Sandekala - பயம்.


பேய் இருக்கா? இல்லையா? ஆவி பிசாசு காட்டேரி குட்டிச் சாத்தான் மோகினி இதெல்லாம் உண்மையா? பொய்யா?. இந்த கேள்வியும் அதோடு தொடர்புடைய அச்சமும் அறிவியல் வளர்ச்சியில் அபரிவிதமாக முன்னேறிய நவீன யுகத்திலும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதனின் இயல்புகள் உணர்சிகள் இவற்றோடு உளவியல் சார்ந்த உள்ளார்ந்த போக்கே இந்த பயத்தை தோற்றுவிக்கின்றன. Personification என சொல்லக்கூடிய இயற்கை, வானிலை மற்றும் விலங்குகளின் மீது குகைவாசி மனிதன் கொண்டிருந்த பயத்திற்கு பிறகு தோன்றிய Anthropomorphism என்ற கற்பனை பயத்தை இன்றைய ஜீன்கள் வரை கடத்திய பெருமை உலகில் இருக்கும் மதங்களையே சாரும். அதன்படி தீய சக்தியாகவும் பாவங்களின் மூட்டையாகவும் தெய்வமாகவும் பார்க்கப்படும் இந்த பேய் பிசாசுகளை பற்றிய கதைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை அடிப்படையாக வைத்து Horror என சொல்லக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட குறும்படங்களும் தாராளமாக இருக்கின்றன. அதில் வெகு இயல்பாக எடுக்கப்பட்ட ஒரு குறும்படம்தான் Sandekala.


இந்த குறும்படத்தில் பெரிதாக கதை ஒன்றுமில்லை. ஒரு பெண் தன் மகளுடன் சந்தையிலிருந்து சாமான்களை வாங்கிக் கொண்டு  வீட்டை நோக்கி இரவில் நடக்கத் தொடங்குகிறாள். முன்பே பார்த்த மனிதனின் அந்த பேய் பிசாசு பயமும் அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்குகிறது. அந்த பயத்தில் ஒரு பாடலை பாடிக்கொண்டே நடக்கும் அவள் தனது வீட்டிற்கு செல்லும் வழியை மறந்து தெருவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியாக அலைகிறாள். அவளது பயம் மேலும் மேலும் அதிகரிக்க அவளும் அவளது மகளும் வீட்டை அடைந்தார்களா? என்பதுதான்  இந்த குறும்படத்தின் பயமுறுத்தும் மீதிக்கதை.


📎
  • SANDEKALA
  • Written & Directed by - Amiry Ramadhan
  • Cinematography - Gerry Fairur Irsan
  • Art - Ahmad Mbah Zulkarnaen
  • Music & Sound - Jebal Tarikh, Boyjam Jamica
  • Year - 2015
  • Country - Indonesia.