Check Mate - மரணத்துடன் ஒரு விளையாட்டு.

முந்தைய பிறவியின் கர்ம பலனே வாழ்க்கை. ஒரு உயிர் எத்தகையது என்பதை தெரிந்து கொள்ளவே இறைவன் அதனை படைத்து அதற்கு வாழ்வளித்ததாக எல்லா மதங்களாலும் நம்பப்படுகின்றன. மதத்தையும் தாண்டி இயல்பாகச் சொன்னால் மரணத்தோடு விளையாடும் சதுரங்க விளையாட்டே வாழ்க்கை. ஒரு உயிர் பிறக்கும் போதே இந்த சதுரங்க விளையாட்டை தொடங்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் வெட்டி வீழ்த்துவதற்கான காய்களை மரணம் நகர்த்திக் கொண்டேயிருக்க, உயிர் அந்த நகர்த்தலிலிருந்து தப்பித்து தன் விளையாட்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் வெல்ல முடியாத மரணத்துடன் அது தோற்றுப் போகிறது. வெகு எளிமையான இந்த வாழ்க்கை புரிதலை மிக அழகாக உணர்த்துகிறது இந்த குறும்படம்.


ஒரு அழகிய கிராமத்தில் தபால்காரர் ஒருவர் உடல்நலம் குண்றிய தன் மனைவியுடன் வசித்து வருகிறார். தன் வாழ்நாள் முழுவதும் Workaholic என சொல்லப்படும் வேலையே கண்ணாக இருக்கும் அவருக்கு முன் ஒருநாள் மரணம் தோன்றுகிறது. இன்றுடன் உனது விளையாட்டு முடியப்போகிறது என்ற நோக்கில் இறுதிக்கட்ட காய்களை அது நகர்த்துகிறது. மரணம் வெற்றி பெற காத்திருக்கும் வேளையில் கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தை அந்த தபால்காரருக்கு வழங்குகிறது. அதாவது மரணத்திற்கு முன்பு உடல்நலம் குன்றிய அவரது மனைவியை சந்திக்கும் வாய்ப்பு அல்லது இரண்டு கடிதங்களை தகுந்தவர்களிடம் ஒப்படைக்கும் வேலை இவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அந்த தபால்காரருக்கு அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த தபால்காரர் மரணத்தோடு விளையாடும் சதுரங்க விளையாட்டிலிருந்து தப்பித்தாரா? அல்லது வீழ்ந்தாரா? என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை.


📎

  • Directed by - Sanjiban Nath
  • Music by - Debasish Banik
  • Cinematography - Shahbaaz Ashraf
  • Country - India
  • Language - Bengali
  • Year - 2015.