Lampa cu caciula - தொலைக்காட்சி.


ரு சிறு அறையில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவிற்கான அகலம். ஒரு ஆள் கனத்திற்கான எடை. உடல் முழுவதும் மறைக்கப்பட்ட பெட்டி. அந்த பெட்டியை திறந்து மூட வழி. அந்த வழியை பாதுகாக்க பூட்டும் துவாரம் இவற்றைக் கொண்ட தொலைக்காட்சி சாதனத்தை 90 -களில் பிறந்தவர்களால் எளிதில் மறக்கவே இயலாது. தேவதையின் பரிசாக கருதப்பட்ட தொலைக்காட்சியும், அதனை பார்க்கும் தருணங்களும் வரமாக இருந்த அக்காலத்தில் வெயில் மழை குளிரென எக்காலத்திலும் அதில் ஏற்படும் பழுதுகளும் அதனை சரிசெய்ய தூக்கி சுமந்த நினைவுகளும் கூட 90-களில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.


ருமேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஃப்ளோரின் லாசரேஸ்கு என்பவரின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் அந்த அழகான நினைவுகளை ஒரு தந்தை மற்றும் அவரது மகனின் மூலமாக, அவர்கள் வீட்டில் உள்ள பழுதடைந்த ஒரு தொலைக்காட்சியின் வாயிலாக அதனை சரிசெய்வதற்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு சென்று திரும்பிய பயணத்தின் வழியாக, ருமேனியா நாட்டின் கிராமப்புர எதார்த்தத்தில் ஆர்ப்பாட்டமில்லாத வண்ணமயமான வாழ்க்கையோடு அசைபோட வைக்கிறது. 



 📎
  • Lampa cu caciula
  • Directed by - Radu Jude
  • Written by - Florin Lazarescu
  • Cinematography - Marius Panduru
  • Country - Rumania
  • Year - 2007
  • Language - Romanian