்த ஐவரின் சாதனையை உலகமே கொண்டாடியது. அதற்கு காரணமும் இருந்தது. அந்த ஐவரும் ஓட்டுப்போட  வாக்கு சாவடிக்கும் வயதிற்கும் வராத சிறார்கள். அதுமட்டுமல்லாது அவர்கள் பிறவியிலேயே கண்பார்வை அற்றவர்கள். 

திபெத்தில் கண்பார்வையற்று பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் சாத்தானின் குழந்தைகள் என்ற நம்பிக்கை இன்றும் அங்கு நிலவுகிறது. முந்தைய பிறவியிலோ எந்தைய பிறவியிலோ செய்த பாவத்தின் பலனே அவ்வாறு பிறக்க காரணம் என கருதப்பட்டு அவர்களை ஒதுக்கி வைக்கும் அவலமும் அங்கு தொடர்கிறது. ஜெர்மனியை சேர்ந்த சமூக ஆர்வலரான சப்ரி டென்பெர்கன் என்பவர் அவ்வாறு ஒதுக்கப்பட்ட பார்வையற்றவர்களை அரவணைத்து அவர்களுக்கென புது ஒளியை காட்டி வருகிறார். அவரது பள்ளியில் பயின்ற அந்த ஐவரும்தான் இந்த சாதனையை செய்து முடித்தனர். 

டாஷி பாசங், டென்ஜின், டச்சுங், கீன்சன், சோனம் பூம்ட்சோ என்ற பெயர் கொண்ட பார்வையற்ற அந்த ஐவருக்கும் மலையேறும் ஆசையும் சிகரத்தை தொடும் கனவு இருந்தது. அந்த கனவை அவர்கள் சப்ரி டென்பெர்கனிடம் தெரிவிக்க அதற்கான முயற்சியில் அவர் இறங்கினார். அதற்கென அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பார்வையற்றவரான எரிக் வேயன்மயர் என்பவரை அனுகினார். எரிக்கின் உதவியுடன் அந்த ஐவருக்கும் இரண்டு வருடகால பயிற்சி அளிக்கப்பட்டது. கடைசியில் 2006 ஆம் ஆண்டு எரிக்குடன் சேர்ந்து அந்த ஐவரும் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். மேலும் அதுவரை திபெத் மக்களிடம் நிலவிய நம்பிக்கையும் குருடாக்கினர். இந்த டாகுமெண்டரி திரைப்படம் அந்த ஐவர் மேற்கொண்ட பயிற்சியினையும் சிகரத்தை அடைந்த பயண நிமிடங்களையும் அவர்களின் சாதனையையும் விவரிக்கிறது. இந்த டாகுமெண்டரி அட்வெஞ்சர் என சொல்லக்கூடிய சாகச பயணத்தை கொண்டதாக மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கிறது.  
 Trailer
📎
  • Blindsight
  • Directed by - Lucy Walker
  • Music by - David Christophere, Nitin Sawhney.
  • Cinematography - Michael Brown, Petr Cikhart, Keith Partridge,  Gavin Struthers, Mahyad Tousi, Lucy Walker
  • Country - United Kingdom
  • Language - English
  • Year - 2006.

டாகுமெண்டரியை காண