தேவை எனப்.

ரான்ல புதுப்படம் என்ன ரிலீஸ் ஆயிருக்கு? ... அந்த கொரியன் படம் நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்களே! ... சீனா பட்டாசை தவிர்க்கலாம் ஆனால் அந்த சீனா படத்தை பார்த்தே ஆகனும்... டானிஷ் படம் ஒன்னு டவுண்லோடு பண்ணனும்... இத்தகைய தேடல்களை தவிர்த்து அந்த படம் எந்த தியோட்டரில் ஓடுது என பாப்கார்ன் ஐஸ்கிரீம் சகிதம் பெரிய திரையை நோக்கி இழுத்த சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களை பாராட்டியே ஆக வேண்டும். சமூகமும் அதனுடன் கூடிய அக்கரையும், ரத்தமும் குரூரமும், காதலும் அதன் நினைவுகளும் என வெவ்வேறு வகையில் இருளும் வெளிச்சம் நிறைந்த மனிதனின் மன ஓட்டத்தை சார்ந்து வெளிவந்த அத்தகைய திரைப்படங்களே ஆரோக்கிய தேவை எனப்படுகிறது. குறிப்பிட்ட ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற விபச்சார நோக்கில் வளைந்து கொடுக்காத இத்தகைய திரைப்படங்கள் மேலும் மேலும் தொடர வேண்டும் என்ற ஆசையும் எழுகிறது.



சரி! விசயத்திற்கு வருவோம்.

சமீபத்தில் வெளிவந்த சில தமிழ் திரைப்படங்கள் இந்த பாராட்டிற்கு தகுதிபெற அவற்றுள் இடம்பெற்ற பாடல்களும் ரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது. அந்த பாடல்களும் மனிதனின் மன ஓட்டத்தை பிரதிபலிக்க அதுவே தேவை எனவும், பிடித்த பாடல்களின் பட்டியலில் சேமித்து வைத்து அசைபோட சேர்த்துக்கொள்ளவும் தோன்றுகிறது.

அந்த பாடல்கள்