பதினான்காவது அறை.




ச்சங்களின் அழகை அதன் அகம் புகுந்து கண்டறிந்த ஒரே திரைப்படக் கலைஞர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக். In films murders are always very clean. I show how difficult it is and what a messy thing it is to kill a man என கருப்பு வெள்ளை காலத்தில் திரைப்படங்களில் மர்மக் கதைகளை புகுத்திய பெருமையும் இவரையே சாரும். இவர் இயக்கிய Psyco, Rear Window, Vertigo, Rebecca, Notorious, Strangers on a Train, Dial a Murder, Shadow of Doubt, போன்ற பல திரைப்படங்கள் உலக புகழ்பெற அந்த திரைப்படங்களில் ஹிட்ச்காக் ஒரு இடத்தில் ஒரு நிமிடமாவது தோன்றுவதை பிரத்தியேகமாக வைத்திருந்தார். அதுபோல சிறு பெரு எழுத்தாளர்களின் அச்சம் நிறைந்த மர்ம கதைகளை தேர்தெடுத்து கலை நோக்கத்தில் அதனை வெளியிடவும் செய்தார். ஹிட்ச்காக் தொகுத்த துப்பரியும் மர்ம கதைகள் அவரது திரைப்படங்களைப் போலவே வாசகர்களை கொள்ளையடித்து உலகமெங்கும் புகழ்பெற, அத்தகைய கதைகளில் சிலவற்றின் சிறு தொகுப்புதான் இந்த புத்தகம் பதினான்காவது அறை. 

1. நேரடி காட்சி - ப்ளெச்சர் ப்ளோரா
2. பதினான்காவது அறை - தல்மக் பவ்வல்
3. கறுப்புத் தொப்பி - மேரி. இ. நட்
4. வங்கிக் கொள்ளை - ரிச்சாட் டெமிங்
5. கால எந்திரம் - ஜாக் ரிச்சி
6. விலங்கு பயிற்சியாளர் - ஜான் லூத்ஸ்
7. மரண மணி - ராபர்ட் கோல்வி

- என இந்த புத்தகத்தில் இருக்கும் ஏழு கதைகளும் உள்ளும் புறமும் ஒரே மாதிரியாகவும், யதார்தமும் யதார்தமற்றதுவுமாக இருக்கின்றன. மனிதனின் உளவியல் சார்ந்த உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், வேகம், இயல்பு, ஆளுமை, நடத்தை இவற்றை அடிப்படையாகக் கொண்டு Psychological thriller என சொல்லக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. அவையனைத்தும் வாசிப்பவர்களை மர்மங்கள் நிறைந்த வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை தர, அச்சங்களின் அழகை வெகு அருகில் காண இந்த கதைகளை தவறவிடாதீகள். 

பதினான்காவது அறை
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் தொகுத்த மர்ம கதைகள்
தமிழில் - யூமா வாசுகி
நற்றிணை பதிப்பகம்
விலை - ₹ 120