மில்லியன் டாலர் பரிசு.



வேட்டையாடுதல் ஒரு குற்றச் செயல். உலகமெங்கும் அது தடை செய்யப்பட்டிருந்தாலும்  பொழுதுபோக்கிற்காகவும், ஆடம்பர அழகு அலங்கார பிரியத்திற்காகவும், இன்னபிற கிளர்ச்சி எழுச்சியூட்டும்  லேகிய வஸ்துவிற்காகவும், நம்பிக்கை சாஸ்திர சம்பிரதாய சாம்பிராணிக்காகவும் வன உயிர்களின் இதயத்தை குறிவைப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயிர் வாழ வேட்டையாடுதல் என்பது மறைந்து அது ஒரு விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் செல்வம் கொழிக்கும் தொழிலாகவும் மாறியிருக்கிறது. 1970 ஆம் வருடம் தொடங்கி இன்றுவரை 60 சதவீத வன உயிர்கள் இதே நோக்கத்திற்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன. இந்த டாகுமெண்டரி திரைப்படம் ஆப்பிரிக்க காடுகளில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் அத்தகைய வேட்டையாடுதலை பற்றியும் அவற்றிற்கு பின்னணியில் இருக்கும் மில்லியன் டாலர் வர்த்தகத்தை பற்றியும் அலசி ஆராய்கிறது.


இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் காரணத்தோடு வேட்டையாடப்படும் சிங்கங்கள், கொம்புகளுக்காக சீவப்படும் யானைகள்  காண்டாமிருகங்கள், தோலுக்காக துழைக்கப்படும் காட்டு எருமைகள் முதலைகள் இவைகளின் பரிதாப நிலையோடு, அதனை வேட்டையாடுபவர்கள் மற்றும் வன ஆர்வளர்களின் வாழ்வியல் நேர்காணலோடு இந்த டாகுமெண்டரி திரைப்படம் பயணிக்கிறது. மேலும் வேட்டை விலங்குகளுக்காக அதிகாரப்பூர்வமாக செயல்படும் ஏலச் சந்தையின் வர்த்தக வெளிச்சத்தையும்,அதற்கு பின்னால் இருக்கும் கழுகு பார்வையும், வன உயிர்களுக்கு ஆதரவாக நிகழும் கருப்பு போராட்டத்தையும் இந்த டாகுமெண்டரி காட்டுகிறது. Hunting is not a sport. In sport both sides should know they're i the game என்பதை இது உணர்த்தவும் தவறவில்லை.
Trailer

📎

  • Trophy
  • Directed by - Christina Clusiau, Shaul Schwarz
  • Music - Danny Bensi, Saunder Jurriaans, Eric Lee, Jeremy Turner
  • Cinematography - Christina Clusiau, Shaul Schwarz
  • Country - UK
  • Language - English
  • Year - 2017

தனிப்பட்ட பக்கங்களைக் காண
Click Here ➦